அதிர்ஷ்டம் தரும் மருதாணி பரிகாரம்

marudhani
- Advertisement -

மருதாணியை மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லுவார்கள். மங்களகரமான காரியம் தொடங்குவதற்கு முன்பு ஒரு சில சமூகத்தினர் இந்த மருதாணி வைக்கக் கூடிய வழக்கத்தை ஒரு திருவிழா போல கொண்டாடுவார்கள். அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய இந்த மருதாணியும் நமக்கு கஷ்டத்தை தரும், இந்த நேரத்தில் கையில் வைக்கும் போது.

அது எந்த நேரம் என்பதை பற்றி தெரிந்து கொள்ள இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். அது மட்டுமல்லாமல் இன்னும் மருதாணியை பற்றிய சுவாரசியமான சில ஆன்மீகம் சார்ந்த தகவல்களும் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

மருதாணி வைக்கும் முறை

வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இந்த மூன்று நாட்களில் மருதாணி வைப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. அதிலும் குறிப்பாக சுக்கிர ஹோரையில் உங்களுடைய கையில் மருதாணியை வைத்துக் கொண்டால் அது உங்களுக்கு பெரிய அளவில் ராஜயோகத்தை கொடுக்கும். ஆண்களும் சரி பெண்களும் சரி சுக்கிர யோகத்தில் கையில் மருதாணியை வைத்துக் கொள்ளுங்கள்.

இதை தவிர்த்து பஞ்சமி திதி, தசமி திதி, ஏகாதசி திதி, துவாதசி திதியில் கையில் மருதாணி வைத்துக் கொள்வது மிகப்பெரிய அற்புதமான பலன்களை கொடுக்கும். அதேபோல பரணி நட்சத்திரம், பூரம் நட்சத்திரம், பூராடம் நட்சத்திரம் இந்த நட்சத்திரம் வரும் போதெல்லாம் கையில் மருதாணி வைக்கலாம்.

- Advertisement -

மேலே சொன்ன விதிமுறைகளை பின்பற்றும்போது நீங்கள் ரொம்ப ரொம்ப முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் உங்களுக்கு சந்திராஷ்டமம் வந்திருக்கக்கூடிய நாளில் கையில் மருதாணி வச்சிட்டீங்க. அப்படின்னா அந்த மருதாணியின் சிவப்பு நிறம் கையில் இருக்கும் வரை உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

ஆகவே உங்களுடைய ராசிக்கு எந்த நாளில் சந்திராஷ்டமம் இருக்குதோ தயவு செஞ்சு அன்னைக்கு மருந்தும் கூட மருதாணி வச்சிராதீங்க. இது ஒரு பக்கம் இருக்க, நீங்கள் அரைத்த மரியாதையை கையில் வைக்கும் போது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். மருதாணியை செடியில் இருந்து விளக்கு வைத்த பிறகு பறிக்கக்கூடாது. வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமைகளில் பறிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மருதாணியை மனதார அடுத்தவர்களுக்கு தானம் செய்தால் நல்லது. மருதாணியை செடியில் இருந்து பறிக்கும்போது மருதாணி இடம் அனுமதி கேட்க வேண்டும். நமக்கு நன்மையை தருவதற்காக வளர்ந்து நிற்கக்கூடிய மருதாணி செடியிடம், பணிவோடு, உன்னை பறிப்பது என்னுடைய நன்மைக்காகத்தான். ஆகவே நீ எனக்கு நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ஒரே நாளில் வேண்டுதல் நிறைவேற விளக்கு பரிகாரம்

எந்த சாபத்தையும் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டு அந்த மருதாணி செடிக்கு தண்ணீரை ஊற்றிவிட்டு, பிறகு பறித்துக் கொள்ளுங்கள். அந்த மருதாணி செடியின் ஆசீர்வாதமும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். மருதாணி பற்றிய தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -