உங்க முடியும் இப்படித்தான் முட்டிக்கால் தொடும் வரை முடிவில்லாமல் வளரும். விளக்கெண்ணெயை வாரம் ஒரு முறை இப்படி தடவினால்.

hair10
- Advertisement -

நூற்றுக்கு 90 சதவீதம் பேருக்கு இப்போது முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது. எல்லோராலும் நிறைய செலவு செய்து ஹேர்பேக் போட்டுக் கொள்ள முடியாது. விலை உயர்ந்த ஹேர் ஆயில் வாங்கி தடவிக் கொள்ள முடியும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் எல்லோராலும் 10 ரூபாய் செலவு செய்து விளக்கெண்ணெய் வாங்க முடியும். பத்து ரூபாய்க்கு கீரை வாங்கி சமைத்து சாப்பிட முடியும். சத்தான காய்கறிகளை வாங்கி சமைத்து சாப்பிட முடியும் அல்லவா. சத்தான கீரைகள், சத்தான காய்கறிகளை சாப்பிட்டு கூடவே விளக்கெண்ணெயை வாங்கி, பின் சொல்லக்கூடிய முறையில் தலையில் தேய்த்து வந்தாலே போதும். தலைமுடி நெடுநெடு என நீளமாக வளர்ந்து செல்லும்.

தலைமுடி உதிர்வுக்கு முடிவு கட்டும் விளக்கு எண்ணெய்:
தலைமுடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணையை விட சிறந்த ஒரு எண்ணெய் இந்த உலகத்திலேயே கிடையாது. ஆனால் அதில் பிசுபிசுப்பு, அதிகம். விளக்கெண்ணெய் வாடை சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது. சில பேருக்கு அதை அப்படியே தலையில் நேரடியாக வைத்தால் அதிக குளிர்ச்சி ஏற்பட்டு தலைவலி, சளி, ஜுரம் வரும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் இல்லாமல், விளக்கெண்ணெய் சரியான முறையில் தலையில் எப்படி வைப்பது.

- Advertisement -

ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான விளக்கெண்ணெய் 3 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். இதை டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்ய வேண்டும். ஒரு பெரிய பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதன் மேலே இரண்டு எண்ணெயும் ஒன்றாக கலந்து வைத்திருக்கிறோம் அல்லவா அந்த கிண்ணியை வைத்து, சூடு செய்து கொள்ளுங்கள். எண்ணெய் லேசாக வெதுவெதுப்பாக சூடானதும், இந்த வெதுவெதுப்பான எண்ணெயை சூடு ஆறுவதற்குள் தலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வெதுவெதுப்பான எண்ணெயே தலையில் தேய்க்கும் போது அவ்வளவு எளிதில் சளி பிடிக்காது. முடியை பாகம் பாகங்களாக பிரித்துக் கொண்டு, முதலில் வேர்க்கால்களில் படும்படி எண்ணெயை வைத்துவிட்டு, அதன் பின்பு நுனி முடி வரை இந்த எண்ணெயை தடவி ஒரு மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசி விடுங்கள்.

- Advertisement -

வாரத்தில் இரண்டு நாள் இந்த குறிப்பை பின்பற்றலாம். முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் இந்த குறிப்பை பின்பற்றினால் கூட போதும். உங்களுடைய முடி உதிர்வு குறைந்து முடி வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்கும். (மரச்செக்கு விளக்கெண்ணெய், மரச்செக்கு தேங்காய் எண்ணெயாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் அது ரொம்ப ரொம்ப முக்கியம்.)

முடியை அலசி வந்த பிறகு, ஈர முடியோடு முடியை துண்டில் அடித்து உதறக் கூடாது. துண்டை வைத்து கரகரவென தேய்த்து துடைக்க கூடாது. ஜென்டில் ஆகத்தான் தலையில் இருக்கும் ஈரத்தை துடைத்து எடுக்க வேண்டும். ஃபேன் காற்றில் அமர்ந்தாலே தலைமுடி நன்றாக ஈரம் போக காய்ந்து விடும். தலைமுடி நன்றாக ஆறிய பின்பு பெரிய பல் சீப்பை வைத்து ஜென்டில் ஆக தலைமுடியில் இருக்கும் சிக்கை நீக்கிவிடுங்கள்.

இதையும் படிக்கலாமே: மென்மையான பட்டு போன்ற பாதங்கள் பெற நூற்றுக்கணக்கில் செலவு செய்து பெடிக்யூர் செய்யணுமா என்ன? வீட்டிலேயே 10 பைசா செலவில்லாமல் செய்யலாமே!

விலை மலிவாக நம் வீட்டு பக்கத்தில் இருக்கும் காய்கறி கடையில் கிடைக்கும் பச்சைக் கீரை வகைகள், பச்சை காய்கறிகள், நெல்லிக்காய் இப்படிப்பட்ட பொருட்களை ரெகுலராக சாப்பிட்டு வந்தாலே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும். குறிப்பாக முருங்கைக்கீரை சாப்பிடுங்கள். வாரத்தில் ஒரு நாள் முருங்கை கீரை சாப்பிட்டால் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைவாக கிடைக்கும். மேலே சொன்ன அழகு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -