வீட்டில் வாழைப்பழம் அதிகமாக இருந்தா வேஸ்ட் பண்ணாம சட்டுனு இந்த போளி செஞ்சு கொடுங்க. போளின்னா இப்படித் தான் இருக்கணும்னு சொல்ற அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

banana wheat poli
- Advertisement -

பெரும்பாலும் இந்த போளியை யாரும் அதிகமாக வீட்டில் செய்ய மாட்டார்கள். இதற்கு காரணம் இதை செய்ய அதிக நேரம் பிடிக்கும் அதிக பொருட்கள் செலவு செய்ய வேண்டும் என்பதால் தான். இவ்வளவு சிரமப்பட்டு இதை செய்வதற்கு கடைகளில் வாங்கி விடலாம் என்ற எண்ணத்துடன் தான் பெரும்பாலும் இருப்பார்கள். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ரொம்பவும் எளிமையாக சீக்கிரத்தில் செய்யக் கூடிய ஒரு அருமையான போலி ரெசிபியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

செய்முறை

இந்த போலி செய்ய முதலில் ஒரு பௌலில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பின்ச் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்த பிறகு இதை நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அப்படியே தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள். பொதுவாக போலி மைதா மாவில் அதிகமான எண்ணெய் சேர்த்து செய்வார்கள் இந்த முறையில் கோதுமை மாவை வைத்து செய்யும் போது எண்ணெய்யும் கூட அவ்வளவு செலவு ஆகாது.

- Advertisement -

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் 10 முந்திரி பருப்பு, பத்து பாதாம் பருப்பு, ரெண்டு ஏலக்காய் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதே ஜாரில் நன்றாக பழுத்த நிலையில் உள்ள வாழைப்பழம் மூன்று எடுத்து சின்ன சின்னதாக நறுக்கி சேர்த்து அதையும் நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் பேன் வைத்து சூடானதும் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிய பிறகு கால் கப் ரவையை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இதற்கு வறுத்த ரவை தான் சேர்க்க வேண்டும். வறுக்காத ரவை எனில் தனியாக வறுத்த பிறகு சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்து வாழைப்பழத்தை இதில் ஊற்றி லேசாக கலந்து விடுங்கள். வாழைப்பழத்தில் உள்ள தண்ணீர் எல்லாம் ரவை முழுவதுமாக உறிஞ்சி நன்றாக திரண்டு வரும்.

- Advertisement -

இப்போது இதில் கால் கப் நாட்டு சர்க்கரையை சேர்த்த பிறகு மீண்டும் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி நன்றாக கிளறுங்கள். இந்த சர்க்கரையில் ஏற்கனவே சேர்த்து இருக்கும் ரவை வாழைப்பழம் எல்லாம் நன்றாக கலந்து வரும் கடைசியாக என் கனவில் கொடுத்து வைத்த பாதாம் முந்திரி பருப்பு பவுடரை சேர்த்து நன்றாக கலந்து விட்டால் போளியில் வைக்க கூடிய சுவையான ஸ்டஃபிங் தயார். இது கை பொறுக்கும் சூடு வந்தவுடன் மீடியமான சைஸ் உருண்டை பிடித்து வைத்து விடுங்கள்.

அடுத்ததாக நாம் ஏற்கனவே பிசைந்து வைத்த கோதுமை மாவை எடுத்து கொஞ்சம் தடியாக சின்ன சப்பாத்தி போல திரட்டி கொள்ளுங்கள். அதன் உள்ளே நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்த ஸ்டப்பிங் உருண்டையை வைத்து இந்த கோதுமை மாவை மேலாக நன்றாக மூடி உருண்டை பிடித்து விடுங்கள். அதன் பிறகு மறுபடியும் கொஞ்சம் கோதுமை மாவை தொட்டு இந்த மாவை சப்பாத்தி போல எவ்வளவு மெலிதாக உருட்ட முடியுமோ உருட்டிக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: முள்ளங்கியை வைத்து மிகவும் அற்புதமான சுவையில் ஒரு துவையலை செய்து கொடுத்தால் வீட்டில் இருக்கும் இட்லி, தோசை, சாதம் என்று அனைத்தும் காலியாகி விடும்.

அடுத்து அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக பிறகு அடுத்து மிதமான தீயை மாற்றிய பிறகு திரட்டிய பொலிகளை இதில் சேர்த்து கொஞ்சமாக நெய் ஊற்றி இரண்டு புறமும் லேசாக சிறந்த பிறகு எடுத்து விட்டால் அருமையான வாழைப்பழம் போளி தயார். இப்படி மட்டும் ஒரு முறை செய்து பாருங்கள் இனி போலி வாங்க கடைக்குப் போகவே மாட்டீங்க.

- Advertisement -