அட உப்புக் கறை படிந்த பாத்ரூம் டைல்ஸ்யை, நியூஸ் பேப்பர் வச்சு கிளீன் பண்ணலாமா? இந்த டிப்ஸ் கொஞ்சம் புதுசா இருக்குல வாங்க அது என்னன்னு தெரிஞ்சிக்கலாம்.

- Advertisement -

இப்போதெல்லாம் நல்ல தண்ணி என்பதற்கு வாய்ப்பே இல்லை. அப்படி வேண்டும் என்றால் நிச்சயமாக பணம் கொடுத்து தான் வாங்க வேண்டும். குடிக்க சமைக்க வாங்கிக் கொள்ளலாம் மற்ற எல்லாவற்றுக்கும் இப்படி நல்ல தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி நம்மால் செலவழிக்க முடியாது. ஆகையால் பெரும்பாலும் மற்ற உபயோகங்களுக்கு வீட்டில் இருக்கும் சாதாரண உப்புத் தண்ணீரை தான் பயன்படுத்திகிறோம்.

இந்த உப்பு தண்ணீரை பயன்படுத்துவதால் ஏற்படும் மிகப்பெரிய சிக்கல் பாத்ரூம் டைல்ஸில் படியும் கறை. மற்ற இடங்களை ஏதையாவது தேய்த்து சுத்தம் செய்து விடுவோம். ஆனால் இந்த பாத்ரூம் டைல்ஸ் சுத்தம் செய்வது பெரிய போராட்டம் தான். அப்படி தினமும் தேய்த்து விட்டாலுமே கூட உப்பு தண்ணீரை பயன்படுத்துவதால் எப்படியும் ஆங்காங்கே கறை படிந்து விடும். இதை பார்க்கவே நமக்கு அருவருப்பாக இருக்கும். அப்படி உப்புக்கறை படிந்த டைல்ஸ் கூட பத்து நிமிடத்தில் நியூஸ் பேப்பரை வைத்து சுத்தம் செய்து விடலாம் என்றால் நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, அதை எப்படி சுத்தம் செய்வது என்பதை தான்.

- Advertisement -

அதற்கு முதலில் ஒரு ஜக்கில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டீஸ்பூன் வினிகர் அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் சமையல் சோடா சேர்த்து கொள்ளுங்கள். இது இரண்டையும் சேர்த்த பிறகு இதில் சேர்க்கும் ஒரு முக்கியமான பொருள் உப்பு. ஒரு டீஸ்பூன் உப்பு (கல் உப்பு, தூள் உப்பு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை) சேர்த்து இதை நன்றாக கலக்கி விட்டு விடுங்கள்.

இப்போது ஒரு நியூஸ் பேப்பரோ, அல்லது ஏ 4 சீட்டுடோ, உங்களிடம் என்ன பேப்பர் இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அதை இந்த வினிகர் சேர்த்த தண்ணீரில் முக்கி எடுத்து விடுங்கள். தண்ணீரில் முக்கி உடனே எடுத்து விடுவதால் பேப்பர் கிழியாது ஈரம் மட்டுமே ஆகியிருக்கும். இதை உங்கள் பாத்ரூம்ல் கறை படிந்த டைல்ஸில் அப்படியே ஒட்டி விடுங்கள். பத்து நிமிடம் வரை இந்த பேப்பர் அந்த டைல்ஸிலே ஒட்டி இருக்க வேண்டும். அதன் பிறகு அந்த பேப்பரை எடுத்துவிட்டு ஒரு இரும்பு நார் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் இந்த சமையல் சோடாவை சேர்த்து, அந்த டைல்ஸை லேசாக தேய்தாலே போதும் அதில் உள்ள உப்பு கறை அழுக்குகள் சுலபமாக வந்துவிடும்.

- Advertisement -

இந்த வினிகர், உப்பு, சமையல் சோடா மூன்றும் சேர்த்து ஊற வைத்த இந்த பேப்பர் சுவற்றில் ஒட்டி இருப்பதால் சுவரில் நன்றாக பிடித்து ஊறி இருக்கும். அதன் பிறகு நீங்கள் இந்த நாரை கொண்டு தேய்ப்பதால் உடனே அந்த கறைகள் நீங்கிவிடும். ஏன் இதை பேப்பர் ஒட்டாமல் அப்படியே ஊற்றினால் என்ன என்று கேட்கலாம். அப்படியே ஊற்றினால் டைல்சில் இந்த தண்ணீர் படியாது உடனே கீழே வடிந்து வீணாகிவிடும். உங்களுக்கு டைல்ஸ் தேய்க்கும் போது இப்படி கறையும் உடனே விடாது.

இதையும் படிக்கலாமே: பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய வீட்டு குறிப்புகள் 7. இந்த ஐடியாவை தெரிஞ்சு வச்சுகிட்டா நிறைய பணம் மிச்சப்படுத்தலாம்.

இந்த முறையில் ட்ரை பண்ணி பாருங்க. இது டைல்ஸில் உள்ள கறைகள் மட்டுமல்ல பாத்ரூம் மற்ற எந்த இடத்தில் கறை இருந்தாலும் இதே போல் உபயோகிக்கலாம். மற்ற இடங்களில் ஊற்றும் போது பேப்பர் ஒட்ட வேண்டிய அவசியம் இருந்தால் ஒட்டிக் கொள்ளுங்கள் இல்லை என்றால் ஊற்றி கொஞ்ச நேரம் ஊறிய பிறகு தேய்த்து விடுங்கள். உங்கள் பாத்ரூம் டிவி விளம்பரங்களில் வருவதைப் போல பளிச்சென்று மாறிவிடும்.

- Advertisement -