முன்னோர்களின் ஆவிகளோடு பேசும் கலை – வீடியோ

ouija board tamil

மனிதனாக பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது நிச்சயம். அப்படி இறந்த பின் நாம் அனைவரும் என்ன ஆகிறோம் என்ற கேள்வி பண்டைய நாகரிகங்கள் முதல் இன்றைய நவீன யுக மனிதர்கள் வரை அனைவருக்கும் உண்டு. அதற்கான விடையை காணும் முயற்சி உலகெங்கிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு முயற்சி தான் “இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசும் கலை”. அதைப் பற்றிய இக்காணொளியைக் காண்போம்.

ஆவிகள் உண்மையா, பொய்யா என்ற விவாதங்கள் இருந்தாலும் இக்கலையை ஆராய்வதற்கும், உண்மையைக் கண்டறிவதற்கும் இக்கலையை பயன்படுத்துபவர்கள் பலர் உலகெங்கிலும் உள்ளனர். இம்முறையில் மிகுந்த நம்பிக்கையுடன் ஈடுபட்டு தங்கள் முன்னோர்களின் ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பலனடைந்ததாக பலர் கூறுகின்றனர்.

சரியான வழிகாட்டுதல்களுடன் சில ரகசிய உத்திகள் மூலம் நமக்கு பிரியமான இறந்தவர்களின் ஆத்மாக்களுடன் ஓஜா போர்டு மூலம் தொடர்பு கொள்ள முடியும். அப்போது நம் மனதிற்குள் எழும் கேள்விகளை மௌனமாக அவர்களிடம் கேட்டால் அதற்குரிய பதில்களை அளிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

சரியான நபர்களிடம் இது குறித்த விவரம் அறிந்து, மூன்று மாதங்களுக்கு தொடர்பயிற்சியை செய்வதன் மூலம் நாமே இறந்து போனவர்களின் ஆத்மாக்களுடன் பேசி நாமும் பலனடைந்து பிறர்க்கும் உதவ முடியுமாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். மேலும், இதில் ஆர்வங்கொண்டு தீவிரமாக பயிற்சி செய்யும் போது ஆவிகளை நம் கண்களால் காணவும், அவற்றின் குரல்களை கேட்கவும் முடியும் என இப்பயிற்சியில் தேர்ச்சியடைந்தவர்கள் கூறுகிறார்கள். இவற்றையெல்லாம் கேட்கும் போது நமக்கு சற்று திகிலாக இருந்தாலும் நம்பிகையோடு முயற்சி செய்தால் இவ்வுலகில் எதுவும் சாத்தியம் தான்.