அட்சய திருதியையில் கை பிடி உப்பு வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும் தெரியுமா

Atchaya thiruthiyai

இன்று அட்சய திருதியை நாள் புதன்கிழமையில் அமோகமாக பிறந்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் 12 மணி வரை அட்சய திருதியை பூஜையை நாம் செய்யலாம். இன்றைய தினத்தில் நாம் எதை வாங்குவது நல்லது. எதை எல்லாம் தானம் செய்வது நல்லது என்பது பற்றி இங்கு பார்ப்போம் வாருங்கள்.

gold

அட்சய திருதியை என்றாலே நகை கடைகளில் கூட்டம் அமோகமாக இருக்கும். இன்று நகை வாங்கினால் அதிக நகை சேரும் என்று நினைத்து பலர் இன்று நகை வாங்க நினைப்பது வழக்கம். ஆனால் உண்மை யாதெனில் இன்று நகையை தானமாக செய்தால் தான் அதிஷ்டம் வந்து சேரும். ஒரு குண்டு மணி நகையேனும் ஏழைகளுக்கு அட்சய திருதியை நாளில் தானம் செய்தால் அமோகமான அதிஷ்டம் பிறக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

அட்சய திருதியை நாளில் நாம் ஒரு கைப்பிடி உப்பை வாங்கி வைத்து வழிபட்டால் நமது வீட்டில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். இன்றைய தினத்தில் ஒரு உப்பு பாக்கெட்டை வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டு அதன் பிறகு பூஜையை துவங்க வேண்டும். இறைவனுக்கு தீப தூபம் காட்டுகையில் உப்பிற்கும் காட்ட வேண்டும். அதன் பிறகு அந்த உப்பை எடுத்து உப்பு டப்பாவில் கொட்டி அதை பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் லட்சுமி தேவியின் அருள் நமக்கு கிடைக்கும்.

salt

உப்பு வழிபாட்டை இன்று செய்வதன் மூலம் நமது கடன் சுமைகள் விரைவில் நீங்கும். வீட்டில் பண வரவு அதிகரிக்கும். அட்சய திருதியை நாளில் தானம் செய்வது நமக்கு அமோக பலனை தரும். நாம் பெரிய அளவில் தானம் செய்யவில்லை என்றாலும், வெயிலில் வாடும் ஏழைகளுக்கு ஒரு டம்ளர் மோர் கொடுத்தால் கூட இன்று நமக்கு அது அதிக அளவிலான புண்ணியத்தை சேர்க்கும். உணவில்லாதவர்களுக்கு உணவளிப்பது, போர்வை, துண்டு போன்றவற்றை இன்று ஏழைகளுக்கு தானம் செய்வது நல்லது.

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:

இதையும் படிக்கலாமே:
அட்சய திருதியை நாளில் கூற வேண்டிய ஐஸ்வர்ய லட்சுமி மந்திரம்

English Overview:
we have described about the purpose of salt on akshaya tritiya in Tamil. Instead of buying gold just buy a packet of salt and made some puja for the salt and use it. It will create a magic in life.