சூப்பரான இந்த பெங்களூரு வடையை செய்ய வெறும் 5 நிமிடம் போதுமே. டீ கொதிக்கும் சமயத்தில் இந்த வடையை சுட்டு அசத்துங்க.

vadai
- Advertisement -

ஈவினிங் டீ டைமுக்கு இந்த பெங்களூரு வடை சூப்பரா இருக்கும். மாவு அரைக்க வேண்டாம். கஷ்டப்பட வேண்டாம். சட்டுனு வீட்டில் இருக்கும் சில பொருட்களை போட்டு பிசைந்தால், வடை மாவு ரெடி. உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கக்கூடிய சில பொருட்களையும் நாம் இதில் சேர்க்கப் போகிறோம். கஷ்டப்படாமல் ஆரோக்கியத்தோடு ஒரு ஸ்நாக்ஸ் செய்ய வேண்டுமென்றால் இந்த ரெசிபியை இன்னைக்கு சாயங்காலம் ட்ரை பண்ணி பாருங்க.

ஒரு அகலமான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மீடியம் சைசில் இருக்கும் பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது – 2, மிகப் பொடியாக துருவிய இஞ்சி – 1 ஸ்பூன், மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு, உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை போட்டு முதலில் உங்கள் கையைக் கொண்டு நன்றாகப் பிசைந்துவிடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு இந்த கலவையோடு பச்சரிசி மாவு – 1 கப், மைதா – 1/2 கப், ரவை – 1/4 கப், உடைத்த வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், எள்ளு – 2 டேபிள் ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு மீண்டும் நன்றாக கலந்து விடுங்கள். அதன் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து, இந்த மாவை சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைய வேண்டும். சப்பாத்தி மாவை விட ஒரு நூல் கொஞ்சம் தளதளவென பிசைந்து, இறுதியாக 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, மீண்டும் பிசைந்தால் வடை செய்வதற்கு மாவு தயார்.

சிறிய சிறிய உருண்டைகளாக இந்த மாவை உருட்டி கொள்ளுங்கள். ஒரு உருண்டையை எடுத்து உங்களுடைய உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி, எண்ணெயில் விட்டு மிதமான தீயில் பொன்னிறம் வரும் வரை சிவக்க வைத்து எடுத்து சுட சுட ஒரு புதினா சட்னியோடு, ஒரு தேங்காய் சட்னியோடு தொட்டு சாப்பிட்டுப்பாருங்கள். அவ்வளவு ருசியாக இருக்கும்.

- Advertisement -

இந்த வடையை தட்டும்போது ரொம்பவும் தடிமனாக தட்ட வேண்டாம். ரொம்பவும் மெலிசாகவும் தட்ட வேண்டாம். மீடியம் சைஸில் தட்டி கொண்டால் உள்ளே வேக வசதியாக இருக்கும்.

பருப்பு ஊற வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கிரைண்டரில் மிக்ஸி ஜாரில் மாவு அரைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து, இந்த வடையை அருமையாக சுட்டு எடுக்கலாம். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா யோசிக்காம ஒரு முறை ட்ரை பண்ணுங்க. சூப்பரா இருக்கும்.

- Advertisement -