யாராவது அழுவது போல கனவில் வந்தால் அல்லது நீங்கள் அழுவது போல கனவில் வந்தால் என்ன பலன் தெரியுமா?

cry-sad
- Advertisement -

கனவுகள் எல்லோருக்கும் வந்தாலும் அதில் ஒரு சில கனவுகள் மட்டுமே நம் நினைவில் நீங்காமல் இடம் பிடித்துவிடும். அப்படியான கனவுகளில் ஒன்று தான் அழுவது போன்று கனவு காண்பது என்பதும். அதுநாள் வரையில் இல்லாமல் திடீரென யாரோ ஒருவர் அழுது கொண்டே இருப்பது போல நம் கனவில் தோன்றினால் அதற்கு இப்படிக் கூட பலன்கள் இருக்க முடியுமா? இல்லை நீங்களே அழுவது போல கனவு கண்டால் என்ன பலன்? என்பதை அறிய மேற்கொண்டு இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

நீங்கள் அழுவது போல கனவில் வந்தால் உடனே பதட்டம் கொள்ள வேண்டாம். கனவில் நாம் அழுவது என்பது நம் ஆழ்மனதில் பதிந்து உள்ள எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பு தான். நிறைய விஷயங்களை நினைத்து மனமானது பதைபதைத்து கொண்டிருக்கும் ஆனால் அதனை வெளியில் காண்பிக்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே மனமானது புழுங்கிக் கொண்டிருக்கும். இந்த சமயத்தில் அதனை வெளிப்படுத்த கனவை பயன்படுத்திக் கொள்ளும்.

- Advertisement -

வெளியில் சொல்ல முடியாத சோகங்களை வைத்திருப்பவர்களுக்கு இது போன்ற கனவுகள் நிச்சயம் வரும் என்கிறது கனவு பலன். வெளியில் காட்ட முடியாத கோபம், சொல்ல முடியா துயரங்களை அடக்கி வைத்து இருப்பவர்களுக்கு கனவின் மூலம் அது நிறைவேறுகிறது. கனவில் அழுது தீர்த்து விட்டால் உங்கள் மனக் கவலைகள் கொஞ்சமாவது குறையும் என்று ஆன்மா நினைக்கிறது. நீங்கள் தனியாக இருக்கும் பொழுது மனதில் இருக்கும் கவலைகளை நினைத்து அழுது தீர்த்து விடுங்கள். அப்போது இது போன்ற கனவுகள் உங்களைப் பயமுறுத்தாது.

அது போல் மற்றவர்கள் உங்கள் கனவில் அழுவது போல நேர்ந்தாலும் நல்ல விஷயம் தான் நடைபெறப் போகிறது எனவே பயம் கொள்ள வேண்டாம். ரத்த உறவில் இருக்கும் யாரோ ஒருவருடைய துர்மரணம் ஆனது தடுக்கப்படும் பொழுது இது போல யாரோ ஒருவர் அழுவது போன்ற கனவு வருவது உண்டு. திடீரென நம் கனவில் நமக்கு நன்றாகத் தெரிந்த ஒருவரோ அல்லது யாரென்றே தெரியாத நபர் வந்து அழுது கொண்டிருந்தால் அதற்கு இப்படி தான் அர்த்தம்.

- Advertisement -

நமக்கு நன்றாகத் தெரிந்த ஒருவருடைய வாழ்வில் நடக்கும் துர் சம்பவங்கள், தலைக்கு வந்தது தலைப் பாகையோடு சென்று விட்டது போல வந்த வழியே திரும்பி சென்று விடும். இதனை உணர்த்தவே உங்கள் கனவில் இப்படி மற்றவர்கள் அழுவது போல தோன்றும் என்கிறது கனவு பலன், எனவே யாராவது அழுதாலும் அல்லது நீங்கள் அழுதாலும் அதை அபசகுனமாக நினைக்க வேண்டாம். யாரோ இறந்தது போல கனவில் வந்தால் குடும்பத்தில் யாரோ ஒருவருக்கு திருமணம் நடக்கும் என்றும் கூறப்படும். அது போல் ஒரு நிகழ்வு தான் இதுவும்! அழுவது போன்ற கனவு வந்தால், யாருக்கோ ஏதோ ஆபத்து என்று உடனே பதறிப் போக வேண்டாம். வர இருக்கும் ஆபத்தை தடுத்து நிறுத்தி அதை உணர்த்தவே இது போல அழுவது போன்ற கனவுகள் வருகின்றன.

எனவே எந்த ஒரு கனவுக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கும் ஆனால் அது மற்றவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் அமையாதது தான் ஆச்சரியம். ஒரு சிலருக்கு கனவு கலைந்து எழுந்து முடித்த பிறகு கனவில் தோன்றிய அனைத்தும் அப்படியே நியாபகம் இருக்கும். இது போன்ற கனவுகள் தான் குறிப்பால் நமக்கு இவற்றை உணர்த்துவதாக அமையும். நீங்கள் எழுந்ததும் உங்கள் கனவு மறந்து போய் விட்டது என்றால் அந்த கனவு உங்களுக்கு எதையும் உணர்த்தாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -