அத்தி வரதர் கோயிலுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு ஏன்? – விவரம் உள்ளே

athi-varadhar

கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தமிழகம் மட்டுமல்லாது இந்திய நாடெங்கும் அதிகம் பேசப்பட்ட ஒரு விடயமாக இருந்தது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் தான். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற இந்த வைபவம் அனைவரின் வாழ்விலும் கிடைக்கின்ற ஒரே வாய்ப்பாக இருக்கக்கூடும் என்பதால் லட்சக்கணக்கில் தினந்தோறும் பக்தர்கள் திரண்டு வந்து அத்தி வரதரை தரிசித்தனர். பக்தர்களின் ஆதரவோடு மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த அத்தி வரதர் தரிசனம் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி நிறைவடைந்து, 17ம் தேதி அத்திவரதர் மீண்டும் குளத்திற்குள் அனந்த சயனம் செய்ய வைக்கப்பட்டார். அந்த அத்தி வரதர் குறித்த சில தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகள் கழித்து அத்திவரதர் எழுந்தருளினார். இதனையடுத்து அத்திவரதர் வைபவம் ஜூலை 1 முதல் வசந்த மண்டபத்தில் தொடங்கியது. ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை சயனகோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்த அத்திவரதர், ஆகஸ்ட் 1 முதல் 17 வரை நின்ற கோலத்தில் காட்சியளித்தார். அத்திவரதரை தினமும் தரிசிக்க லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரத்துக்கு வந்தனர்.

இதனையத்து அத்திவரதர் வைபவம் நிறைவடைந்து, நேற்று முன் தினம் இரவு சாம்பிரணி தைலம், மூலிகை திரவியங்கள் போன்றவை அத்திவரதர் திருமேனிக்கு பூசப்பட்டு, ஆகம விதிப்படி படியான அனைத்து விதமான பூஜைகள் செய்யப்பட்டு அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்கு திரும்பினார். அங்கும் சில பூஜைகள் நடைபெற்று அத்திவரதர் குளத்திற்குள்ளாக சயனிக்க வைக்கப்பட்டார்.

athi varadhar

கடந்த ஒன்றரை மாதங்களாக காஞ்சிபுரம் லட்சக்கணக்கான பக்தர்களின் படையெடுப்பால் காஞ்சிபுரம் நகரமே திணறிய நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அந்நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறது. மக்கள் கூட்டத்தில் ததும்பிய கோயில் தேரடி வீதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன. எனினும் சாதாரண காலங்களில் குறைவான எண்ணிக்கையில் வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையை விட சற்று கூடுதலாக பக்தர்கள் தினமும் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள நிலையில் அத்தி வரதரை நேரில் தரிசிக்க இயலாமல் போனவர்கள் அத்தி வரதர் சயனம் கொள்ளும் குளத்தை தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். எனவே குளத்துக்குள் பக்தர்கள் நுழையா வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

police

இது குறித்து காஞ்சிபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கூறும் போது 48 நாட்கள் வைபவம் முடிந்து அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், திருக்குளத்தில் இன்னும் முழுமையாக தண்ணீர் நிரம்பாததால் குளத்தில் வழிபாடு செய்ய பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குளத்தைச் சுற்றி காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 2 மாத காலத்துக்கு அனந்தசரஸ் குளத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது என கூறினார். இதற்கிடையில் குளத்துக்குள் பக்தர்கள் இறங்காத வண்ணம் குளத்தைச் சுற்றி தடுப்புசு வரை உயர்த்தும் பணியில் கோயில் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:
அத்தி வரதர் தரிசனத்தின் போது நிகழ்ந்த மகிழ்ச்சியான சம்பவம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar protection in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varathar kovil in Tamil or Athi varadhar thiruvizha in Tamil.