வீட்டில் வாழைப்பழம் மட்டும் இருந்தா 10 பைசா செலவில்லாமல் நம்ம முகத்தை பளிங்கு போல 10 நிமிடத்தில் மாற்றலாமே!

banana-face-pack
- Advertisement -

சரும அழகையும், சரும நிறத்தையும் மேம்படுத்த ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அவ்வபோது முயற்சி செய்து கொண்டு தான் இருப்போம். அழகு நிலையங்களுக்கு சென்று பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பேசியல், ப்ளீச்சிங் போன்றவை செய்தாலும் அவை நிரந்தரமான தீர்வாக இருந்து விடாது. இதனால் 10 பைசா செலவில்லாமல் வீட்டிலேயே என்ன செய்யலாம்? என்று தான் பலரும் யோசிப்போம். அப்படி செலவே இல்லாத எளிமையான முக அழகு குறிப்பு ஒன்றைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நம்ம வீட்டில் அதிகமாக இருக்கும் பழம் வாழைப்பழம். எல்லோருடைய வீட்டிலும் வாழைப்பழம் தாராளமாக கிடைக்கக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது. இந்த ஒரு பொருள் சருமத்தில் ப்ளீச்சிங் ஏஜெண்டாக செயல்படும். மேலும் சருமத்தை வறண்ட தன்மையிலிருந்து தக்க வைத்து ஈரப்பதத்தை அளிக்கக்கூடிய அற்புதமான ஆற்றல் கொண்டுள்ளது.

- Advertisement -

சிறிதளவு வாழைப்பழத்தை மசித்து வைத்துக் கொள்ளுங்கள். மசித்த வாழைப்பழத்துடன் 1 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து, முகத்தில் முதலில் ஸ்க்ரப்பர் போல ஸ்கரப் செய்யுங்கள். வெறும் அரிசி மாவை கொண்டு நீங்கள் ஸ்கிரப் செய்யும் பொழுது முகத்தில் ஒருவிதமான எரிச்சல் உண்டாகும். இதை எரிச்சலை வாழைப்பழம் உங்களுக்கு அடக்கி விடும்.

ஸ்க்ரப் செய்யும் பொழுது முகத்தில் இருக்கும் மெல்லிய கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் நீங்கும். மேலும் இறந்த செல்களும் வெளியேறும். அதன் பிறகு மசித்த வாழைப்பழம் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை ஸ்பூன் தேன், அரை ஸ்பூன் தயிர், ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை பேஸ்ட் போல முகம் முழுவதும் தடவி உலர விட்டு விடுங்கள்.

- Advertisement -

பத்திலிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் நன்கு உலர்ந்து காய்ந்து விடும். அதன் பிறகு முகத்தை ஈர துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இது வறண்ட தன்மையில் இருந்து ஈரப்பதத்துடன் நம்முடைய முகத்தை வைத்திருக்க உதவும். ஏற்கனவே ஈரப்பதத்துடன் அல்லது எண்ணெய் பசையுடன் இருக்கக்கூடிய சருமம் கொண்டவர்கள் இதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் பிசுக்குள்ள சருமம் கொண்டவர்கள் வாழைப்பழ மசியலுடன் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, தேவையான அளவிற்கு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் நீங்கள் அப்ளை செய்யும் பொழுது உங்களுடைய முகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான எண்ணெய் பிசுக்குகளை நீக்கி, முகத்தை பளிங்கு போல பொலிவுடன் வைத்துக் கொள்ள உதவும்.

இதையும் படிக்கலாமே:
கட்டுக் கடங்காமல் காடு போல அழகிய கருங்கூந்தலை பெற இந்த எண்ணெய் மட்டும் உங்க கிட்ட இருந்தா போதும். அப்புறம் பாருங்க உங்க பேச்சை கேக்காம முடி வளந்துட்டே போகும்.

சாதாரண சருமம், சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் மசித்த வாழைப்பழத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கற்றாழை மடலிலிருந்து கிடைக்கக்கூடிய ஜெல்லை ஃப்‌ரஸ்சாக எடுத்து கரைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் இருந்தால் ரெண்டு சொட்டுகளை கலந்து கொள்ளுங்கள். பின்னர் இதை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் நன்கு ஊறிய பின்பு ஈரத்துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சென்சிட்டிவான சருமம் மிருதுவாக மாறும். தொடர்ந்து வாரம் ஒரு முறை இதை நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க, பார்லருக்கு போகாமலேயே முகம் பளிங்கு போல இயற்கையாகவே ஜொலிக்க ஆரம்பிக்கும்.

- Advertisement -