தோனி பயன்படுத்தும் கிரிக்கெட் பேட் தயாரிக்கபடும் மரம், விலை, வெயிட் அதற்காக பெரும் சம்பளம் – இதோ முழு விவரம்

Dhoni

இந்திய அணியின் கூல் கேப்டன் என்று பெயரெடுத்தவர் நம்ம தல தோனி. இவரின் தலைமையின் கீழ் இந்திய அணி ஏகப்பட்ட சாதனை வெற்றிகளை குவித்துள்ளது நாம் அனைவரும் அறிந்ததே. தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி ஐ.சி.சி நடதிதிய மூன்று கோப்பைகளையும் வென்றுள்ளது. இளம் வீரர்கள் பலரை கண்டுபிடித்து அணியை சிறப்பாக வழிநடத்தியவர் தோனி.

dhoni

தனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் பயணிக்கும் தோனி அவரது ஓய்வு முடிவினை உலகக்கோப்பை தொடருக்கு பின் அறிவிப்பார் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாக தோனி பயன்படுத்தும் ஸ்பார்ட்டான் பேட் தயாரிப்பு பற்றியும் அதன் விலை, வெயிட் மற்றும் அந்த பேட்டை பயன்படுத்துவதால் தோனி பெறும் ஊதியம் ஆகியவைகளை இந்த பதிவில் கூறியுள்ளோம்.

பேட் – தோனி பயன்படுத்தும் இந்த ஸ்பார்ட்டான் பேட் இங்கிலிஷ் வில்லோ என்னும் மரத்தில் இருந்து செய்யப்படுகிறது. இந்த வகை மரங்கள் தான் முறையான, சிறப்பான கிரிக்கெட் பேட்கள் தயாரிக்க பயன்படும் மாற வகை ஆகும். மேலும், தோனி பயன்படுத்தும் பேட்டின் எடையும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெயிலின் பேட் எடையும் சமம். இவர்களது பேட்டின் எடை சுமார் 1கிலோ 300 கிராம் முதல் 1கிலோ 500 கிராம் வரை இருக்குமாம். அதாவது 1.3kg – 1.5kg

dhoni

இந்த பேட்டின் விலை இந்திய மதிப்பில் சுமார் 30000-40000 வரை இருக்கும். மேலும், பேட்டை அலங்கரிக்க ஒட்டப்படும் ஸ்பார்ட்டான் ஸ்டிக்கர் 10000 வரை செலவாகும். எனவே அவருடைய பேட் ஒன்று 50,000 ருபாய் வரை இருக்கும். இந்த ஸ்பார்ட்டான் பேட்டை அவர் உபயோகிக்க ஒரு ஆண்டுக்கு 6 கோடிகள் வரை ஊதியமாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

கிரிக்கெட் : திருமணத்தின்போது பெயரை மாற்றி திருமணம் செய்த கோலி, அனுஷ்கா சர்மா – ஏன் தெரியுமா ?

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்