செய்யும் தொழிலில் பன்மடங்கு லாபம் பெற சனிப்பிரதோஷத்தன்று செய்ய வேண்டிய காரியம் என்ன? சனி பகவான் நவகிரகங்களில் ஒருவராக எப்படி நியமிக்கப்பட்டார் தெரியுமா?

bairavar-sani
- Advertisement -

பிரதோஷ தினங்களில் சனி பிரதோஷம் என்பது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மற்ற பிரதோஷங்களை விட சக்தி வாய்ந்தது ஆகும். இக்கால கட்டத்தில் நாம் வணங்க வேண்டிய தெய்வம் என்ன? இவரை வணங்க வியாபாரத்தில் பன்மடங்கு லாபம் காணலாம்! மேலும் எதிரிகள் தொல்லை நீங்கவும், பில்லி-சூனியம் போன்ற பிரச்சனைகள் தீரவும், இழந்த சொத்துக்களை மீட்கவும் இந்த வழிபாடு செய்து வரலாம்! அப்படி நாம் செய்ய வேண்டிய வழிபாடு என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sani-baghavan

நவகிரகங்களில் ஒருவராக கம்பீரமாக வீற்றிருக்கும் சனி பகவான் எப்படி அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் தெரியுமா? சனி பகவான் சூரியனுடைய புதல்வனாக பிறந்தவராவார். இது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதே போல யம லோகத்தை கட்டியாளும் எமதர்ம ராஜாவும் சூரிய பகவானுடைய புதல்வன் தான். தனது மூத்த சகோதரனாக இருக்கும் எமதர்மராஜாவால் ஒருமுறை சனீஸ்வர பகவான் அவமானப்படுத்தப்பட்டார். தன்னை அலட்சியப்படுத்திய சகோதரனை நினைத்து மனம் வருந்திக் கொண்டிருந்த சமயத்தில் தாய் சாயா தேவியிடம் சென்று முறையிட்டார்.

- Advertisement -

அவர் தன் மகனுக்கு பைரவரை இவ்வாறு வழிபட்டு வா! என்று கூறிய அறிவுரையின் படி, சனி பகவான் பைரவரை தொடர்ந்து வழிபட்டார். இதன் பலனாக நவகிரகங்களில் ஒருவராக பைரவருடைய அருட் கண் பார்வையால் நியமிக்கப்பட்டு பெருமைப் படுத்தப்பட்டார். இதனால் பைரவரை வழிபட சனி தோஷங்கள் அத்தனையும் கண்டிப்பாக நீங்கும் என்பது நியதி. பைரவர் சிவபெருமானுடைய ரூபங்களில் ஒருவராகத் திகழ்கின்றார்.

kala-bairavar

சனிபகவானுக்கு பதவி கொடுத்ததால் பைரவரை வழிபட்டு வந்தால் சனி பகவான் நம்மை எதுவும் செய்வது இல்லை. சனி பகவானால் தீராத துன்பங்களை அனுபவித்து வரும் ஜாதகக்காரர்கள் தவறாமல் பைரவ வழிபாடு செய்து வாருங்கள்! நல்ல பலன் கிடைக்கும். சனி பிரதோஷ தினத்தில் பைரவருக்கு தயிர் சாதம், தேன், தேங்காய் ஆகிய பொருட்களை நிவேதனமாக படைத்து, சிகப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

எவர் ஒருவர் இப்படி செய்து வருகிறார்களோ! அவர்களுக்கு வழக்கில் வெற்றி, வியாபாரத்தில் பன்மடங்கு லாபமும் உண்டாகும். மேலும் எவ்வளவு கொடூர எதிரிகள் இருந்தாலும் அவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து விடும். பில்லி, சூனியம், ஏவல் போன்ற கெடு விஷயங்களில் இருந்து விடுபட்டு நல்வாழ்வு பெறலாம். தீராத வியாதிகள் தீரவும், இழந்த பொருள்களை மீட்டு எடுக்கவும் பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம்.

el deepam

சிறிய அளவிலான வெள்ளை துணியில் 27 மிளகுகள் போட்டு மூட்டையாக கட்டி, புதிய அகல் விளக்குகளில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி அவருடைய சந்நிதியில் வைக்க வேண்டும். இப்படி மிளகு தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் அப்படியே நிறைவேறும். பைரவர் வழிபாட்டின் பொழுது சகஸ்ரநாம அர்ச்சனை செய்வது செல்வம் பெருகவும் வழி வகுக்கும். வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் வில்வ அர்ச்சனை செய்து பைரவரை வழிபட்டு வந்தால் எத்தகைய துன்பங்களும் தொலைந்து சகல சம்பத்துக்களும் உங்களுக்கு கிடைக்கப் பெறும்.

- Advertisement -