தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு பலன்கள்

swarna bairavar

ஒரு மாதத்தில் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் “எட்டாவது” தினமாக வருவது “அஷ்டமி” தினம். இந்த அஷ்டமி தினம் வளர்பிறை அஷ்டமி மற்றும் தேய்பிறை அஷ்டமி என ஒரு மாதத்தில் இரு முறை வருகிறது. அதிலும் இந்த “தேய்பிறை அஷ்டமி” தினம் தெய்வ வழிபாடுகள் செய்வதற்கு மிகச்சிறப்பான ஒரு தினமாகும். குறிப்பாக “ஸ்ரீ பைரவர்” வழிபாட்டிற்கு சாலச் சிறந்த தினமாகும். இந்த தேய்பிறை அஷ்டமி அன்று எல்லா சிவன் கோவில்களிலும் பைரவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கும்.

bairavar

அன்றைய தினத்தில், மாலையில் சிவன் கோவிலில் நடக்கும் பைரவர் பூஜையின் போது, பைரவருக்கு உகந்த “செவ்வரளி” பூக்களை சமர்ப்பித்து, செவ்வாழைப்பழங்களை நைவேதியம் வைத்து, நெய் தீபம் ஏற்றி “ஓம் ஸ்ரீ பைரவாய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை கூறி வழிபட, நமது வாழ்வில் வறுமை நிலை நீங்கி செல்வம் சேரும். திருமணம் தள்ளி போய்க் கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்கும். நீண்ட நாட்களாக நோய்களால் அவதியுறுபவர்களுக்கு, அந்நோய்கள் சீக்கிரத்தில் நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
துன்பங்களை போக்கும் பைரவர் மந்திரம்

மேலும் இந்த தேய்பிறை அஷ்டமி அன்று தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட, வழக்கு விவகாரங்களின் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களையும், உங்கள் வீட்டையும் பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் நீங்கும்.