வாழைப்பழ ஹேர் மாஸ்க்

banana hair mask
- Advertisement -

முடி உதிர்தல் பிரச்சினை என்பது பலருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றுதான் என்றாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அனைவருக்கும் அதிக அளவில் முடி உதிர்தல் பிரச்சினை என்பது ஏற்படும். அதிலும் குறிப்பாக வெயில் காலம். வெயில் காலத்தில் உடலின் உஷ்ணம் காரணமாக முடி உதிர்தல் பிரச்சினை என்பது பலரும் சந்திக்கக்கூடிய பிரச்சினையாக திகழ்கிறது. இப்படிப்பட்ட பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு வாழைப்பழத்தை வைத்து எப்படி ஹேர் மாஸ் தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

உடல் சூட்டின் காரணமாக முடி உதிர்தல் பிரச்சனை என்பது ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். இதற்காக பலரும் வெந்தய ஹேர் பேக்கை பயன்படுத்துவார்கள். அனைவராலும் இதை பயன்படுத்த முடியாது. ஒரு சிலருக்கு இதை பயன்படுத்துவதன் மூலம் சைனஸ் பிரச்சினை ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் சளி பிடித்தலுக்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத்தை வைத்து எப்படி ஹேர் மாஸ்க் செய்யலாம் என்று பார்ப்போம்.

- Advertisement -

இதற்கு நமக்கு நன்றாக கணிந்த வாழைப்பழம் வேண்டும். நம்முடைய தலைமுடிக்கு ஏற்றவாறு ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக நாட்டு வாழைப்பழம் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். இதை ஒரு பவுலின் வைத்து ஸ்பூனை வைத்தோ அல்லது மத்தை வைத்தோ நன்றாக மசித்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் நன்றாக புளித்த அரை கப்பு தயிரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்கள் மட்டும் இருந்தாலே போதும்.

இந்த ஹேர் மாஸ்கை நாம் உபயோகப்படுத்துவதற்கு முன்பாக நம் தலைமுடியில் லேசாக எண்ணையை தடவிக் கொள்ள வேண்டும். முதலில் தலையை நன்றாக சிக்கெடுத்து எண்ணெய் தடவி கால் மணி நேரம் கழித்து இந்த ஹேர் மாஸ்கை நம்முடைய தலையில் வேர்க்கால்களில் படும் அளவிற்கு நன்றாக தடவிக்கொள்ள வேண்டும். பிறகு இதை ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற வைத்துவிட்டு கெமிக்கல் குறைவாக இருக்கக்கூடிய ஷாம்புவை பயன்படுத்தி தலையை அலசி விட வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்வதன் மூலம் வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சத்துக்களும் நம் முடிக்கு நல்ல போஷாக்கை தரும் மேலும் தயிரில் இருக்கக்கூடிய சத்துக்களால் நம் முடி பட்டு போன்று மிருதுவாகவும் அதேசமயம் பொடுகு பிரச்சனை இல்லாமலும் பார்த்துக் கொள்ள முடியும். இது உடலில் இருக்கக்கூடிய உஷ்ணத்தை நீக்கி முடி உதிர்தல் பிரச்சனையை குறைக்க உதவுகிறது.

இதையும் படிக்கலாமே: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு அருமையான டிப்ஸ்

வெயில் காலம் ஆரம்பித்த பிறகு வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம் உடல் உஷ்ணத்தால் ஏற்படக்கூடிய முடி உதிர்தல் பிரச்சனையை நிறுத்தி முடியை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும்.

- Advertisement -