பல்லி நம்மீது விழுவதால் ஏற்படும் தோஷங்களை நீக்கும் பரிகாரம்

இந்து மத தத்துவங்கள், நியதிகள் படி அனைத்து வகையான உயிர்களும் இறைவனின் படைப்புகளே. கண்களால் காண முடியாத சிறு உயிரினங்களில் இருந்து கடலில் வாழும் திமிங்கலம் வரை இருக்கும் அனைத்தும் இறைவனின் பல்வேறு ரூபங்கள் என இந்துக்கள் கருதுகின்றனர். இதில் பல விலங்குகள் காட்டில் வாழ்ந்தாலும், நம்முடைய இல்லங்களில் நமது உதவிகள் ஏதும் இன்றி சில சிறிய உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று தான் “பல்லி”. பல்லி கத்துவது, பல்லி நம்மீது விழுவது போன்றவற்றிற்கு நெடுங்காலமாகவே ஆன்மீக ரீதியான பலன்கள் இருப்பதாக கருதப்படுகிறது. அந்த வகையில் பல்லி நம்மீது விழுவதால் ஏற்பதும் தோஷங்களை நீக்குவதற்கான பரிகாரங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

நமது புராணங்களின் படி கவுதம ரிஷியால் சபிக்கப்பட்ட அவரின் சீடர்களே பல்லி வடிவில் இருப்பதாக கருதப்பட்டுகிறது. நமது ஆன்மீகம் மற்றும் ஜோதிட சாத்திரத்தின் படி பல்லி, தெய்வீக சக்தியை கொண்ட ஒரு உயிரனமாக கருதப்படுகிறது. எனவே பல்லியை கொல்வது, துன்புறுத்துவது போன்ற செயல்கள் தோஷங்களை ஏற்படுத்தும் என்பது முன்னரின் கருத்து. நமது வீட்டில் இருக்கும் பல்லிகள் சில சமயங்களில் நமது உடலின் பல பாகங்களில் விழுந்து விடுகிறது. இப்படி பல்லி விழுவதால் நமக்கு ஏற்படவிருக்கும் நன்மை, தீமைகளை குறிக்கும் அறிகுறிகளாக கருதப்படுகிறது. பல்லி விழுவதால் ஏற்படும் தோஷங்களை போக்குவதற்கான பரிகாரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பல்லி உங்கள் உடலில் “உச்சந்தலை, முகம், இடது கரம்,இடது உள்ளங்கை, இடது கண், உதடு, வலது – இடது தொடைகள்,கால் விரல்கள், இடது கால், கணுக்கால்கள், முதுகு” ஆகிய பகுதிகளில் பல்லி விழுந்தால் பொருள் நட்டம் , பிறருடன் பிரச்சனை, உடல்நல கோளாறுகள், மரண பயம் முதலியவற்றை குறிக்கும் அறிகுறிகளாக கருதப்படுகிறது.

பல்லி விழுந்தால் அதை குறித்து வீணான பயங்ளையும், கவலைகளையும் உண்டாக்கிக்கொள்ளாமல் முதலில் உங்களின் இஷ்ட தெய்வத்தை மனதில் தியானித்து வணங்கினாலே போதும். இதையும் மீறி பல்லி விழுந்ததால் தோஷம் ஏற்பட்டதாக கருதும் நபர்கள் பல்லி விழுந்த பிறகு நன்கு தலைக்கு ஊற்றி குளித்த பிறகு, அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, தீபம் ஏற்றி இறைவனை வணங்க வேண்டும். “மகா ம்ரித்யுஞ்ஜய மந்திரம்” படித்து வருவதால் பல்லி விழுந்த தோஷம் நீங்கும். பல்லி விழுவதால் ஏற்படும் தோஷங்களையும், பல்லியை கொன்றதால் ஏற்படும் தோஷங்களும் நீங்க காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று, அங்கிருக்கும் “தங்க பல்லி” சந்நிதியில் இருக்கும் தங்க பல்லியின் உருவத்தை தொட்டு வணங்குவதால் பல்லி சம்பந்தமான அதனை தோஷங்களும் நீங்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
மூல நட்சத்திர தோஷ பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:

Here we have Balli dosham pariharam in Tamil. It is also called as Palli dosham pariharam in Tamil or palli vilum pariharam in Tamil or pariharam for palli vilum palangal in Tamil.