பேக்கரி ‘பன்’ இவ்வளவு சுலபமாக நம்ம வீட்டிலேயே செய்ய முடியுமா? அது எப்படி! நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா?

bun4

பேக்கரிகளில் விற்கும் பன்னை நம்முடைய வீட்டிலேயே, முட்டை சேர்க்காமல், ஓவன் இல்லாமல் சுலபமாக செய்ய முடியும். பொதுவாகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த சாஃப்டான பன், நம்முடைய வீட்டில் செய்தால் அம்மாக்களுக்கு அது மிகப் பெரிய சந்தோசத்தை கொடுக்கும். உங்கள் குழந்தைகளுக்கு நீங்களும், உங்கள் கையாலேயே பன் செய்து தர வேண்டும் என்ற ஆசை இருக்கா?  இந்த குறிப்பை முழுமையாக படித்து, இன்னைக்கு ஈவ்னிங் இந்த பன் ரெசிபியை, உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

bun2

Step 1:
முதலில் ஒரு 125ml அளவு பாலை எடுத்து சூடுபடுத்தி, ஆற வைத்துக் கொள்ளுங்கள். அந்த பால் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் பாலோடு, டிரைடு ஈஸ்ட் 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன், சேர்த்து நன்றாக கலக்கி, மூடி போட்டு 20 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள். இந்த ஈஸ்ட் நன்றாக புளித்து தயாராக 20 நிமிடங்கள் எடுக்கும்.

Step 2:
20 நிமிடங்கள் கழித்து, ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் அளவு, மைதா மாவு எடுத்து கொள்ள வேண்டும். சரியாக 250 கிராம் அளவு மைதா. இந்த மைதா மாவில், தயாராகியிருக்கும் ஈஸ்ட் கலந்த பாலை ஊற்றி, உங்களுடைய விரல்களால் மாவை பிசைந்து கொடுக்க வேண்டும். 250 கிராம் அளவு மாவுக்கு இந்த பாலே போதுமானது. தேவைப்பட்டால் மட்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.

bun3

மாவு சற்று பிசுபிசுப்புத் தன்மையோடு தான் இருக்கும். இருப்பினும் 5 நிமிடங்கள் வரை மாவை நன்றாக பிசைந்து, மாவின் மேல் பக்கத்தில், 2 டேபிள் ஸ்பூன் அளவு நெய் ஊற்றி தடவி, ஒரு மூடி போட்டு 1 மணி நேரம் வரை ஊற வைத்துவிடுங்கள். (மாவு வரண்டு போகாமல் இருப்பதற்காக, மேலே நெய் அல்லது எண்ணை எதை வேண்டுமென்றாலும் தடவிக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்.)

- Advertisement -

Step 3:
ஒரு மணி நேரம் கழித்து மாவை திறந்து பார்த்தால், மாவு ஊறி நன்றாக பொங்கி உபிரியாகி இருக்கும். இந்த மாவை மீண்டும் எடுத்து 5 நிமிடங்கள் பிசைந்து, மாவை நான்கிலிருந்து ஐந்து பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும். 250 கிராம் அளவு மைதா மாவில் நான்கு பன், சரியான சிறிய அளவில் கிடைக்கும்.

bun

Step 4:
நான்கு பாகங்களாக பிரித்து இந்த உருண்டைகளை, உள்ளங்கைகளில் வைத்து லேசாக உருட்டி பன் வடிவத்தில் தயார் செய்து கொள்ளுங்கள். மேலே படத்தில் காட்டியவாறு தயார் செய்துவிட்டோம். இட்லி தட்டில் கொஞ்சமாக அடியில் எண்ணை தடவி விட்டு, தயார் செய்திருக்கும் உருண்டைகளை தட்டில் அடுக்கி விடுங்கள். தட்டில் அடக்கிய மாவுகள் இருபதிலிருந்து 25 நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிட வேண்டும். உரிய பன் வடிவ மாவு நன்றாக உப்பி இருக்கும்.

bun1

Step 5:
மாவு ஒருபக்கம் ஊறட்டும். உங்களுடைய வீட்டில் தடிமனான கடாய் இருந்தால், அதை நன்றாக சூடு படுத்தி விட்டு, அதில் தயாராக இருக்கும் இட்லி தட்டை வைத்து ஒரு மூடி போட்டு 15 லிருந்து 20 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும். தடிமனான கடாய் இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் குக்கரை பயன்படுத்திக் கொள்ளலாம். குக்கரை முதலில் நன்றாக சூடு செய்து விட்டு, அதனுள்ளே ஒரு கலவையை வைத்து விட்டு, அதன் மேல் இட்லி தட்டை வைத்து விடுங்கள்.

இட்லி தட்டு இல்லை என்றாலும் பரவாயில்லை. சாதாரண தட்டில் எண்ணெய் தடவி மாவு உருண்டைகளை தனித்தனியாக அடுக்கி, களவடையின் மேல் வைத்து, ஒரு மூடி போட்டு மிதமான தீயில் வேக வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

bun5

வேகவைத்த 15வது நிமிடத்தில் பன்னின் மேல் நிறம், பிரவுன் கலராக மாறி வரும் பக்குவத்தில் அடுப்பிலிருந்து கீழே இறக்கி, நன்றாக ஆற வைத்து, அதன் மேலே லேசாக நெய் தடவி, பளபளப்பாக பரிமாறி பாருங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் பிடிக்கும். (அடுப்பில் வைத்து 15 நிமிடங்கள் லிருந்து 20 நிமிடங்களுக்குள் பண்ணை கீழே எடுத்து வைத்து விட வேண்டும். இல்லை என்றால் பன் ரஃப்பாக மாறிவிடும்).

இதையும் படிக்கலாமே
சமையலறையில் பெண்கள் செய்யக்கூடாத தவறுகளில் இதுவும் ஒன்று. இனி இந்தத் தவறை நீங்க செய்யாதீங்க! உங்க வீடு நல்லா இருக்க இந்த தவறை திருத்திக் கொள்வது நல்லது.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.