சிட்னி நகரில் மனைவியோடு நடந்து சென்ற கோலி – வீடியோ

ishanth

இந்திய அணியின் கேப்டனான கோலி இந்திய அணியின் மூன்று வகையான ஆட்டங்களிலும் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இவரது தனிப்பட்ட சாதனைகளோடு, கேப்டன் பொறுப்பிலும் தனது சாதனைகளை அடுக்க இவர் தவறியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

koli 1

தற்போது சிட்னி நகரில் நடந்து வரும் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி வரலாற்று சாதனை நிகழ்த்தும். இந்திய அணி வரலாற்று வெற்றியினை உற்றுநோக்கி வரும் நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன் தனது மனைவியுடன் ஷாப்பிங் சென்றுள்ளார் கோலி.

கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவின் கைப்பிடித்த படி சிட்னி நகரின் சாலையில் நடந்து செல்கிறார் இதனை ரசிகர் ஒருவர் அவருக்கு தெரியாமல் வீடியோ பதிவு எடுத்துள்ளார். மேலும் இந்த வீடியோ இப்போது கோலியின் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதோ வீடியோ பதிவு உங்களுக்காக :

கோலி எளிமையாக நடந்து செல்வது என்பது இந்தியாவில் அரிதான ஒரு விடயமாகும். அதனால் அவர் ஆஸ்திரேலிய வீதியில் ஜாலியாக நடந்து செல்லும் இந்த வீடியோ அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்தியா கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெருமை என்பது இன்னும் மூன்று தினங்களில் தெரிந்துவிடும். ஆட்டத்தினை டிரா செய்தால் கூட இந்திய அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

சர்ச்சைக்கு உண்டான இந்திய வீரர் அவுட் தவறாக கொடுக்கப்பட்டது அம்பலம் – வீடியோ பதிவு

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்