நாளை அத்தி வரதர் தரிசன வைபவம் நிறைவு – தரிசன நேரம் பற்றிய அறிவிப்பு

athi-varadhar

பாரத நாட்டில் மோட்சம் எனும் முக்திபேறு வழங்கும் ஏழு புண்ணிய நகரங்களில் தென்னிந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு மோட்சாபுரியாக காஞ்சிபுரம் நகரம் விளங்குகிறது. காஞ்சிபுரம் நகரம் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல நூற்றுக்கணக்கான கோயில்களை கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட கோயில்களில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் தான் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த அத்திவரதர் வைபவம் குறித்த ஒரு விடயத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அத்தி மரத்தில் பிரம்மதேவரின் ஆணைக்கிணங்க தேவலோக சிற்பி செதுக்கிய விக்கிரமாக அத்திவரதர் விக்கிரகம் கருதப்படுகிறது. அத்தகைய அத்திவரதர் விக்கிரகம் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் மூழ்க வைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து அத்திவரதர் தரிசன வைபவம் நடைபெறுகிறது. பல லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபடும் ஒரு ஆன்மீக பெருவிழாவாக இது திகழ்கிறது.

பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தற்போது 48 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட இந்த அற்புத அத்தி வரதர் தரிசனத்தின் போது அத்தி வரதர் சில நாட்கள் சயன கோலத்திலும், சில நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பது ஆன்மீக நடைமுறையாகும். அந்த வகையில் ஜூலை 1 ம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் விழா முடிவு வரை நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு தரிசனம் தந்த வண்ணம் இருக்கிறார்.

இதற்கு முன்னான அத்திவரதர் வைபவங்களின் போது காஞ்சிபுரம் மற்றும் சென்னையை சுற்றி இருந்த பக்தர்கள் மட்டுமே வந்து தரிசித்த ஒரு நிகழ்வாக இருந்தது. ஆனால் இந்த 2019ஆம் ஆண்டு நடைபெறுகின்ற அத்தி வரதர் வைபவம் என்பது உலகின் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு விடயமாக இருக்கிறது. மேலும் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கின்ற அரிய வாய்ப்பு என்பதால் பெரும் திரளான பக்தர்கள் தற்போது வரை அத்தி வரதர் தரிசனம் செய்த வண்ணம் இருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் அத்தி வரதர் வைபவம் தொடங்கப்பட்ட 47 ஆவது தினமான நாளை மாலை 5 மணியுடன் அனைத்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான அத்தி வரதர் தரிசனம் நிறைவு பெறும் என கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு எந்த ஒரு நபரோ அல்லது முக்கிய பிரமுகர்களோ எக்காரணம் கொண்டும் அத்திவரதர் தரிசனத்திற்காக கோயிலுக்குள்ளாக அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு, வாகனம் கிடைக்க இவற்றை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar festival end in Tamil. It is also called as Athi varadar dharisanam in Tamil or Athi varadar valipadu in Tamil or Athi varadhar vizha in Tamil.