பாஸ்மதி அரிசியை வைச்சு எப்படி சமைச்சாலும் பிரியாணி புலாவ் எல்லாம் குழைஞ்சு போயிடுதா, இதோ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க இதுக்கப்புறம் இந்த சமையல்ல நீங்க தான் சமையல் ராணி.

- Advertisement -

பிரியாணி, புலாவ், வெஜ் ப்ரைட் ரைஸ் இப்படியான வகைகளில் சுவை, நிறம் இதற்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரி உதிரியாக இருப்பதுதான். அப்படி இருந்தால் தான் இந்த சாதத்திற்கு எல்லாம் ஒரு மரியாதை. ஆனால் சிலர் எப்படி செய்தாலும் மற்ற பக்குவங்கள் மசாலா, சுவை எல்லாமே சரியாக செய்தாலும் சாதத்தை சரியான பதத்தில் எடுப்பதில் கோட்டை விட்டு விடுவார்கள். இதனால் சாதம் குழைந்து அவர்கள் எப்படி செய்தாலும் அந்த சமையலுக்கான பாராட்டை அவர்களால் வாங்கவே முடியாது. இந்த பிரச்சனை நன்றாக சமைக்க தெரிந்தவர்களுக்கும் கூட இருக்கத்தான் செய்கிறது இனி அது போன்று இல்லாமல் பாஸ்மதி அரிசியை கொண்டு நீங்கள் செய்யும் எந்த சமையலிலும் சாதம் குழையாமல் உதறி உதிரியாக வர இதோ இந்த டிப்ஸை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் பாஸ்மதி அரிசி வாங்கும் போது அரிசியை பார்த்து நல்ல தரமான அரிசியாக வாங்க வேண்டும். அதாவது பச்சை அரிசி போன்று வெள்ளை வெளேரென்று இருக்கும் அரிசியை வாங்கக்கூடாது. புழுங்கல் அரிசி போல சற்று நிறம் மங்கலான அரிசியை தான் வாங்க வேண்டும் அது தான் கொஞ்சம் நின்று வேகும் உங்களுக்கு இந்த சாதமும் குழையாமல் இருக்கும்.

- Advertisement -

இரண்டாவது இப்படி வாங்கிய அரிசியை மூன்று அல்லது நான்கு முறை அரிசி உடையாமல் லேசாக கழுவி தண்ணீரை வடித்து விட வேண்டும். இப்படி செய்யும் போது அந்த அரிசியில் உள்ள ஸ்காட்ச் எல்லாம் வெளியேறிவிடும். நீங்கள் சமைக்கும் போது அரிசியில் லேசான ஒரு பிசுபிசுப்பு தன்மை போல இருக்கும். எப்படி கழுவும் போது அந்த பிசுபிசுப்பு தன்மை போய்விடும்.

மூன்றாவதாக இப்படி நீங்கள் கழுவிய பாஸ்மதி ரைஸ் 10 நிமிடம் மட்டுமே ஊற வைக்க வேண்டும். அதற்கு மேல் ஊற வைத்தால் அரிசி கட்டாயமாக உடைந்து விடும். நீங்கள் எந்த வெரைட்டீ ரைஸ் செய்வதாக இருந்தாலும் அல்லது வெள்ளை சாதமாக வடிப்பதாக இருந்தாலும் தண்ணீர் கொதித்த பிறகு தான் பாஸ்மதி அரிசியை போட வேண்டும். போட்ட பிறகு ஒரே ஒரு முறை லேசாக துழவி விட்டாலே போதும் மீண்டும் மீண்டும் கிளறி விடக்கூடாது அரிசி உடைந்து விடும்.

- Advertisement -

அதே போல் நீங்கள் அரிசியை போட்டு கொதிக்கும் போது அந்த தண்ணீரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி விடுங்கள். இதன் மூலம் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக இருக்கும். உங்களுக்கு சாதம் வெள்ளை வெளேரென்று வர வேண்டும் என்றால் இத்துடன் ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: மணம் வீசும் மல்லிகை பூவை வைத்து மணக்க மணக்க காரசாரமான ரசம் வைக்கலாம் வாங்க.

அதே போல் சாதம் முழுவதுமாக வேகம் வரை விடக்கூடாது ஒரு 90% வரை வெந்தாலே போதும். அது பிறகு உங்களுக்கு சாதம் வடிக்க தெரிந்தால் அப்படியே வடித்து விடுங்கள். இல்லையெனில் ஒரு வடை ஜல்லியில் கொட்டி தண்ணீர் வடிந்ததும் எடுத்து ஒரு அகலமான தட்டில் ஆற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறைகளை தெளிவாக தெரிந்து கொண்டு, நீங்கள் அடுத்த முறை சாதம் வடிக்கும் போது குழையாமல் உதிரி உதிரியாக வடித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -