உங்கள் வீட்டில் விசேஷமா? அப்போது இந்த பலகாரத்தை செய்திடுங்கள். 100 பேர் வந்தாலும் அனைவருக்கும் தாராளமாக பரிமாறலாம்

gulab
- Advertisement -

இப்பொழுதெல்லாம் பிறந்த நாள், திருமண நாள், பெயர் வைக்கும் நாள் என பலவிதமான விசேஷ தினங்கள் கொண்டாடப்படுகின்றன. அதற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுப்பதும் அனைவரின் வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு இது போன்ற விசேஷ தினங்களில் வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் கொடுக்க வேண்டியது இனிப்பு தான். அப்படி வீட்டிற்கு பல பேர் வந்தாலும் அனைவருக்கும் விருப்பம் போல பகிர்ந்து கொடுக்க, இந்த சுவையான குலாப் ஜாமூனை செய்து கொடுங்கள். இதற்கு தேவையான பொருட்களும் இரண்டு தான். கோதுமை மற்றும் சர்க்கரை வைத்து இந்த சுவையான குலாப் ஜாமூனை விரைவாக செய்திட முடியும். அதிலும் இதன் சுவை அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். வாருங்கள் இந்த கோதுமை மாவு குலாப் ஜாமூனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், சர்க்கரை – ஒரு கப், ஏலக்காய்த் தூள் – அரை ஸ்பூன், பால் பவுடர் – இரண்டு ஸ்பூன், பால் – 2 டம்ளர், நெய் – 5 ஸ்பூன், கலர் பவுடர் – ஒரு சிட்டிகை, எண்ணெய் – கால் லிட்டர், உப்பு – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு பேன் வைத்து, அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். பிறகு ஒரு கப் கோதுமை மாவை இதனுடன் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின்னர் இதனுடன் 2 ஸ்பூன் பால் பவுடர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டு போட்டு மூடி, 15 நிமிடம் இந்த மாவை அப்படியே ஊறவிட வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் ஒரு கப் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு அரை ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை கலர் பவுடர் சேர்த்து, ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அனைத்து இந்த சர்க்கரை பாகை இறக்கி வைக்க வேண்டும். பிறகு மறுபடியும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, உருளை வடிவில் விரல் போன்று உருட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் உருட்டிக்கொண்டு, எண்ணையில் சேர்த்து, பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும். பின்னர் இந்த குலாப் ஜாமுனை சுட சுட சர்க்கரைப் பாகில் சேர்த்து, 4 மணிநேரம் ஊற வைத்து, அதன்பின் பரிமாறிக் கொடுத்துப் பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -