பட்டுப் போன்ற பளப்பளக்கும் பால் போன்ற சருமம் வேண்டுமா? இந்த ஒரு பேக்கை ட்ரை பண்ணுங்க. நாம வேண்டாம்னு தூக்கி போட்ட இந்த பொருளில் இப்படி ஒரு பேரழகை பெற முடியுமான்னு ஆச்சரியப்படுவீங்க.

beauty face banana face pack
- Advertisement -

முகம் வெள்ளையாகவும் பளிச்சென்று மாறுவும் இயற்கையான வழிமுறைகள் பல உள்ளது. இந்த அழகு குறிப்பு பதிவில் அப்படி ஒரு இயற்கையான ஃபேசியல் பேக்கை எப்படி தயார் செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதுவும் அதற்கு பயன்படுத்த போகும் இந்த பொருளை பற்றி இது வரை பலரும் கேள்விப்படாத ஒன்றாகவே இருக்கும் அது என்னவென்று இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முகம் வெள்ளையாக மாற நாம் எந்த ஒரு ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதாக இருந்தாலும் அதற்கு முதலில் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும் இவை இரண்டும் செய்த பின் தான் முகத்திற்கு ஃபேஸ் பேக் போட வேண்டும். அப்போது தான் அதற்கான பலன் நமக்கு முழுவதுமாக கிடைக்கும்.

- Advertisement -

முகத்தில் பேக் போடுவதற்கு முன்பாக ஒரு பவுலில் காய்ச்சாத பால் ரெண்டு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பஞ்சை தொட்டு நனைத்த பிறகு அதை உங்கள் முகம் முழுவதும் ஒற்றி எடுத்த பிறகு ஒரு சுத்தமான காட்டன் துணி வைத்து துடைத்து விடுங்கள்.

அடுத்ததாக நாம் பயன்படுத்த போகும் இந்த பொருள் தான் இதைக் கூட பயன்படுத்தலாமா என நீங்கள் ஆச்சரியப்படுத்தப் போகும். அது வேறொன்றுமில்லை வாழைப்பழ தோல் தான். வாழைப்பழத்தில் ஃபேஸ் பேக் போடலாம். இது அனைவருக்கும் தெரிந்தது தான். வாழைப்பழத்தின் தோல் கூட பயன்படுமா என்பது கொஞ்சம் வித்தியாசமான தகவல் தான்.

- Advertisement -

இந்த வாழைப்பழ தோலை வைத்து தான் முகத்தை ஸ்கிரப்பிங் செய்ய வேண்டும். முகத்தில் முகப்பருக்கள் ஏதும் இல்லை என்றால் இதில் சிறிதளவு சர்க்கரை கூட சேர்த்து முகத்தில் தேய்க்கலாம். முகப்பரு இருந்தால் சர்க்கரை சேர்க்காமல் வெறும் வாழைப்பழத் தோலை மட்டும் வைத்து உங்கள் முகம் கை கால்களில் நன்றாக ஒரு தேய்த்த பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து உங்கள் முகத்தை துடைத்து விடுங்கள்.

முகம் வெள்ளையாக மாற வாழைப்பழம் ஃபேஸ் பேக்:
இதற்கு ஒரு பவுலில் அரை வாழைப்பழத்தை எடுத்து ஒரு கரண்டி வைத்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். இத்துடன் மூன்று டேபிள் ஸ்பூன் பால் கலந்து கொள்ளுங்கள். அத்துடன் மூன்று ஸ்பூன் தேன் இவை மூன்றையும் சேர்த்து நன்றாக கலந்தால் நல்ல ஒரு பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும். இதை கரண்டி வைத்து கைகளால் மசித்து கொள்ளுங்கள். மிக்ஸியில் போடக் கூடாது.

- Advertisement -

இந்த ஃபேஸ் பேக்கை உங்கள் முகம் கழுத்து கை கால்களில் கூட போடலாம். இதை போட்ட பிறகு ஐந்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்த பிறகு இந்த பேக்கை பத்து நிமிடம் உங்கள் முகத்தில் விட்டு விட்டு அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து முகத்தை சுத்தம் செய்து விடுங்கள். அடுத்து ஒரு சுத்தமான காட்டன் டவலை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் மூக்கி பிழிந்து ஈரமாக உள்ள அந்த டவலை உங்கள் முகத்தில் போட்டு ஐந்து நிமிடம் அப்படியே ரிலாக்ஸ் ஆக இருங்கள். இதன் மூலம் உங்கள் முகத்தில் மாய்ஸ்டரைசர் எதுவும் போடாமலே முகம் நல்ல மிருதுவாகவும் இதற்கு முன் போட்ட பேக் உங்கள் முகத்திலும் சென்று சுலபமாக வேலை செய்ய இந்த முறை உதவும்.

இதையும் படிக்கலாமே: தலைமுடி உதிர்வுக்கு முடிவு கட்டும் விளக்கு எண்ணெய்

நம் வீட்டில் கிடைக்கும் பொருட்கள் அதுவும் இயற்கையான பொருட்களை வைத்து மிகவும் சுலபமான இந்த பேக்கை தொடர்ந்து போடும் போது முகம் மிகவும் மிருதுவாகவும், அதே நேரத்தில் வெள்ளையாகவும் மாறி பட்டு போன்ற பால் சருமம் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -