அத்தி வரதர் தரிசனம் – மீண்டும் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம். காரணம் என்ன?

athi-varadhar

வரங்களை அருளும் தெய்வமாக திருமால் இருக்கிறார். எனவே தான் அவருக்கு “வரம் தரும் ராஜர்” என்கிற பெயர் உண்டானது. இதுவே பிற்காலத்தில் “வரதராஜர்” என அழைக்கப்படலாயிற்று. அதிலும் பிரம்மதேவரின் அறிவுறுத்தல் படி தேவலோக சிற்பியான மயன் வடித்த அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரதர் பெருமாள் விக்கிரக தரிசனம் என்பது மனிதர்கள் அனைவருக்கும் கிடைக்கின்ற ஒரு அரிய வாய்ப்பாகும். 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தகைய ஒரு அற்புத வாய்ப்பு தற்போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் அத்தி வரதர் வைபவம் மூலம் பக்தர்களுக்கு கிடைத்திருக்கிறது. அந்த அத்தி வரதர் தரிசனம் குறித்த சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 40 நாட்களுக்கு மேலாக காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்தி வரதர் தரிசனம் வைபவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் காஞ்சிபுரம் வந்து அத்தி அத்தி வரதர் தரிசனம் செய்து சென்றாலும் கடந்த இரண்டு நாட்களாக எண்ணிலடங்காத பக்தர் களின் வருகையால் காஞ்சிபுரம் நகரம் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலை சுற்றியுள்ள அனைத்து பகுதியிலும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்ததை காணமுடிந்தது.

சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை தொடர்ந்து மூன்று தினங்களும் அரசு விடுமுறை நாட்கள் என்பதால் சென்னை, திருவள்ளூர் போன்ற சுற்று வட்டார மாவட்ட பக்தர்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் அத்தி வரதர் தரிசனம் காண திரண்டு வந்திருந்தனர். அதிலும் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஆடி மாத வளர்பிறை ஏகாதசி தினம் என்பதாலும், இந்த வார இறுதியில் 48 நாட்கள் மண்டல அத்தி வரதர் தரிசனம் நிறைவு பெறுவதாலும் மிக அதிகளவு பக்தர்களின் வருகையால் கூட்ட நெரிசல் அதிகரித்து அத்தி வரதர் தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

athi varadhar

திங்கட்கிழமையான இன்றைய தினமும் அரசு விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் தவிர குறையாது என்பது கோவில் நிர்வாகத்தினரின் கருத்தாக இருக்கிறது. மேலும் ஒருமுறை அத்தி வரதரை தரிசனம் செய்தவர்கள் மீண்டும், மீண்டும் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு வருவதால் கூட்ட நெரிசல் குறைவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஒருமுறை அத்தி வரதர் தரிசனம் கண்டவர்கள் மீண்டும் அத்தி வரதர் தரிசனம் செய்ய வருவதை தவிர்த்தால், இதுவரை அத்தி வரதர் தரிசனம் செய்யாதவர்கள் வழிவகை செய்யும், கோயிலில் பக்தர்களின் கூட்டத்தால் ஏற்படும் நெருக்கடி குறையும் என்பது கோவில் மற்ற மாவட்ட நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு விடுகின்ற வேண்டுகோள் மற்றும் அறிவுரையாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Athi varadhar temple management in Tamil. It is also called as Athi varadhar in Tamil or Athi varadhar dharisanam in Tamil or Athi varadhar vizha in Tamil.