அத்தி வரதர் தொடர்பான வழக்கு – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

athi-varadhan
- Advertisement -

கடந்த 48 நாட்களாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற அத்தி வரதர் வைபவம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்த 48 தினங்களில் அத்தி வரதர் தரிசனம் செய்தனர். இதன் பிறகு கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்தி வரதர் அனைத்து வித மரியாதைகளுடன் அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் பாதாள அறையில் சயனம் கொள்ள வைக்கப்பட்டார். அத்தி வரதரை குளத்தில் வைப்பது தொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

court

சென்னையை சேர்ந்த பக்தர் ஒரு காஞ்சிபுரம் அத்தி வரதர் பெருமாள் கோயில் குளத்தில் அத்தி வரதர் வைக்கப்படும் அறையின் தூய்மை பற்றிய வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்தார். அனந்தசரஸ் குளத்தில் நிரப்பப்படவுள்ள நீரின் தன்மை குறித்து ஆக.19 அன்று விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அத்திவரதர் வைக்கப்படும் அனந்த சரஸ் குளம், பொற்றாமரைக் குளம் மற்றும் கோயிலில் உள்ள ஆழ்துளை கிணற்று நீர் ஆகிய அனைத்து நீர்மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ததில், நீரின் கடினத்தன்மை, அமிலத்தன்மை என அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் குடி நீருக்கு இணையாக உள்ளன. ஆனால் பொற்றாமரைக் குளத்தில் உள்ள தண்ணீர் மட்டும் இளம் பச்சை நிறத்தில் மாறியுள்ளது என தெரிவித்தார்.

athi varadhar

இதன் பின்னர் தமிழ்நாடு அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு வழக்கறிஞர் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்ட அன்றைய தினமே காஞ்சிபுரத்தில் நல்ல மழை பெய்து வரதராஜ பெருமாள் கோயிலின் குளத்துக்கு போதுமான தண்ணீர் வந்து விட்டது என தெரிவித்தார். தேவைப்பட்டால் கோயில் குளத்தின் அருகிலிருக்கும் ஆழ்துளைக் கிணற்று நீரைக்கொண்டு அந்த குளத்தில் அத்தி வரதர் பள்ளிகொண்டிருக்கும் சயன அறை முழுவதுமாக நிரப்பப்படும் என தெரிவித்தார்.

- Advertisement -

athi varadhan

அதையேற்ற நீதிபதி அத்தி வரதர் வைக்கப்பட்டுள்ள அனந்த சரஸ் குளத்தில் உள்ள சயன அறையை, பொற்றாமரைக் குளத் தில் உள்ள தண்ணீரைக் கொண்டு நிரப்ப வேண்டாம் என அறிவுறுத்தினார்.தற்போது கோயிலின் குளம் மற்ற வகையான தண்ணீரால் முழுமையாக நிரம்பும் வரை, அத்தி வரதர் இருக்கின்ற பாதாள சயன அறையை மட்டும் உயர் தரமான தண்ணீர் கொண்டு நிரப்பும் படியும். இது குறித்த விவரமான அறிக்கையை அறநிலையத்துறை வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் படி கூறி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

இதையும் படிக்கலாமே:
தினசரி பூஜையின் போது இவற்றை செய்தால் பலன் அதிகம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar sayam room in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar kovil in Tamil or Athi varadhar sirappugal in Tamil.

- Advertisement -