நாளை அதிசக்தி வாய்ந்த கால பைரவரின் ஜென்மாஷ்டமி. வாழ்க்கையில் இருக்கும் அத்தனை துன்பங்களும் விலக பைரவரை விரதமிருந்து எப்படி வழிபாடு செய்வது?

kala-bairavar-cash
- Advertisement -

முக்காலத்தையும் தன்கையில் கையில் வைத்துக்கொண்டு, இந்த உலகத்தையே காத்துக் கொண்டிருக்கும் மகா சக்தி வாய்ந்த காலபைரவர் அவதாரம் எடுத்த நன்னாள் தான் இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய அஷ்டமி திதி. நாளை அதாவது 27.11.2021 நாள் சனிக்கிழமை வரக்கூடிய தேய்பிறை அஷ்டமி, கால பைரவரின் ஜென்மாஷ்டமியாக அற்புதம் வாய்ந்த நாளாக சொல்லப்பட்டுள்ளது. சனீஸ்வர பகவானுக்கு குருவாக திகழ்பவர் காலபைரவர். ஆக, சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமையில் வந்திருக்கும் இந்த அஷ்டமி திதியில் கால பைரவரை வழிபட மறக்கவே கூடாது.

kaala bairavar

சிவனின் அம்சமாக இந்த பூலோகத்தில் அவதரித்த காலபைரவர் பிறந்த இந்த தேய்பிறை அஷ்டமி தினத்தன்று நாம் எந்த வரங்களை அவரிடம் கேட்டாலும் அது உடனே கிடைத்துவிடும். நாளைய தினம் காலபைரவருக்கு எப்படி விரதம் இருப்பது? எப்படி பூஜை செய்வது? என்பதைப் பற்றிய விரிவான விளக்கம் உங்களுக்காக இதோ.

- Advertisement -

இந்த பிரச்சனை உள்ளவர்கள் தான் நாளைய தினம் கால பைரவரை வழிபட வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. உங்களுக்கு தீராத கடன் பிரச்சனை இருந்தாலும் சரி, சனி தோஷம் இருந்தாலும் சரி, திருமண தடை இருந்தாலும் சரி, குழந்தை பாக்கியம் தேவை என்றாலும் சரி, மனக்கஷ்டம் பணக்கஷ்டம் எது இருந்தாலும் நாளை இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். நிச்சயம் நீண்டநாள் பிரச்சினைகளுக்குக் கூட சீக்கிரத்தில் விடிவு காலம் பிறக்கும்.

bairavar

நாளைய தினம் அதிகாலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு பைரவரை மனதார நினைத்து, ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து உங்களுடைய விரதத்தை தொடங்க வேண்டும். தெரிந்தால் பைரவர் உடைய காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப விரதத்தை மேற்கொள்ள வேண்டியது அவரவர் விருப்பம். நாளைய தினம் முழுவதும் எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருக்க முடிந்தால் இருக்கலாம். முடியாதவர்கள் பால்பழம் சாப்பிட்டும் விரதத்தை மேற்கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் மருந்து மாத்திரை சாப்பிடுபவர்கள் மூன்று வேளை சாப்பாடு சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம் தவறு கிடையாது.

- Advertisement -

நாளைய தினம் பைரவர் சன்னதிக்கு சென்று மனதார வேண்டிக்கொண்டு உங்கள் வேண்டுதல் நிறைவேற பஞ்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். 5 மண் அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய், விளக்கெண்ணெய், ஒவ்வொரு விளக்கிலும் தனித்தனியாக ஊற்றிக்கொள்ள வேண்டும். ஒரு எண்ணெயோடு மற்றொரு எண்ணெயை நிச்சயமாக கலக்கக்கூடாது. 5 மண் அகல் தீபங்கள், ஐந்து எண்ணெய்களை தனித்தனியாக ஊற்றி திரிபோட்டு பைரவர் சன்னதியில் மேற்கு பார்த்தவாரு தீபம் ஏற்ற வேண்டும்.

deepam8

பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடலாம். தயிர்சாதம் நிவேதனமாக வைக்கலாம். முந்திரி பருப்பு, சர்க்கரை பொங்கல் நிவேதனமாக வைத்து அர்ச்சனை செய்துவிட்டு, அங்கு வரும் பக்தர்களுக்கு இந்த பிரசாதத்தை விநியோகம் செய்யலாம். பைரவருக்கு செவ்வரளி பூவால் அர்ச்சனை செய்வது மிக மிக சிறப்பானது. ராகு காலத்தில் பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பானது என்று சொல்லுவார்கள். நாளைய தினம் சனிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து 10.30 மணி வரை ராகு கால நேரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

arali

உங்களால் முடியும் பட்சத்தில் கோவிலில் அமர்ந்து பைரவருக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது மேலும் சிறப்பினை தேடித்தரும். தீராத கடன் சுமையால் அவதிப்பட்டு வருபவர்கள், ஏவல் பில்லி சூனியம் கோர்ட் கேஸ் வழக்குகளில் சிக்கி தவிப்பவர்கள் எதிரியின் தொல்லையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நாளைய தினம் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலனடையலாம். உங்களுக்கான பைரவரின் காயத்ரி மந்திரம் இதோ.

curd-rice

பைரவர் காயத்ரி மந்திரம்:
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்

praying-god1

மேல் சொன்ன எல்லாவற்றையும் விட, வழிபாடுகளில் மிக மிக முக்கியமான ஒன்று மனத்தூய்மை. சுயநலமில்லாத அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத மனதோடு இருக்கையை கூப்பி பைரவரிடம் மனதார வேண்டுதல் வைத்தாலும் சரிதான். நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை வைப்பார் தீர்த்து வைப்பார் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை. நாளைய தினம் அனைவரும் பைரவர் வழிபாட்டின் மூலம் பலன் பெற வேண்டும் என்று சிவபெருமானை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -