செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் விரதம் இருப்பவர்கள் இந்த சைவ உணவுகளை கூட தவிர்க்க வேண்டும் தெரியுமா?

murungai-lakshmi
- Advertisement -

பொதுவாக எல்லோருடைய வீடுகளிலும் மற்ற நாட்களை விட செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மிகவும் விசேஷமாக பூஜை, புனஸ்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. தினமும் நம்மால் பூஜைகள் செய்ய முடியாவிட்டாலும், இந்த செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை விசேஷமாக பார்க்கப்படுவதற்கு முக்கியக் காரணம் அந்நாட்களின் சிறப்பம்சமாகும். இத்தகு நாட்களில் விரதம் இருப்பவர்கள் சில சைவ உணவுகளை கூட தவிர்க்க வேண்டும். அது எந்தெந்த உணவுகள்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

pooja-room

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் முழுநேர விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு சகல சம்பத்துக்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் அந்நாளில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வது மரபு. இறைவனுக்கு செய்யப்படும் பூஜையில் தொய்வு ஏற்படாமல் இருக்கவும், இறையருள் நமக்கு முழுமையாக கிடைக்கவும் அசைவ உணவுகளை தவிர்த்து வருகின்றோம்.

- Advertisement -

அசைவ உணவு உண்டு விட்டு பூஜை செய்தால் நமக்கே ஒரு திருப்தி ஏற்படுவது இல்லை. இது நம் முன்னோர்கள் அந்த காலத்தில் இருந்து நமக்கு விதைத்த விதை தான். அசைவ உணவுகளை உண்ணாமல், நம் உடல் தூய்மையாக இருக்கும் பொழுது பூஜை செய்தால் தான் அந்த பூஜை முழுமையாக நமக்கு திருப்தியைக் கொடுக்கும். உடலும், மனமும் சுத்தமாக இயங்குகிறது என்கிற ஒரு விஷயம் மனோபலத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் இறைவன் மீது முழு பக்தியும், ஈடுபாடும் உண்டாகிறது.

praying-god1

இந்த வகையில் அசைவ உணவை மட்டுமல்லாமல் சில சைவ உணவுகளை கூட நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் விரதம் இருக்கும் பொழுது தவிர்க்கப்பட வேண்டும் என்கிறது ஆன்மீகம். இந்த சைவ உணவுகளும், அசைவ உணவிற்கு நிகரானது என்று எச்சரிப்பதால் விரதம் இருப்பவர்கள் இந்த உணவுகளையும் தவிர்த்து விட்டு விரதம் இருந்தால் முழு பலன் கிடைக்குமாம்.

- Advertisement -

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் விரதம் இருந்து மகாலட்சுமி தாயாரை வழிபட்டு வந்தால் இல்லத்தை சுபகாரியத் தடைகள் விலகும். உங்களுடைய பிள்ளைகளுக்கோ அல்லது நீங்கள் பொறுப்பேற்று வரன் பார்க்கும் விஷயங்களில் நல்லபடியாக வரன் அமைய செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் விரதம் இருக்கலாம். இந்த விரதத்தின் பொழுது வெங்காயம், பூண்டு, பாவக்காய் மற்றும் முருங்கக்காய் ஆகிய இந்த நான்கு சைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.

onion-garlic

வெங்காயம், பூண்டு போன்றவை அசைவ உணவிற்கு நிகராக பார்க்கப்படுகிறது. இதில் இருக்கும் ஒரு வித வாசம் தெய்வீக தன்மையை இழக்க செய்யும் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. இறை சிந்தனையுடன் இருப்பவர்களுக்கு இந்த வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகள் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. மேலும் முருங்கைக்காய் சாப்பிட்டு விட்டு விரதம் இருந்தால் அதில் பலன் குறைவதாகவும் கூறப்படுகிறது.

pavakai

அதே போல கசப்புத் தன்மையுள்ள பாவகாய் உட்கொண்டுவிட்டு விரதம் இருக்கக் கூடாது. முழுநேர விரதம் இருக்க முடியாதவர்கள் பகுதி நேரமாக விரதமிருக்கலாம் அல்லது பால், பழம் போன்ற பொருட்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த நான்கு பொருட்களை தவிர்த்து சைவ உணவுகளை உட்கொண்டு விட்டு நீங்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் விரதமிருந்து வழிபட்டால் முழுபலனும் கிடைக்கும் மேலும் நல்ல வரன் அமையும், சுபகாரியத் தடைகள் விலகும் என்பது ஐதீகம்.

- Advertisement -