ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

ayilyam-natchathiram
- Advertisement -

ஒரு மனிதனுக்கு சிறந்த அறிவாற்றலையும், பேச்சு திறனையும் தருபவர் நவகிரகங்களில் புதன் பகவான் அருள்கிறார். காக்கும் கடவுளான திருமால் இந்த புதன் பகவானின் அம்சம் கொண்டவராவார். எனவே புதனை வழிபடுபவர்கள் அந்த பெருமாளின் அருளையும் பெறுகின்றனர். விண்ணில் இருக்கும் நட்சத்திரங்களில் புதன் பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட நட்சத்திரமாக “ஆயில்யம்” நட்சத்திரம் இருக்கிறது. இந்த நட்சத்திரகாரர்கள் வாழ்வில் சிறப்பான பலன்களை பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

27 நட்சத்திர வரிசையில் ஒன்பதாவது நட்சத்திரமாக ஆயில்யம் நட்சத்திரம் வருகிறது. 12 ராசிகளில் ஆயில்யம் நட்சத்திரம் கடகம் ராசியில் வருகிறது. இந்த ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதியாக நவகிரகங்களில் புதன் பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக ஆதிசேஷன் இருக்கிறார். யோகிகளின் கருத்துப்படி ஆயில்ய நட்சத்திரம் குண்டலினி சக்தியை குறிக்கும் ஒரு நட்சத்திரமாக உள்ளது. சிறந்த பேச்சாற்றலும், திறமைகளும் கொண்ட ஆயில்யம் நட்சத்திரகாரர்கள் கீழ்கண்ட பரிகாரங்களை செய்வதன் மூலம் தங்களின் வாழ்வில் பல நன்மைகளையும், செல்வ செழிப்பையும் பெறலாம்.

- Advertisement -

ஒவ்வொரு புதன் கிழமையன்றும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி, அவருக்குரிய மந்திரங்களை துதித்து வணங்கி வருவதால் ஆயில்ய நட்சத்திரகாரர்களின் வாழ்வில் பொருளாதார நிலையில் ஏற்றமிகு பலன்களை பெறலாம். புதன் கிழமைகளில் விநாயக பெருமானையும் வழிபடுவது நல்ல பலன்களை கொடுக்கும்.

sivan

ஆதிசேஷன் பகவானுக்குரிய நட்சத்திரம் ஆயில்யம் என்பதால் இந்நட்சத்திரக்காரர்கள் எக்காரணம் கொண்டும் பாம்புகளை கொல்வதோ அல்லது துன்புறுத்தவோ கூடாது. மகாசிவராத்திரி, பிரதோஷம் போன்ற தினங்களில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுவதால் உங்களின் தோஷங்கள் நீங்கும். அமாவாசை தினங்களில் கடலில் சிறிது பால் ஊற்றி வழிபடுவது நல்லது. உங்கள் வீட்டில் இருக்கும் பூனைக்கு தினமும் அருந்த பால் தருவதால் உங்களை துஷ்ட சக்திகள் ஏதும் பாதிக்காது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
பஞ்சதீப எண்ணையில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ayilyam nakshatra pariharam in Tamil. It is also called Aayilyam nakshatra in Tamil or Ayilyam nakshatra adhipathi in Tamil or Ayilyam natchathiram valipadu in Tamil or Ayilyam natchathira dheivam in Tamil.

- Advertisement -