அழுக்கான வெள்ளை சட்டையை இப்படி துவைத்தால் இனி கையே வலிக்காது.

dress2
- Advertisement -

பொதுவாகவே கையில் துணி துவைப்பது என்பது ரொம்பவும் கஷ்டம் தான். அதிலும் குறிப்பாக வெள்ளைத் துணிகளை துவைப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். குழந்தைகள் தினமும் அணியக்கூடிய யூனிஃபார்ம் வெள்ளை சட்டை, வேலைக்கு செல்பவர்கள் போடக்கூடிய வெள்ளை சட்டை, இதில் படித்திருக்கும் விடாப்படியான அழுக்கை எளிமையாக நீக்க, கைவலிக்காமல் சோப்பு போடாமல் பிரஷ் போடாமல் வெள்ளை துணிகளில் இருக்கும் அழுக்கை நீக்க எளிமையான வீட்டு குறிப்பு இதோ உங்களுக்காக.

வெள்ளை துணிகளை சுலபமாக துவைக்க வீட்டு குறிப்பு

ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். (சட்டையை ஊற வைக்க உப்பு தண்ணீர் பயன்படுத்தக் கூடாது. நல்ல தண்ணீர் தான் பயன்படுத்தனும்). அதில் ஒரு ஸ்பூன் துணி துவைக்கும் பவுடர் அல்லது ஒரு ஸ்பூன் துணி துவைக்கும் லிக்விட் ஊற்றி, அடுப்பை உடனடியாக அணைத்து விடுங்கள்.

- Advertisement -

பவுடராக இருந்தால் அந்த பவுடர் தண்ணீரில் நன்றாக கரையும் படி ஒரு கரண்டியை வைத்து கலக்குங்கள். அடுத்து ஒரு சின்ன கிண்ணத்தில் பேஸ்ட் 1/2 ஸ்பூன் போட்டு, அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து, சூடாக இருக்கும் சோப்பு தண்ணீரில் ஊற்றி விடுங்கள். (சுடு தண்ணீரில் துணி துவைக்கும் பவுடர், வெள்ளை நிற பேஸ்ட் இரண்டு பொருட்கள் தான் சேர்க்கப் போறீங்க).

இப்போது நமக்கு தேவையான கலவை சுட சுட தயாராக உள்ளது. இதில் ஒன்று அல்லது இரண்டு வெள்ளை சட்டைகளை நனைத்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அந்த சட்டையை வெளியில் எடுத்து காலரை லேசாக கையால் கசக்கினாலே அதில் இருக்கும் அழுக்கு சுத்தமாக போய்விடும்.

- Advertisement -

தரையில் போட்டு எப்போதும் போல துணிகளை குமக்கி துவைப்போம் அல்லவா. அதேபோல லேசாக துவைக்கும் போது அதில் இருக்கும் அழுக்கு எல்லாம் நீங்கிவிடும். பிறகு நல்ல தண்ணீரில் அலசி வெயிலில் காய வைத்து விடுங்கள். தேவை என்றால் சட்டைக்கு சொட்டு நீளம் போட்டுக் கொள்ளலாம். கூடுதல் வெண்மை கிடைக்கும்.

இதே போல உங்களிடம் எத்தனை வெள்ளைத்துணிகள் இருக்கிறதோ அந்த அளவுக்கு தண்ணீரின் அளவையும், டிஷ் வாஷ் பவுடரின் அளவையும், பேஸ்டின் அளவையும் கூட்டிக் கொள்ளவும். தினம் தினம் இந்த குறிப்பை பின்பற்ற வேண்டாம். சட்டைகள் ரொம்பவும் அழுக்காகும் போது இந்த குறிப்பை பின்பற்றினால் போதும்.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் வாரத்தில் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை வெள்ளைத்துணிகளை இப்படி துவைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். மற்ற நாட்களில் எப்போதும் போல வாஷிங்மெஷினில் போட்டு துவைக்கலாம். இதே போல வெள்ளை சாக்ஸ் கூட துவைக்கலாம். சுலபமாக அதில் இருக்கும் அழுக்கு நீங்கும்.

சில பேருக்கு இந்த காட்டன் வெள்ளை சட்டை எல்லாம் ஸ்டிஃபாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சாதம் வடித்த கஞ்சியில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து வெள்ளை சட்டைகளை முக்கி எடுத்து நன்றாக உதறி, வெயிலில் காய வைத்தால் சட்டை ஸ்டிஃபாக இருக்கும். அப்படி இல்லை என்றால் கொஞ்சம் தண்ணீரில் கான்பிளவர் மாவை போட்டு கரைத்து அதை சூடு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கஷ்டப்பட்டு இனி துணிகளை அயன் செய்ய வேண்டாம். துவைக்கும் போதே துணிகளில் இருக்கும் சுருக்கத்தை நீக்க சூப்பரான ஐடியா.

அந்த தண்ணீர் கொஞ்சம் கொழகொழப்பாக கஞ்சி பதத்தில் வரும். தேவையான அளவு தண்ணீரில் இந்த கான்பிளவர் மாவில் காய்ச்சி வைத்திருக்கும் கொழகொழப்பு தன்மை கொண்ட கஞ்சியை ஊற்றி கலந்து, இதில் வெள்ளை சட்டையை முக்கி சுருக்கம் இல்லாமல் உதறி கொடியில் காய வைத்தால், சட்டை சுருக்கம் இல்லாமல் இருக்கும். இதே போல காட்டன் புடவைக்கும் கஞ்சி போடலாம். எளிமையான இந்த வீட்டு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -