நாளை ஆவணி அவிட்டம், ஆவணி மாதத்தின் சிறப்புகள் என்ன? ஆவணியில் இதை செய்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா?

hayagriva-vinayagar-krishna
- Advertisement -

ஆவணி மாதத்தில் நிறையவே திருவிளையாடல்கள் நிகழ்ந்துள்ளன. ஆவணி மாதத்தில் சூரிய பகவான் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். இம்மாதத்தின் அதிதேவதை ஸ்ரீதரன். நமக்கு ஆத்ம பலத்தை கொடுக்கக்கூடிய சூரியன், சிம்ம ராசியில் பலமாக அமர்ந்திருப்பார். எனவே ஆவணி மாதம் மிகவும் சிறப்புற கருதப்படுகிறது. இம்மாதத்தில் சூரிய வழிபாடு செய்வது எல்லா வகையான வளங்களையும் பெறுவதற்கு உகந்ததாக இருக்கும். ஆவணியில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? ஆவணியின் சிறப்புகள் என்ன? என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

surya-namaskar1

பொதுவாக ஆவணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வாம்சம் பொருந்திய அத்துணை அதிசயங்களும் இருக்கும். ஆவணியில் சூரிய ஹோரை காலை 6 மணி முதல் 7 மணி வரை இருக்கும். இந்த நேரத்தில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் உடலுக்கு ஆற்றலும், ஆன்மாவிற்கு பலமும் பன்மடங்கு பெருகும். எழுந்ததும் சூரியனைப் பார்த்து வணங்கி வந்தால் கூட போதும் பெரிதாக நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை, இதனால் நிறைய நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

ஆவணி அவிட்டத்தில் பிராமணர்கள் பூணூல் வைபவத்தை செய்வார்கள். புதிய பூணூல் மாற்றி உபகர்மா மேற்கொள்வார்கள். ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை பயில்பவர்களும் இந்நாளை மகத்துவமாக பார்க்கின்றனர். பௌர்ணமியுடன் கூடிய ஆவணி அவிட்டம் சிவபெருமானுக்கு உகந்த நன்னாள் ஆகும். சிவ பூஜைகளை மேற்கொள்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவதும் பெறற்கரிய வரங்களை பெற்றுக் கொடுக்கும்.

lingam-vilva-archanai

ஆவணியில் புட்டுக்கு மண் சுமந்த லீலை, நரியைப் பரியாக்கியது, கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி, தருமிக்கு பொற்கிழி, கருங்குருவிக்கு உபதேசம், வளையல் விற்ற லீலை ஆகிய திருவிளையாடல் புராணங்களை மக்கள் விழாவாகக் கொண்டாடுவார்கள். சொக்கநாதருக்கு பட்டாபிஷேகம் செய்யப்படும். மீனாட்சி அம்மன் கோவிலில் மூல உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

- Advertisement -

மேலும் ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர், விநாயகர் ஆகியோர் அவதரித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே ஆவணி மாதத்தில் விநாயகர், ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு மேற்கொள்வதும் சிறப்பு. ஆவணி மாதத்தில் திருவோண நட்சத்திரம் மகாபலி சக்கரவர்த்திக்கு விழா எடுக்கப்படுகிறது. வாமன அவதாரம் எடுத்து விஷ்ணு பகவான் அருள் புரிந்ததும் இந்நாளில் தான். கேரளாவில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக புத்தாடை உடுத்தி, பூ கோலமிட்டு, விதவிதமான பதார்த்தங்கள் பகிர்ந்து மனமகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.

sri-krishna

ஆவணியில் வரும் அஷ்டமி நட்சத்திரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாள் கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கண்ணனை வணங்க எல்லா வளங்களையும் அவர்கள் பெறலாம். மேலும் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் அவதரித்து அருள் புரிந்தார். எனவே விநாயகர் சதுர்த்தியும் கொண்டாட்டமாக இன்றளவிலும் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். ஆவணியில் மஹா சங்கட சதுர்த்தி நன்னாளில் சந்திர தரிசனம் செய்தால் சங்கடங்கள் யாவும் தவிடுபொடியாகும் என்பது நியதி.

hayagrivar

எனவே இத்தகைய அருமை பெருமைகள் நிறைந்த ஆவணி மாதத்தில் சூரிய வழிபாடு, சந்திர தரிசனம், விநாயகர், ஸ்ரீ கிருஷ்ணர், சிவபெருமான், ஹயக்ரீவர் ஆகியோரை வழிபட்டால் எல்லா வளங்களையும், நலன்களையும் பெறலாம். குதிரை முகம் கொண்ட அசுரர்களிடம் இருந்து வேதங்களை காப்பாற்ற ஸ்ரீமன் நாராயணர் குதிரை முகம் கொண்ட அவதாரம் எடுத்தது தான் ஹயக்ரீவர் ஜெயந்தி. ஹயக்ரீவரை வழிபட்டு வந்தால் கல்வியில் ஏற்றம் பெறலாம். எனவே ஆவணி மாதத்தில் வரும் எல்லா பண்டிகைகளையும், சிறப்பான நாட்களையும் வரவேற்று கொண்டாடி அதன் பலன்களையும் அனுபவிப்போமாக!

- Advertisement -