உங்க வீட்டு பாத்ரூம் 24 மணி நேரமும் வாசனையாக, குட்டி குட்டி பூச்சிகளின் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமா? செலவே இல்லாத இந்த ரூம் ஃபிரஷ்ன்னரை பாத்ரூமில் வையுங்க.

bathroom
- Advertisement -

சில பேர் வீடுகளில் பாத்ரூமை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் அதிலிருந்து ஒரு கெட்ட வாடை வீசிக்கொண்டே இருக்கும். அதிலும் வரவேற்பறையில் பாத்ரூம், படுக்கையறையில் பாத்ரூம் இருந்தால் இந்த பிரச்சினையை சமாளிக்கவே முடியாது. பாத்ரூமில் இருந்து வெளிவரக்கூடிய அந்த துர்நாற்றத்தை கட்டுப்படுத்த கடைகளில் பாத்ரூம் பிரெஷ்னர் விற்கிறது. ஆனால், அது எல்லாம் கொஞ்சம் விலை அதிகமானவை. எல்லோராலும் மாதம் அதை வாங்க நூற்றுக்கணக்கில் பணம் செலவழிக்க முடியாது அல்லவா. நம் வீட்டிலேயே குறைந்த செலவில் நம் கையால் வாசம் நிறைந்த ரூம் ஃபிரஷ்னரை எப்படி தயார் செய்வது என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்பு இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

பாத்ரூம் 24 மணி நேரமும் வாசமாக இருக்க வீட்டு குறிப்பு:
இதற்கு பூச்சி உருண்டை என்று சொல்லப்படும் நாப்தலின் பால் 3, கற்பூரம் 6, ஆப்ப சோடா 2 டேபிள் ஸ்பூன், வாசனை தரும் எசன்ஸியல் ஆயில் சில சொட்டுகள், ஷாம்பு அல்லது ஃபேப்ரிக் கண்டிஷனர், ஃபெவிகால். இந்த பொருட்கள் எல்லாம் தேவை. இந்த பொருட்கள் எல்லாமே கடைகளில் இப்போது மலிவாக விற்கின்றது. எசன்ஸியல் ஆயில் உங்களால் தனியாக வாங்க முடியவில்லை என்றால், நீங்க பயன்படுத்தும் சென்ட் அதற்கு பதில் எடுத்துக் கொள்ளலாம். ஃபேப்ரிக் கண்டிஷனர், நம்முடைய வீடுகளில் இருக்குமே, துணி வாசமாக இருக்க கம்போர்ட் பயன்படுத்துவோம் அல்லவா அதுதான் ஃபேபரிக் கண்டிஷனர்.

- Advertisement -

ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பா எடுத்துக்கோங்க. அதில் பூச்சி உருண்டையை நன்றாக இடித்து தூள் செய்து போட்டுக்கோங்க. அடுத்து கற்பூரத்தை நன்றாக இடித்து தூள் செய்து போட்டுக்கோங்க. அடுத்தபடியாக ஆப்ப சோடா, வாசனை திரவியம் சில சொட்டுகள், கம்ஃபோர்ட் சில சொட்டுகள் ஊற்றி இந்த பொருட்களை எல்லாம் நன்றாக கலக்க வேண்டும். கையைக் கொண்டு கலக்கலாம் தவறு கிடையாது.

லிக்விட் ஆக இருக்கக்கூடிய வாசனை திரவியங்களை நிறைய ஊற்றிடாதீங்க. இந்த கலவை தண்ணீர் ஆகிவிட்டால், செட் ஆவதற்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மேலே சொன்ன எல்லா பொருட்களும் நன்றாக கலந்து விட்ட பிறகு, ஃபெவிக்கால் கொஞ்சம் ஊற்றி இந்த பொருளை எல்லாம் பிசைந்தால் சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும். அதை அப்படியே ஒரு டீ குடிக்கும் பேப்பர் கப்பில் போட்டு, உங்கள் விரல்களாலேயே அழுத்தம் கொடுத்து செட் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விட்டால் அழகாக ஒரு வடிவத்தில் உங்களுக்கு இந்த உருண்டை கிடைத்து விடும். பேப்பர் கப்பை கிழித்து உள்ளே இருக்கும் வெள்ளை நிற வாசனை கட்டியை வெளியே எடுத்து விடுங்கள். அதை எடுத்து உங்களுடைய பாத்ரூமில் வசதிக்கேற்ப வைக்க வேண்டும். சின்ன மைக்கா கவரில், சின்ன சின்ன ஓட்டைகள் போட்டு, நூல் கட்டி ஆனியில் தொங்கவிட்டு, அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பாத்ரூம் ஃபிரஷ்னரை போட்டு வைத்தால் இதிலிருந்து நல்ல வாசம் வெளிவந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இனி கை வலிக்க வலிக்க வீடு முழுவதும் மாப் போட வேண்டும் என்ற அவசியமே இல்லை. சும்மா இந்த தண்ணீரை மட்டும் வீடு முழுவதும் தெளித்து விட்டால் போதும். டைல்ஸில் ஒட்டி இருக்கும் அழுக்கு எல்லாம் தானமாக சுத்தமாயிரும்.

இது உடனே கரைந்து போகக்கூடிய தன்மையையும் கொண்டது இல்லை‌. இதிலிருந்து நீண்ட நாட்களுக்கு உங்களுக்கு வாசம் வெளிவரும். ஒரு மாதத்திற்கு பாத்ரூம் பிரெஷ்னர் வாங்கும் செலவை விட இதற்காகவும் செலவு மிக மிக குறைவு. அது மட்டும் இல்லைங்க, இந்த வாசம் பாத்ரூமில் வீசினால் இரவு நேரத்தில் சின்ன சின்ன பூச்சி தொல்லைகள் கூட இருக்காது. இதில் நாம் சேர்த்திருக்கும் பொருட்களின் வாடை பூச்சிகளுக்கு சுத்தமாக பிடிக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த எளிமையான பயனுள்ள வீட்டு குறிப்பு பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -