அத்தி வரதர் தரிசனம் நீட்டிக்கப்படுமா? – அமைச்சரின் பதில் இதோ

kanchipuram

முற்காலத்தில் அத்திவரதர் வைபவம் என்பது தமிழ்நாட்டு பக்தர்கள் அதிலும் குறிப்பாக காஞ்சிபுரம், சென்னை நகர மக்கள் மட்டுமே அறிந்த ஒரு கோவில் விழாவாக இருந்தது. ஆனால் தற்போது தகவல் தொடர்பு வளர்ச்சியால் அற்புதமான இந்த அத்திவரதர் வைபவத்தை இந்திய நாடெங்கிலும் உள்ள ஆன்மீக அன்பர்கள் அறிந்து கொள்ளுமாறு செய்ததோடு, அவர்கள் அனைவரும் புனித பூமியான காஞ்சிபுரத்தில் ஒரு மண்டலமான 48 நாட்கள் மட்டுமே காட்சி தரும் இந்த அத்தி வரதராஜ பெருமாளை தரிசிக்க ஆயிரக்கணக்கில் தினந்தோறும் காஞ்சிபுரம் நகரம் வந்த வண்ணம் உள்ளனர். நாளையுடன் அத்தி வரதர் தரிசனம் நிறைவு பெறுகிறது அது குறித்த ஒரு முக்கிய தகவலை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Athi-Varadar-Kanchi

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 31 வரை சயன கோலத்தில் பக்தர்களுக்கு அத்திவரதர் தரிசனம் தந்தார். முதல் 31 நாட்கள் பக்தர்கள் அத்திவரதரை சயன கோலத்தில் தரிசனம் செய்தனர். பின்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் அத்தி வரதர் தரிசனம் செய்தனர். பல பக்தர்கள் சயன கோலம், நின்ற கோலம் என இரண்டு தரிசனங்களையும் மேற்கொண்டனர்.

நின்ற நிலை அத்தி வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து நின்ற நிலையில் அத்தி வரதரை கண்குளிர தரிசனம் செய்தனர். அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு கிடைத்த கடைசி வாய்ப்பு என்பதை கருதி இதுவரை அத்தி வரதர் தரிசனம் செய்யாதவர்கள் இன்று காலை முதல் வரதராஜ பெருமாள் கோயிலில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யவும் தயாராக வந்துள்ளனர். இதனால் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

varadharaja perumal

இந்த அற்புத தரிசனத்தை இன்னும் காணாத முதியவர்கள் உட்பட பலர் இருப்பதால், அவர்களும் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு வசதியாக மேலும் 48 தினங்கள் அத்தி வரதர் வைபவம் நீட்டிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அத்தி வரதர் வைபவம் குறித்து முடிவெடுக்கும் உரிமை தமிழக அரசிற்கு தான் உண்டு என்றும், அந்த வைபவத்தை மேலும் நீட்டிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

- Advertisement -

இது குறித்து செய்தியாளர்கள் தமிழக அறநிலையத் துறை அமைச்சரிடம் கேட்டபோது அத்தி வரதர் வைபவம் இத்தனை ஆண்டு காலம் எவ்வாறு ஆகம விதிப்படி நடைபெற்றதோ, அதே போன்று தான் இப்போதும் நடைபெறும் என்றும், எனவே 48 நாட்களுக்கு மேலாக அத்தி வரதர் வைபவம் நீட்டிக்கப்படாது எனவும் திட்டமிட்டபடி வரும் 17ஆம் தேதி அத்தி வரதர் திருவிக்கிரகம் வரதராஜர் கோயிலில் இருக்கும் அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்படும் என திட்டவட்டமாகக் கூறினார்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் குடும்ப பிரச்சனைகளை போக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar dharsan extension in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Kanchi athi varadar Tamil or Athi varadhar Thiruvizha in Tamil.