கஷ்டப்பட்டு இனி துணிகளை அயன் செய்ய வேண்டாம். துவைக்கும் போதே துணிகளில் இருக்கும் சுருக்கத்தை நீக்க சூப்பரான ஐடியா.

shirt
- Advertisement -

பெரும்பாலும் துணிகளை துவைத்து, கசக்கி பிழிந்து காய வைத்த பிறகு அந்த துணிகளில் நிறைய சுருக்கம் இருக்கும். அந்த சுருக்கத்தை நீக்குவதற்கு சில பேர் கடையில் கொடுத்து அயன் செய்வார்கள். சில பேர் வீட்டிலேயே அயன் செய்து கொள்ளுவார்கள். எதுவாக இருந்தாலும் செலவுதான். துவைத்த துணிகளை, அப்படியே சுருக்கம் இல்லாமல், அயன் செய்தது போல மாற்ற ஏதாவது ஐடியா இருக்குதா. இருக்குங்க, இப்படி அடிக்கடி அயன் செய்து கஷ்டப்படுபவர்களுக்காகவே ஒரு சூப்பரான வீட்டு குறிப்பு இந்த பதிவில்.

துணிகளில் இருக்கும் சுருக்கம் நீங்க வீட்டு குறிப்பு

இந்தக் குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள் கான்பிளவர் மாவு. ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் கான்பிளவர் மாவு போட்டு, இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்து விடுங்கள். இதை அப்படியே அடுப்பில் வைத்து இரண்டிலிருந்து மூன்று நிமிடம் சூடு செய்தால் திக்காக ஒரு லிக்விட் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இது நன்றாக ஆறியதும் பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தலாம். இரண்டு அல்லது மூன்று துணிக்கு கஞ்சி போட வேண்டும். அந்த துணி சுருக்கம் இல்லாமல் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் இந்த லிக்விடை எப்படி பயன்படுத்துவது.

ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு தண்ணீரை எடுத்து, இரண்டு ஸ்பூன் அளவு நாம் காய்ச்சி வைத்திருக்கும் இந்த கான்பிளவர் மாவை அந்த தண்ணீரில் ஊற்றி கலக்கவும். இப்போது உங்களுக்கு எந்த துணி சுருக்கம் இல்லாமல் தேவையோ, அந்த துணியை இந்த கான்பிளவர் கலவை கலந்த தண்ணீரில் நன்றாக முக்கி எடுத்து, உதறி வெயிலில் காய வைத்தால் சூப்பரான சுருக்கம் இல்லாத ஆடைகள் காய்ந்த பிறகு நமக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

மொறுமொறுப்பாக கஞ்சி போட்டது போலவே உங்களுக்கு ஆடை இருக்கும். (இந்த கான்பிளவர் தண்ணீரில் முக்கிய துணியை காய வைக்கும் போது, துணியில் சுருக்கம் இல்லாமல் காய வைக்க வேண்டும்.) அப்போதுதான் அந்த ஆடை காய்ந்த பிறகு சுருக்கம் இல்லாமல் கிடைக்கும். உதாரணத்திற்கு தினமும் அலுவலகம் செல்பவர்கள், பள்ளிக்கூடம் செல்பவர்களுடைய சட்டைகள், குழந்தைகளுடைய வெள்ளை நிற யூனிபார்ம், காட்டன் துணிகள் இவைகளை இந்த முறையில் ஒரு முறை கஞ்சி போட்டு அலசி காய வைத்து பாருங்கள். சூப்பரான ரிசல்ட் கிடைக்கும்.

அரிசி வடித்து தான் அதில் கஞ்சி போட வேண்டும் என்ற கஷ்டம் இனி கிடையாது. இப்படி கான்பிளவர் மாவிலும் கஞ்சி செய்து துணிகளுக்கு போட்டு பலன் பெறலாம். எளிமையான வீட்டு குறிப்பு தான். உங்களுக்கு தேவை என்றால் ஒரு முறை இதை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: தினம் தினம் குடித்து விட்டு வரும் கணவரால் நிலை குலைந்து நிற்கும் பெண்கள் மனம் தளராமல் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தால் போதும். இனி குடிக்கும் திசை பக்கம் கூட உங்கள் கணவர் போக மாட்டார்.

பின்குறிப்பு: இதே போல நீங்கள் வெள்ளை துணிகளுக்கு கான்பிளவர் மாவு கலந்த தண்ணீரில் கஞ்சி போட வேண்டும் என்றால், அதில் சில சொட்டுக்கள் உஜாலா நீலத்தையும் சேர்த்து பயன்படுத்தலாம். வெள்ளை துணிகள் இன்னும் கூடுதல் வெண்மையை கொடுக்கும்.

- Advertisement -