உங்களின் எத்தகைய பிரச்சனைகளையும் தீர்க்கும் மந்திரம் இதோ

sai-baba

வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்கிற தீவிர ஆர்வம் இன்று அனைவரிடமும் நிறைந்திருக்கிறது. அப்படி வெற்றி கிடைக்காத பட்சத்தில் எளிதில் மனம் தளர்ந்து மனச்சோர்வு அடைந்து எதிலும் கவனம் செலுத்தி செயல்பட முடியாத நிலையும் ஏற்படுகிறது. நமது கவலைகளை தீர்ப்பதற்காக இறைவனின் வடிவாக பூமியில் தோன்றியவர் தான் “ஸ்ரீ சீரடி சாய்பாபா” அவருக்குரிய எளிய மந்திரம் இதோ.

Sai baba

சாய்பாபா மந்திரம்

ஓம் சைதன்ய சாய்நாத் நமஹ

சீரடியில் வாழ்ந்த மகானான ஸ்ரீ சாய்பாபாவிற்குரிய எளிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை, இரவு என எப்போது உங்களுக்கு தோன்றும் போதும், எத்தனை முறை வேண்டுமானாலும் துதிக்கலாம். வியாழக்கிழமைகளில் வீட்டிலிருக்கும் சாய் பாபா படத்திற்கு முந்திரிப் பருப்புகள் சிலவற்றை நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து ஸ்ரீ சாய் பாபாவை வணங்குவதால் உங்களின் மனச்சோர்வுகள் நீங்கும். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எத்தகைய பிரச்சினைகளும் நீங்குவதற்கான வழியையும் காட்டுவார் ஸ்ரீ சாய் பாபா.

Sai baba padal

மனம் என்ற ஒன்று நமக்கு இருக்கும் வரை பிரச்சினைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். குழந்தைகள் மற்றும் ஞானிகள் இருவரும் கவலையின்றி இருப்பதற்கு காரணம் அவர்கள் மனம் அற்றவர்களாக இருப்பதால் தான். அப்படி குழந்தை மனம் கொண்ட ஒரு ஞானியாக அவதரித்தவர் தான் சீரடி சாய்பாபா. அவருக்குரிய இந்த எளிய மந்திரத்தை துதிப்பதால் எல்லாவித நன்மைகளும் நமக்கு கிடைக்க பாபா அருள் செய்வார்.

இதையும் படிக்கலாமே:
நோய்கள் நீங்க, வளமை பெருக மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Baba mantra in Tamil. It is also called as Sai baba mantra in Tamil or Shirdi sai baba sloka in Tamil or Prachanaigal theera in Tamil or Baba manthirangal in Tamil.