பக்குவமாக பாதுஷாவை இப்படி செய்தால், பதம் தவறவே தவறாது. பேக்கரி ஸ்டைல் பாதுஷா ரெசிபி உங்களுக்காக. இந்த தீபாவளிக்கு ட்ரை பண்ணி பாருங்க.

badusha
- Advertisement -

தீபாவளிக்கு இன்னும் ஒரு சில நாட்களில் பலகாரங்களை செய்ய தொடங்கி விடுவோம். அந்த பட்டியலில் இந்த பாதுஷாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நம்முடைய வீட்டிலேயே பக்குவமாக பேக்கரி ஸ்டைல் பாதுஷா எப்படி செய்வது. சரியான அளவுகளில் சரியான பக்குவத்தில் பாதுஷா ரெசிபி உங்களுக்காக. என்னதான் இனிப்பு பலகாரங்களை கடையில் காசு கொடுத்து வாங்கினாலும், நம் கையால் செய்த திருப்தி வருமா. உங்க கையால உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு இந்த பாதுஷாவை செஞ்சு கொடுத்து தீபாவளி பண்டிகையை சந்தோஷமாக கொண்டாடுங்கள். ரெசிபியை பார்க்கலாம்.

badusha3

கீழே சொல்லப்படும் பொருட்களுக்கான அளவுகளை ஒரே கப்பில் அளந்து கொள்ள வேண்டும். மைதா மாவை எந்த கப்பில் அளக்கிறீர்களோ, மற்ற பொருட்களையும், அதே கப்பில் அளந்து கொண்டால் சரியாக இருக்கும். உங்கள் வீட்டில் அரிசி அளப்பதற்கு ஆழாக்கு அல்லது டம்ளர் வைத்திருப்பீர்கள் அல்லவா அதைப் பயன்படுத்தி எல்லா பொருட்களையும் அளந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் 1 கப் மைதா மாவை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். அகலமான ஒரு பாத்திரத்தில் – 1/4 கப் தயிர், 1/4 – கப் நெய், 1/2 – ஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/2 – ஸ்பூன் ஆப்ப சோடா, 1/4 – ஸ்பூன் உப்பு, இந்த பொருட்களை செய்து உங்கள் கையைக் கொண்டு நன்றாக கலந்துவிட வேண்டும். இந்த கலவை க்ரீமி பக்குவத்திற்கு நமக்கு கிடைக்கும். இதோடு தயாராக எடுத்து வைத்திருக்கும் மைதா மாவை போட்டு சாஃப்டாக பிசைய வேண்டும். (நாம் சேர்த்திருக்கும் தயிர் நெய்யைக் கொண்டு முதலில் மாவை பிசைந்து விட்டு, தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளலாம்.)

badusha4

சப்பாத்தி மாவு போல அழுத்தம் கொடுத்து பிசைந்து விடாதீர்கள். பாதுஷா கட்டியாக வந்துவிடும். சாஃப்டாக குலோப்ஜாமூன் மாவு பிசைவது போல இந்த மாவை பிசைந்து ஒரு மூடி போட்டு 30 நிமிடங்கள் ஊற வைத்துவிட வேண்டும். மாவு நன்றாக ஊறிய பின்பு இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி அதன் நடுவே ஒரு சிறிய ஓட்டையை போட்டுக்கொள்ள வேண்டும். அந்த ஓட்டை பின்பக்கம் தெரியக்கூடாது. (பாதுஷாவை உருண்டை பிடிக்கும் போது கையில் அழுத்தம் கொடுக்கக்கூடாது.) இப்போது நமக்கு பாதுஷா பொரிப்பதற்கு தயாராக உள்ளது. இது ஒரு பக்கம் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது சர்க்கரை ஜீரா காய்ச்சவேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து மைதா அளந்த அதே கப்பில் 1 கப் அளவு சர்க்கரையை கடாயில் போட்டுக் கொள்ள வேண்டும். அதே கப்பில் 1/2 கப் தண்ணீரை ஊற்றி சர்க்கரையை நன்றாக கரைத்து கொதிக்க விடுங்கள். சர்க்கரை பிசுபிசுப்பு தன்மை வந்த உடனே அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த சர்க்கரைப் பாகில் 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி போட்டுக் கொள்ளுங்கள். கம்பிப் பதத்திற்கு சர்க்கரை பாகு போகக்கூடாது. (சர்க்கரைப்பாகு பிசுபிசுப்பு தன்மையுடன் தான் இருக்க வேண்டும். அப்போது தான் பாதுஷா சர்க்கரை பாகை உறிஞ்சும்.)

badusha2

இப்போது தயார் செய்து வைத்திருக்கும் பாதுஷாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து, சூடாக பொறித்த பாதுஷாவை, சூடாக இருக்கும் சர்க்கரை பாகில் போட்டு 15 நிமிடம் கழித்து எடுத்தால் சூப்பரான பாதுஷா நமக்கு கிடைத்துவிடும்.

badusha1

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயை ஊற்றி காயவைக்க வேண்டும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும்போது, பாதுஷாக்களை எண்ணெயில் போட்டு மிதமான தீயில் தான் பொரித்து எடுக்க வேண்டும். தீயை அதிகமாக வைத்து எண்ணெயை அதிகம் சூடு செய்து விட்டால் பாதுஷா மேலே கருகிவிடும். உள்ளே வேகாது. பொன்னிறமாக பக்குவமாக எண்ணெயில் பொரித்த பாதுஷாக்களை அப்படியே ஜீராவில் போட்டு 30 நிமிடம் கழித்து அதன் பின்பு எடுத்து சுவைத்துப் பாருங்கள். நீங்கள் நம்பமாட்டீங்க. இது கடையில் வாங்கிய பாதுஷாவை, நாம் செய்த பாதுஷாவா. ட்ரை பண்ணி பாருங்க நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும்.

badusha5

பின்குறிப்பு: பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர். பேக்கிங் பவுடர் வேறு, பேக்கிங் சோடா வேறு. சோடா உப்பு நம்முடைய எல்லா வீடுகளிலும் இருக்கும் ஆப்ப சோடா என்று சொல்லுவார்கள். பேக்கிங் பவுடர் என்பது பிஸ்கெட் செய்யப் பயன்படுத்துவார்கள் அல்லவா அதுதான் பேக்கிங் பவுடர். இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்தால் தான் பாதுஷாவின் பக்குவம் சரியாக நமக்கு கிடைக்கும்.

- Advertisement -