உங்கள் வீட்டில் வாழைமரம் இருந்தால் போதும், 10 பிரச்சனைகள் 10 நொடியில் தீர்ந்துவிடும்.

banana-tree

வாழை மரம் என்பது தெய்வீக மரமாக பார்க்கப்படுகின்றது. ஆன்மீகத்தில் பல பரிகாரங்களையும், தாந்திரீக முறைகளிலும் அதிக அளவில் வாழைமரம் பங்கெடுத்துக் கொள்கிறது. வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழும் வாழை மரத்தை வீட்டில் பின்பக்கம் வளர்ப்பது சகல நன்மைகளையும் வழங்கும் ஆற்றலைப் பெற்று தரும். சில குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு இந்த வாழை மரத்தை வைத்த எளிய பரிகாரங்கள் செய்து பலன் காணலாம். இவைகள் ரகசியமாக செய்யப்படும் பரிகாரம் முறைகளாக இருக்கின்றன. அது பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவில் காணலாம்.

vaazhai-poo

எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கைகளில் பணம் தங்கவில்லை. ஏதாவது ஒரு செலவு வந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள், பணம் தங்குவதற்கான இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பார்க்கலாம். நீங்கள் வாங்கும் சம்பள பணத்தை உங்கள் வீட்டில் இருக்கும் வாழை மரத்திலிருந்து, வாழைப்பூ இதழ் ஒன்றை எடுத்துக்கொண்டு அதில் உங்கள் சம்பள பணத்தை வைத்து பூஜை அறையில் பூஜை செய்த பின்னர் அதிலிருந்து செலவு செய்து வந்தால், வீண் விரயங்கள் உண்டாகாது. இதேபோல் நீங்கள் வாங்கும் நகைகளையும், நல்ல காரியங்களுக்காக எடுத்து வைத்திருக்கும் பணத்தையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜை செய்து, பின்னர் எடுத்து பயன்படுத்தினால் ஐஸ்வரியம் பெருகும்.

திருமணம் தடைபட்டுக் கொண்டிருக்கும் ஆண்களும், பெண்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்தால், விரைவில் திருமண யோகம் கைகூடி வரும். உங்கள் வீட்டில் இருக்கும் வாழை மரத்தின் வாழைப்பூவை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்து ஒரு இதழ் மட்டும் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பெண்ணாக இருப்பின் மூன்று என்ற எண்ணிக்கையில் குண்டு மஞ்சளை அந்த இதழில் வைத்து, நன்றாக மடித்து வாழை நார் கொண்டு முடிந்து கொள்ளுங்கள். இதனை வாழை குலை தள்ளும் இடத்தில் வாழையோடு சேர்த்துக் கட்டி விடுங்கள். அதுவே நீங்கள் ஆணாக இருந்தால், 3 குண்டு மஞ்சளுக்கு மாற்றாக 3 கொட்டை பாக்கை வைத்து முடிந்து கொண்டு இதேபோல் செய்யுங்கள். இந்த பரிகாரத்தை சஷ்டி திதி பார்த்து செய்ய வேண்டும். இதுபோல் மூன்று சஷ்டி திதிகளில் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும். நம்பிக்கையோடு செய்து பலன் பெறுங்கள்.

rettai-vazhai-pazham

குழந்தை பாக்கியம் எதிர் நோக்கி காத்திருக்கும் தம்பதியர்களுக்கு உங்கள் வீட்டில் இருக்கும் வாழை மரமே நல்ல தீர்வு தரும். வாழை குலை தள்ளுவது போல, உங்கள் வம்சமும் விருத்தியடைய இந்த எளிய பரிகாரத்தை செய்து பார்க்கலாம். தம்பதியராக சேர்ந்து வாழைப்பழத்தையும், வாழை மரக்கன்றையும் தானமாக அளிப்பது பெரும் பாக்கியத்தைப் பெற்று தரும். உங்கள் வீட்டில் வளரும் வாழை மரக்கன்று ஒன்றை தானமாகக் கொடுக்க, குடும்பத்தில் நல்ல செய்திகள் வரும். ரெட்டை வாழைப்பழம் கிடைத்தால், கோவிலிலோ அல்லது வீட்டிலோ இறைவனின் பாதத்தில் வைத்து, குழந்தையாக இருக்கும் முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து இரவில் இரட்டை வாழைப்பழத்தை நகம் படாமல், காய்ச்சிய பாலுடன் சேர்த்து, சுத்தமான தேனை அதனுடன் கலந்து, தம்பதியர் இருவரும் பருகி வந்தால் கூடிய விரைவில் தொட்டில் காட்டும் யோகம் கிடைக்கும்.

- Advertisement -

அமாவாசை திதிகளில் தர்ப்பணம் கொடுக்கும் பொழுது, 100 கிராம் கருப்பு எள்ளுடன், வெல்லம் கலந்து உருண்டை பிடித்து ஐந்தாக பிரித்து, வெள்ளைத் துணிகளில் மஞ்சள் நூலால் முடிந்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் வாழை மரத்தின் வாழைக்காய்களில் ஐந்து வாழைக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த முடிப்பை ஒவ்வொன்றாக காம்புடன் கட்டிக்கொள்ளுங்கள். திதி கொடுக்கும் பொழுது, கடலில் இவற்றை விட்டுவிட்டால் போதும். பித்ரு தோஷம் அனைத்தும் நீங்கிவிடும். உங்களின் முன்னோர்களின் மனம் குளிர்ந்து அவர்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும்.

raw-banana

தொழில் மற்றும் வியாபார வளர்ச்சிக்காக உங்கள் வீட்டில் இருக்கும் வாழைமரத்தை இந்த வகையில் பயன்படுத்தினால் நன்மைகள் உண்டாகும். உங்கள் வீட்டில் வளரும் வாழை மரத்தில், வடக்கு முகமாக உள்ள வாழை மரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பௌர்ணமி அன்று ஆயுதங்கள் மற்றும் நகங்கள் படாமல், அந்த வாழை மரத்தின் வேரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த வேருடன் கஸ்தூரி மஞ்சள் கிழங்கு ஒன்றை வைத்து சிகப்பு நூல்கொண்டு முடிந்து கொள்ளுங்கள். இதனை சுக்கிர ஓரையில் செய்வது தான் முறை ஆகும். இவற்றை தொழில் நடக்கும் இடங்களில் மற்றும் வியாபார ஸ்தலங்களில் வைத்து தூபம் காட்டி வந்தால் வியாபாரம் பன்மடங்காக பெருகும். வாடிக்கையாளர் எண்ணிக்கை உயரும். தொழில் சிறக்கும். இவைகள் அனைத்தும் தாந்த்ரீக முறையில் பலன் கண்ட பரிகாரங்கள். இந்த பரிகாரங்களை முழு நம்பிக்கையுடன் செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் வாழை மரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வாழை மரம் அல்லாதோர் வாழையை வளர்த்து நன்மைகள் பெறுங்கள்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் வற்றாத செல்வ வளத்தை பெற, பெண்கள் புதன்கிழமை அன்று கட்டாயம் இதை செய்ய வேண்டும்..

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vazhai maram pariharam Tamil. Vazhai maram in Tamil. Vazhai maram payangal in Tamil. Vazhai maram uses in Tamil. Vazhai maram payangal.