இந்த விஷயங்களையெல்லாம் எதார்த்தமாக நீங்கள் பார்க்க நேர்ந்தால் ‘ஜாக்பாட்’ அடிக்கப் போகிறது என்று தான் அர்த்தம்! அப்படி என்ன விஷயங்கள் அது?

chandran-seven

ஒரு சில விஷயங்களை நாம் கண்களால் பார்க்கும் பொழுது நமக்கு பின்னாட்களில் அதிர்ஷ்டம் வரும் என்று கூறுவார்கள். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக மூன்றாம் பிறை சந்திரனை நாம் எடுத்துக் கொள்ளலாம். மூன்றாம் பிறையில் இருக்கும் சந்திரனை சாதாரணமாக நாம் கண்களால் பார்க்கும் பொழுது நமக்கு நிறைய யோகங்கள் உண்டாகும் என்று புராணங்கள் கூறுகிறது. அந்த வகையில் இன்னும் என்ன மாதிரியான விஷயங்களை நாம் காணும் பொழுது நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

cow

பசுவுடன் இருக்கும் கன்று குட்டி பசுவிடம் பால் குடிப்பது போன்ற காட்சியை நீங்கள் நேரில் எதார்த்தமாக காணும் பொழுது உங்களுடைய வாழ்க்கையில் நல்ல ஒரு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம். வால் நட்சத்திரத்தை பார்க்கும் பொழுது எப்படி நாம் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை நினைத்துக் கொள்ள வேண்டுமோ? அதே போல பசுவிடம் பால் குடிக்கும் கன்றினை பார்க்கும் பொழுது உங்கள் மனதில் இருக்கும் ஆசைகளை இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

சில கணித எண்கள் அதிர்ஷ்டமான எண்ணாக இருக்கும். அந்த வகையில் 7 என்கிற எண் பல நாடுகளில் அதிர்ஷ்டத்தை குறிப்பது ஆகும். உங்களுடைய வாழ்க்கையில் திடீரென 7 என்கிற எண்ணை அடிக்கடி காணும் பொழுது அடுத்து கொஞ்ச காலத்தில் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்க போகிறது என்று அர்த்தமாம். எதிர்பாராத திடீர் தன லாபம் உண்டாக நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

முந்தைய காலங்களில் சாதாரணமாகவே யானை தெருக்களில் நடமாடிக் கொண்டிருக்கும். அடிக்கடி யானைப்பாகன் தெருக்களில் யானையை கூட்டிக் கொண்டு உலா வருவார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் யானையைப் பார்ப்பது என்பதே அரிதாகிவிட்டது. பக்தர்களுக்கு மிகவும் விருப்பமான கடவுளாக இருக்கும் பிள்ளையாரின் ஸ்வரூபமாக விளங்கும் யானை அதிர்ஷ்டமான விலங்காகும். திடீரென யானையைப் பார்க்க நேர்ந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தம்.

- Advertisement -

உங்கள் வீட்டை சுற்றி அடிக்கடி பறவைகள் வந்து கொண்டிருந்தால் அதுவும் அதிர்ஷ்டத்தின் அறிகுறி தான். பறவைகள் வீட்டில் கூடு கட்டுவது என்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒரு செயலாகும். தூக்கணாம் குருவி, சிட்டுக்குருவி போன்ற பறவைகள் கூடு கட்டி இருந்தால் அதனை அழித்து விடாதீர்கள்! அதனால் உங்களுக்கு அதிர்ஷ்டமாக வர வேண்டிய விஷயம் கூட துரதிருஷ்டமாக மாறி வந்து சேர்ந்துவிடும்.

rainbow-vanavil

என்றைக்காவது வரும் வானவில் அதிர்ஷ்டத்தின் அறிகுறி ஆகும். திடீரென வானில் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டும் பிரகாசமாக மின்னுவது போல தெரிவதும், வானவில் கண்களுக்கு தெரிவதும் அதிர்ஷ்டத்தை நமக்கு குறிப்பால் உணர்த்துவது ஆகும். வானவில் எங்கு முடிகிறதோ! அந்த இடத்தில் தங்க புதையல் இருக்கும் என்று கூறுவார்கள். இது உண்மையோ? பொய்யோ? தெரியாது ஆனால் வானவில்லை பார்ப்பது அதிர்ஷ்டத்தை மட்டும் உண்டாகும்.

4-leaf-grass

வீட்டில் இருக்கும் கண் திருஷ்டிகள் நீங்கவும், தீய சக்திகள் தலை தெறித்து ஓடவும் செய்யும் ஆற்றல் நான்கு இதழ் கொண்ட புல் வகைக்கு உண்டு. ஒரே புல்லில் நான்கு இதழ்கள் இருந்தால்! அது மிகவும் புனிதம் வாய்ந்த ஒரு விஷயமாக கருதப்படுகிறது. அந்த புல்லை எடுத்துக் கொண்டு வீட்டின் பூஜை அறையில் வைத்தால் நல்ல ஒரு அதிர்ஷ்டம் விரைவில் உங்களுக்கு வருமாம். நாம் வெளியில் செல்லும் பொழுது நம்மை கடந்து இறுதி ஊர்வலம் செல்வது நல்ல விஷயம் என்று கூறுவார்கள். அந்த வகையில் பிணத்தை பார்ப்பது, இறுதி ஊர்வலத்தை கடந்து செல்வது அதிர்ஷ்டத்தை தரும்.