இன்று அத்தி வரதர் தரிசனம் 8 மணி நேரம் ரத்து – மேலும் பல முக்கிய அறிவிப்புகள்

athi-varadhar
- Advertisement -

பக்தர்கள் வேண்டுகின்ற வரத்தை தரும் வரதராஜர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்புமிக்க காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலின் உண்மையான மூலவர் விக்கிரகம் தான் அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரதர் விக்கிரகமாகும். பல காரணங்களால் கோயில் குளத்தில் மறைத்து வைக்கப்பட்ட அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியில் எடுக்கப்பட்டு 48 நாட்கள் பூஜைகள் செய்து பக்தர்கள் தரிசிக்கும் வகையிலான வைபவம் நடைபெறும். அந்த வகையில் 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து தற்போது 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அத்தி வரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது அது குறித்த ஒரு முக்கிய தகவல் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

athi varadhar

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மக்களும் பேசுகின்ற ஒரே விடயமாக இருப்பது 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கின்ற அத்தி வரதர் தரிசனம் பற்றியதாகும். படைக்கும் கடவுளான பிரம்ம தேவரின் ஆணைக்கிணங்க அத்திமரத்தில் செய்யப்பட்டதாக இருக்கும் அத்தி வரதர் வைபவத்தை தற்போது வரை தோராயமாக ஒரு கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அத்தி வரதர் வைபவத்தை அரசு சார்பில் நிர்வகித்து வரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆடி கருடசேவையை முன்னிட்டு இன்று நண்பகல் 12 மணிக்கு அத்திவரதர் தரிசனத்திற்கான கிழக்கு கோபுர வாயில் மூடப்படுகிறது எனவும் அத்தோடு விஐபி தரிசன வாயிலும் பிற்பகல் 12 மணிக்கு அடைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கோயிலுக்கு உள்ளே சென்ற பக்தர்கள் மாலை 5 மணிக்குள் அத்தி வரதர் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியேற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

varadharaja perumal

அத்தி வரதர் வைபவம் நடைபெறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை கருடசேவை விழா நடைபெறும். எனவே 4 மணி முதல் 8 மணி வரையிலான நான்கு மணி நேரம் அத்தி வரதர் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். கருட சேவை முடிந்ததும் 8 மணிக்கு மேல் மீண்டும் அத்தி தரிசனம் தொடர்ந்து நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் வருகிற 17-ந்தேதி மந்திரங்கள் ஓதப்பட்டு அத்திவரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் பத்திரமாக வைக்கப்படும் என்றும், தற்போது கோயில் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் அன்றைய தினம் பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் என யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar dharshan time in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar festival in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.

- Advertisement -