அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு அருமையான டிப்ஸ்

long hair tips
- Advertisement -

நல்ல நீளமான அடர்ந்த கருங்கூந்தலை விரும்பாத பெண்கள் யாரும் கிடையாது அனைத்து பெண்களுக்கும் தங்களுடைய முடி கருமையாகவும் காலுக்கு கீழே சுரண்டு வளர்ந்து பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அது எட்டாக்கனியை போன்று தான் உள்ளது. அதனாலயே பலரும் முடி வளர்க்க விரும்புவதில்லை.

இந்த முடி வளர்ச்சி பலருக்கு இயற்கையில் நன்றாக இருக்கும் ஒரு சிலரை பார்த்தால் எந்தவித பராமரிப்பும் செய்யவில்லை என்றாலும் முடி நன்றாக இருக்கும். இப்போதைய சூழ்நிலை அதற்கு சாதகமானதா என்றால் சந்தேகம் தான். ஏனெனில் அந்த அளவுக்கு நம்முடைய சுற்றுச்சூழல் உணவு பழக்க வழக்கங்கள் வாழ்வியல் முறை அனைத்தும் மாறி விட்டது.

- Advertisement -

இப்படியான இந்த காலத்திலும் கூட நீண்ட அடர்த்தியான கருத கூந்தலை பெற முடியும் அதற்கு ஒரு எளிமையான அதே நேரத்தில் நல்ல பையனை தரக் கூடிய ஒரு குறிப்பை பற்றி தான் அழகு குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முடி நீளமாக வளர
இந்த முறைக்கு நாம் ஒரு சீயக்காய் பொடியை தயார் செய்ய வேண்டும். சீயக்காய் என்றதும் பலருக்கும் கொஞ்சம் அச்சமாகவே இருக்கும். ஏனெனில் அதில் சேர்க்க வேண்டிய பொருட்கள் பல இருக்கும். அனைத்து பொருள்களையும் காய வைத்து அரைத்து பத்திரப்படுத்தி பயன்படுத்துவது கொஞ்சம் சிரமம் என்று யோசிப்பார்கள்.

- Advertisement -

அப்படியே பயன்படுத்தினாலும் ஷாம்பு பயன்படுத்துவது போல சீயக்காய் பயன்படுத்தும் போது நுரை வராது தலைக்கு குளித்தது போன்று உணர்வும் இருக்காது. அது போல அல்லாமல் ஒரு வித்தியாசமான முறையில் இந்த சீயக்காய் அரைக்கலாம் வாங்க அது எப்படி என்று பார்க்கலாம்.

இந்த முறையில் சீயக்காய் அரைக்க ஒரு கிலோ அளவு சீயக்காய் வாங்கி இரண்டு நாள் மட்டும் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கப் பச்சரிசி கால் கப் வெந்தயம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காலை தலைக்கு குளிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் இன்று சாதம் வடித்த கஞ்சியை எடுத்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலையில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து இந்த கஞ்சியை ஊற்றி சூடு படுத்துங்கள். கஞ்சி சூடாகி கொதிக்கும் பொழுது சேர்க்கையை சேர்த்து கைவிடாமல் சிறிது நேரம் கலரினால் கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வந்து விடும் இது பேஸ்ட் போலவும் ஆகி விடக்கூடாது. இதை ஆற வைத்து இந்த கலவை கொண்டு தலைக்கு தேய்த்து நன்றாக முடியை அலசி விடுங்கள்.

இதில் சேர்த்து இருக்கும் பச்சரிசி வெந்தயம் இவை எல்லாம் முடியில் இருக்கும் அழுக்கு எண்ணெய் பிசுக்கு போன்றவற்றை சுத்தமாக நீக்கி விடும். அதுமட்டுமின்றி முடி உதிர்வு பொடுகு தொல்லை போன்றவை தடுத்து முடி நன்றாகவும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

இந்த முறையில் அரைக்தும் ஷாம்பு போல நுரை வந்தால் தான் திருப்தியாக இருக்கும் என நினைப்பவர்கள், இத்துடன் 50 கிராம் பூந்திக்கொட்டை மட்டும் காய வைத்து அதில் இருக்கும் கொட்டையை நீக்கி விட்டு சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்காலமே: சிவப்பழகு பெற ஃபேஸ் பேக்

இந்த முறை நம் பாட்டி காலத்தில் இருந்து பயன்படுத்தியது தான். ஆனால் பலரும் இது தெரியாமல் இருக்கும் அப்படியானவர்கள் இந்த முறையை தெரிந்து கொண்டு பயன்படுத்தி நல்ல அழகான ஆரோக்கியமான முடி வளர்ச்சி பெறுங்கள்.

- Advertisement -