ஆகஸ்ட் மாத ராசிபலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

august
- Advertisement -

ஒவ்வொரு மாதமும் தனிப்பெருமை வாய்ந்தது. கிரகங்களின் பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறுபடுகின்றன. ஆகஸ்டு மாத கிரக நிலைப்படி ஒவ்வொரு ராசிக்கும் பலன் எப்படி உள்ளது என்பதை மேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

மேஷம்
ஆகஸ்டு மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும் என்பதால் உடல் சோர்வு, மனக்களைப்பு அதிகமாக இருக்கும். நீங்கள் வியாபாரம் அல்லது சுயதொழில் செய்பவராக இருந்தால் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் குறைந்த லாபமே கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும். மாணவர்கள் கவனமாக படித்தால் கல்வியில் மேன்மையை அடையலாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு உயர்பதவிகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும்.

- Advertisement -

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டு மாதம் முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் வேண்டும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு முயற்சித்தால் திருமண வரவு கைகூடி வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிப்பதோடு தர்ம காரியங்களுக்கும் மற்றும் கோவில்களுக்கு செல்வதற்கும் அதிகம் செலவு செய்வீர்கள். கணவன் மனைவியிடையே அன்பும், அரவணைப்பும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனை பயன்படுத்திக் கொண்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்டு மாதம் கவலை தரக் கூடியதாகவே இருக்கும். உங்கள் பேச்சு மிகவும் நிதானமாகவும், பணிவாகவும் இருக்க வேண்டும். தொழில் மற்றும் செயலில் மிகவும் கவனம் தேவை. குடும்பத்திலும், பணி இடத்திலும் எந்த ஒரு விவாதத்திலும் ஈடுபட கூடாது. யாருக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் கொடுக்க வேண்டாம். கவனக்குறைவால் செய்யும் எந்த ஒரு செயலும் உங்களுக்கு ஆபத்தாக அமையலாம். பணியிடத்தில் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லதாகும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது மிகவும் நல்லது. தொழிலில் குறைந்த அளவு லாபமே கிடைக்கும். தேவையற்ற மன குழப்பம் ஏற்படும். அதனால் யோகா செய்வதோடு கோவிலுக்கு சென்று வந்தால் ஆரோக்கியத்திற்கு நல்ல பலனளிக்கும்.

- Advertisement -

கடகம்
கடக ராசிக்கு ஆகஸ்டு மாதம் பல நற்பலன்கள் கிடைத்தாலும், சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். உங்கள் வேலையில் அதிக சவால்கள் வரும். உங்கள் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். இந்த மாதம் பணவரவு சிறப்பாக இருந்தாலும், அதிகம் செலவு செய்யாமல் சேமிக்க முயலவேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் சிலருக்கு பணி இடமாற்றம் கிடைக்கும். சில பிரச்சனைகள் உண்டாகும். அவற்றை மிகவும் பொறுமையாக கையாளுவது உங்களுக்கு நன்மையை அளிக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்கு இந்த மாதம் சிறப்பானதாக இருக்கும். உங்கள் ஆளுமை அதிகாரம் மேலும் அதிகரிக்கும். கணவன்-மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்படாமல் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கல்யாணமான தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகமாக இருக்கும். இளம் வயதினராக இருந்தால் காதலில் விழ வாய்ப்புள்ளது. உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். பணியிடத்தில் மதிப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றத்தையும் நற்பலனையும் கொடுக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து இனிமையும், மன நிம்மதியும் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய திட்டங்களுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். வேலை தேடும் நபருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவும் வாய்ப்புள்ளது. புதிய திட்டங்களால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு உடல் வலி, மூட்டு வலி பிரச்சனைகள் ஏற்படலாம்.

துலாம்
திருமண வயதினருக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். உத்தியோகத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நினைத்த பலன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். பணவரவு குறைவாகவே இருக்கும். தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால் பிரச்சினைகளை நிதானமாக கையாள வேண்டும். உடன் பணிபுரிபவர்களோடு நட்பு பாராட்ட வேண்டும். குடும்ப உறவு சுமூகமாக இருக்கும். சேமிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் கவலையான பலனையே இந்த மாதம் அடைவார்கள். பணவரவில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் நஷ்டம் ஏதும் ஏற்படாது. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் நெருக்கடியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மேல் அதிகாரிகளிடம் விவாதம் செய்யாமல் பொறுமையை கையாள வேண்டும். வாழ்க்கை துணையுடன் அன்பாக, அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினருடன் எந்த ஒரு வாக்குவாதமும் வேண்டாம்.

தனுசு
இந்த மாதம் குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் நிலைத்திருக்கும். உத்யோகத்தில் பண உயர்வு கிடைக்கும். உடன் வேலை செய்பவர்களுடனும், மேலதிகாரியுடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இளம் வயதினருக்கு காதல் உறவு இனிமையானதாக இருக்கும்.
புதிய தொழில் முயற்சிகள் சிறப்பாக நடக்கும். பணியில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. கால் மற்றும் முதுகு வலி ஏற்படும். பணிச்சுமை அதிகமாக இருப்பதால் மனச்சோர்வாக இருப்பீர்கள்.

மகரம்
குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதால் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு அதிகமாக இருப்பதால் அதிகம் செலவு செய்யாமல் சிக்கனத்தைக் கையாளவேண்டும். தொழில் செய்பவருக்கு கடின உழைப்பு மற்றும் அதிக முயற்சி தேவைப்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்யம் சீராகி வரும். வியாழக்கிழமை தோறும் குரு வழிபாடு செய்வது நல்லது.

கும்பம
இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல உறவு இருந்தாலும், சிறு சிறு விஷயங்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். போதிய பண வரவு இருக்கும். பணியில் சில தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கழுத்து அல்லது தொண்டைப் பகுதியில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்
இந்த மாதம் உங்களுக்கு நன்மையையே நடக்கும். சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் உங்கள் துணையுடனான உறவு இனிமையாகவே இருக்கும். கடின உழைப்பும், முயற்சியும் அதிகம் தேவைப்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். உங்கள் உறவினர்களுடன் மிகவும் ஆனந்தமாக இருப்பீர்கள். எதிலாவது முதலீடு செய்வதற்கு முன்னர் பல முறை யோசித்து செய்யுங்கள். இந்த மாதம் நீங்கள் யாருக்கேனும் கடன் கொடுத்தால் அந்த பணம் திரும்பி வருவதில் பிரச்சனை ஏற்படும். அமைதியான மனநிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -