உங்கள் குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி, வளமை பெருக இவற்றை கட்டாயம் செய்யுங்கள்

family
- Advertisement -

குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பது பல வகைகளில் சரியாக உள்ளது. நம் பள்ளி கல்லூரிகளில் கற்றுக்கொள்ளாத விடயங்களை நம் குடும்ப உறுப்பினர்களின் மூலமாக வாழ்வில் அதிகம் கற்றுக் கொள்ள முடியும். அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில் அங்கு மகிழ்ச்சியும், வளமும் பெருகும். ஆனால் இன்று பெரும்பாலும் கூட்டுக்குடும்பங்கள் குறைந்து, தனிக்குடும்பங்கள் அதிகரித்துவிட்டன அந்த தனி குடித்தன குடும்பங்களின் உறுப்பினர்களில் பலரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது, வீண் வாக்குவாதங்கள் செய்து மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை கெடுத்துக் கொண்டு கவலைப்படுவதை நாம் பலமுறை கண்டிருப்போம். அப்படி ஒற்றுமையாக இருக்கும் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி குடும்ப அமைதி மற்றும் முழுமையான மகிழ்ச்சி ஏற்படுவதற்கு செய்ய வேண்டிய எளிய தாந்த்ரிக பரிகார முறைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

family fight

குடும்ப உறுப்பினர்களால் ஓயாமல் எப்போதும் சண்டை மற்றும் வீண் வாக்குவாதங்கள் வீட்டில் ஏற்படுவதை தவிர்க்க விரும்புபவர்கள், வீட்டில் அனைவரின் பார்வையும் படும்படியான இடத்தில் சந்தன மரம் கொண்டு செய்யப்பட்ட விநாயகர், பசுவுடன் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணன் போன்ற சிலைகளை வைப்பதால் அந்த வீட்டில் வசிக்கின்ற நபர்களின் மனதில் ஒரு நல்ல அதிர்வலைகளை உண்டாக்கி, குடும்பத்திற்குள்ளாக வீண் சண்டை , விவாதங்கள் போன்றவற்றை செய்யாமல் தடுக்கும் ஒரு சிறந்த வாஸ்து பரிகாரமாக இருக்கிறது. வீட்டிற்குள்ளாக எந்த ஒரு பகுதியிலும் கடம்ப மரத்தின் ஒரு மரத் துண்டை வைத்து விடுவதால் குடும்பத்தில் தேவையற்ற சச்சரவுகள், குழப்பங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

- Advertisement -

சிவப்பு நிறம் வெம்மையையும், ஆக்ரோஷ உணர்வுகளையும் தூண்டவல்ல ஒரு நிறமாக இருப்பதால் குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களுக்குள்ளாக சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க வீட்டின் எந்த ஒரு பகுதியின் சுவற்றுக்கும் அடர் சிவப்பு நிற வண்ணங்களை பூசாமல் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் அறை, படுக்கை அறை, வரவேற்பு அறை போன்ற முக்கியமான இடங்களில் சுவற்றிற்கு அடர்ந்த மற்றும் இளஞ்சிவப்பு நிற சிவப்பு வண்ணங்களை பூசக்கூடாது.

red saree

காரணமின்றி குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் எழுவது, வாக்குவாதங்கள் உண்டாவது போன்றவற்றை உணர்பவர்கள் எப்போதும் வியாழக்கிழமைகளில் முகச்சவரம் மற்றும் முடி வெட்டி கொள்ளுதல் போன்ற செயல்களை செய்யக்கூடாது. மாதந்தோறும் உங்கள் வீட்டிற்கு வருகின்ற விருந்தினர்களின் எண்ணிக்கையை உங்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் உடன் சேர்த்து, அந்த எண்ணிக்கையில் ரொட்டி தயாரித்து பசு மாடுகள், நாய்கள் போன்றவற்றிற்கு உணவாக கொடுப்பதால் தீய எண்ணங்களுடன் உங்கள் வீட்டிற்கு வந்த மனிதர்களின் எதிர்மறை ஆற்றல்கள், கண் திருஷ்டிகள் போன்றவை நீங்கி குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் உருவாகும்.

- Advertisement -

moonstone

உங்கள் குடும்பத்தில் இருக்கின்ற பெண் உறவினரால் மட்டுமே அடிக்கடி சண்டைகள் சச்சரவுகள் ஏற்படுவதை அறிந்த நபர்கள் ஒரு வளர்பிறை திங்கட்கிழமை அன்று சந்திர காந்தக் கல் பதித்த வெள்ளி மோதிரத்தை அந்தப் பெண்ணின் வலது மோதிர விரலில் அணிவித்து, அதை அப்பெண் எப்போதும் அணிந்து கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனால் அந்தப் பெண் மன அமைதியை அடைந்து, வீணான பிரச்சினைகள் விவாதங்கள் செய்வதை முற்றிலும் நிறுத்தி, அனைவருடன் ஒற்றுமையாக இருக்கும் நிலை உண்டாகி குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே:
அசைவ உணவு சாப்பிட்டு கோயிலுக்கு செல்லக்கூடாது. ஏன் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Family problems pariharam in Tamil. It is also called as Kudumba prachanaigal theera in Tamil or Kadamba maram in Tamil or Vinayagar silai in Tamil or Kudumba sandaigal theera in Tamil.

- Advertisement -