பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய வீட்டு குறிப்புகள் 7. இந்த ஐடியாவை தெரிஞ்சு வச்சுகிட்டா நிறைய பணம் மிச்சப்படுத்தலாம்.

tea
- Advertisement -

நிறைய பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால், வாங்கின பொருட்களை பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும். வீட்டில் வாங்கி வைக்கக்கூடிய பழ வகைகளாக இருக்கட்டும், மளிகை பொருட்களாக இருக்கட்டும், சரியான முறையில் ஸ்டோர் செய்து வைத்தால் தான் அதை நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும். இல்லையென்றால் பொருட்கள் சீக்கிரமே கெட்டுப் போய் குப்பையில் கொட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டில் வாங்கி வைக்கும் பொருட்களை சீக்கிரம் கெட்டுப் போகாமல் எப்படி பராமரிப்பது என்பதைப் பற்றிய சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டாலே போதும். பணத்தை மிச்சம் பிடிக்கலாம். பெண்கள் கட்டாயம் இந்த குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த குறிப்புகளை நாமும் தெரிந்து கொள்வோம்.

கோதுமை மாவை நன்றாக சலித்து விட்டு காற்று போகாத ஈரம் இல்லாத டப்பாவில் கொட்டி வைக்க வேண்டும். கோதுமை மாவை கொட்டுவதற்கு முன்பு டப்பாவிற்கு அடியில் பத்து மிளகு போட வேண்டும். கோதுமை மாவை கொட்டிய பிறகு மேலே பத்து மிளகுகளை போட்டு வைக்க வேண்டும். அப்போது கோதுமை மாவு சீக்கிரம் பூச்சி பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

வாழைப்பழம் கருகாமல் இருக்க. ஒரு சிறிய கிண்ணத்தில் அரை கிண்ணம் அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். வாழைப் பழத்தின் காம்பு பகுதி மட்டும் இந்த தண்ணீரில் படும்படி பழத்தைக் கவிழ்த்து, கிண்ணத்திற்குள் வைக்க வேண்டும். இப்படி காம்பு பகுதி கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரில் படும்படி கவிழ்த்து வைத்தால், வாழைப்பழம் 5 லிருந்து 6 நாட்கள் வரை கூட கெட்டுப் போகாமல் இருக்கும். (ரொம்பவும் கருத்துப்போன வாழைப்பழத்திற்கு இந்த குறிப்பு செட்டாகாது.)

15 நாட்கள் பிரிட்ஜில் பூ வாடாமல் இருக்க. ஒரு சிறிய பிளாஸ்டிக் டப்பாக எடுத்துக் கொள்ளுங்கள். அதன் கீழே ஒரு டிஷ்யூ பேப்பரை போட்டுக் கொள்ள வேண்டும். டிஷ்யூ பேப்பருக்கு மேலே ஒரு ஸ்பூன் அரிசியை தூவி விட வேண்டும். அதன் பின்பு கட்டிய பூவை அதன் மேல் வைத்து, பூவுக்கு மேலே ஒரு டிஷ்யூ பேப்பரை மூடி காற்றுப் போகாமல், டப்பாவுக்கு மேலே மூடி போட்டு அதை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் 15 நாட்கள் கூட பூ வாடி போகாது. டிஷ்யூ பேப்பருக்கு பதில் வாழை இலையைக் கூட பயன்படுத்தலாம்.

- Advertisement -

சிங்குக்கு அடியில் பாத்திரம் தேய்க்கும் போது பெண்களுக்கு கால்களை கொசு கடித்துக் கொண்டே இருக்கும். ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கற்பூரத்தை நன்றாக நுணுக்கி போட்டு, கரைத்து சிங்குக்கு அடியில் வைத்து விட்டால் இந்த வாசத்திற்கு, அந்த இடத்தில் ஈ கொசு எதுவுமே வந்து தாங்காது.

ஸ்டீல் சிங்கை கழுவ இனி கஷ்டமே வேண்டாம். ஒரு நியூஸ் பேப்பரை எடுத்து கசக்கி நார் போல தயார் செஞ்சு வச்சுகோங்க. சிங்கிள் ஒரு சொட்டு பாத்திரம் தேய்க்கும் லிக்விட் ஊற்றி இந்த நியூஸ் பேப்பரை வைத்து சிங்க் முழுவதும் தேய்த்து கழுவினாலே உங்களுடைய ஸ்டீல் சிங் பளபளன்னு மாறிடும். ஸ்டீல் ஷிங்கை நியூஸ் பேப்பரை வைத்து கழுவும் போது நியூஸ் பேப்பர் எக்காரணத்தைக் கொண்டும் அந்த ஓட்டையில் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு பைப் அடைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. (சிங்கை மூடுவதற்கு அவங்களே ஒரு கேப் கொடுத்திருப்பாங்க. அதை போட்டுட்டு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.)

- Advertisement -

இஞ்சி டீ போடும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா. இஞ்சியை நசுக்கி டீ போடாதீங்க. இஞ்சியை துருவி டீ போடுங்க. வாசம் தூக்கலா டீ கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: 20 வருடமாக உப்பு கறை படிந்த பாத்ரூமை கூட, 20 நிமிடத்தில் சுத்தம் செய்ய இதோ ஒரு புது ஐடியா.

ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பு சீக்கிரம் வண்டுபிடிக்கும். சீக்கிரம் பூச்சி பிடிக்கும். அதை வராமல் தடுக்க இதில் பூண்டு தோல் பூண்டு காம்புகளை போட்டு வைக்கலாம். இதே போல உங்கள் வீட்டில் இருக்கும் உளுத்தம் பருப்பு கடலைப்பருப்பில் கூட பூண்டு தோல் போட்டு வைத்தால் அந்த பருப்புகள் நீண்ட நாட்களுக்கு பூச்சி பிடிக்காமல் இருக்கும். பூண்டுக்கு மேலே இருக்கக்கூடிய தோலை உரித்து விட்டு, உள்ளே இருக்கும் காம்பையும் எடுத்து, அதை வெயிலில் நன்றாக காய வைத்து அதன் பின்பு பருப்புக்குள் போட்டு வையுங்கள்.

- Advertisement -