இன்று அத்தி வரதர் தரிசனம் நிறைவு – ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

athi-varadhar

திருமால் பெருமைக்கு நிகர் ஏதுமில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தன்னை இகழ்பவர்களுக்கே வாரி வழங்கும் குணம் கொண்ட நாராயணாகிய திருமால் ஆத்மார்த்தமாக வழிபடும் பக்தர்களுக்கு எவ்விதக் குறைகளும் ஏற்படாமல் காப்பார் என்பதில் சந்தேகமில்லை. அத்தகைய திருமாலுக்குரிய புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் இருக்கிறது. அங்கு தற்போது மிகச் சிறப்பாக நடைபெற்று வரும் அத்தி வரதர் தரிசன வைபவம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Athi-Varadar-Kanchi

நின்றான், அளந்தான், கிடந்தான் என்கிற சொற்தொடரை வைணவ அடியார்கள் திருமாலின் செயல்களையும், அவரது திருவிக்கிரகம் பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் நிலைகளையும் குறிப்பிட பயன்படுத்துவர். நமது நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான வைணவ ஆலயங்களில் பெருமாள் அனந்த சயனம் எனப்படும் படுத்திருக்கும் கோலத்திலும் அல்லது சர்வ அலங்காரங்களுடன் நின்றிருக்கும் கோலத்திலும் மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் தருகின்றார். கோயில்கள் நிறைந்த இதே காஞ்சிபுரத்தில் தான் பெருமாளின் வாமன அவதாரத்தை குறிக்கும் உலகளந்த பெருமாள் என்கிற பெயரில் கோயில் கொண்டிருக்கிறார்.

பல்வேறு சிறப்புகள் மிகுந்த வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றான காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் மட்டும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில் திருக்குளத்தில் இருந்து வெளிவரும் அத்தி மரத்தில் பிரம்மதேவரால் செய்யப்பட்டதாக கூறப்படும் அத்தி வரதர் திருவிக்கிரகம் சில நாட்களுக்கு முன்பு சயன கோலத்தில் தரிசனம் தந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் நின்ற கோலத்தில் தனது பக்தர்களுக்கு திவ்ய தரிசனம் தந்துகொண்டிருக்கிறார். ஏற்கனவே சயன கோலத்தில் அத்தி வரதரை தரிசித்தவர்கள், நின்ற கோலத்திலும் அத்தி வரதரை தரிசனம் செய்ய மீண்டும் வருகை தந்ததால் தினந்தோறும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மக்கள் நெருக்கடி மிகுந்ததாகவே காட்சியளித்தது.

athi varadhar

இந்நிலையில் நேற்று ஊடகத்தினரை சந்தித்த காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 48 தினங்கள் நடைபெறுகின்ற அத்தி வரதர் வைபவம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்றும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை மட்டுமே பொதுமக்கள் அனைவரும் பொது தரிசன வழியில் மட்டுமே அத்தி வரதரை இரவு வரை தரிசிக்க முடியும் என்றும், எனவே இன்றைய தினத்தில் வி.ஐ.பி பாஸ், 300, 500 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனங்கள் போன்றவை கிடையாது என கூறினார். மேலும் பக்தர்கள் கொண்டு வருகின்ற அரசியல் தலைவர்களின் சிபாரிசு கடிதங்கள் போன்ற எதுவும் ஏற்றுக்கொள்ள பட மாட்டாது என தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே:
குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி பெருக

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar entry pass in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadar darshan in Tamil or Athi varadhar peruvizha in Tamil.