பாத்ரூம் & கிச்சன் கிளீன் பண்ண இனி கொஞ்சமும் கஷ்டப்படவே வேண்டாமே டெட்டால் கூட இதை சேர்த்து ட்ரை பண்ணி பாருங்க!

dettol-bathroom-cleanig
- Advertisement -

பாத்ரூம், கிச்சன் போன்ற இடங்களில் படியக் கூடிய உப்பு கறைகள் மற்றும் அழுக்குகளை நீக்குவது என்பது ரொம்பவே கடினமான காரியமாக இதுவரை இருந்திருக்கும். ஆனால் இந்த ஒரு முறையை நீங்கள் கையாளும் பொழுது ரொம்பவே ஈசியாக சுலபமாக கிளீன் செய்ய முடியும் என்று தெரிஞ்சிக்குவீங்க! பாத்ரூம் மற்றும் கிச்சன் கிளீன் பண்ண ஈஸியான வழி என்ன? என்பதைத் தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பாத்ரூம் மற்றும் கிச்சன் கிளீன் செய்வது ஈஸியான விஷயம் அல்ல! நீங்கள் அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருந்தால் தான் அது எப்பொழுதும் பளிச்சிடும். ஆனால் நீங்கள் அப்படியே விட்டுவிட்டால் தண்ணீர் படும் இடங்களில் எல்லாம் தண்ணீரில் இருக்கக் கூடிய உப்பு மெல்ல மெல்ல படிய ஆரம்பிக்கும். இதனால் வெள்ளையாக திட்டு திட்டாக ஒட்டிக் கொள்ள ஆரம்பித்து விடும்.

- Advertisement -

இந்த வெள்ளை உப்பு திட்டுக்களின் மீது நாட்பட நாட்பட அழுக்குகள் சேர்ந்து மஞ்சளாகவும், அழுக்காகவும் தெரிய ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு நீங்கள் விட்டுவிட்டால் சுத்தம் செய்வதில் நிறையவே சிரமம் ஏற்படும். அது மட்டுமல்லாமல் இதிலிருந்து பாக்டீரியா மற்றும் கிருமிகள் தொந்தரவு வரக்கூடும் என்பதால் இதை அஜாக்கிரதையாக இப்படியே விட்டு விடக்கூடாது.

டெட்டால் அங்கீகாரம் பெற்ற கிருமி நாசினியாக இருக்கிறது. இதை வைத்து பாத்ரூம் மற்றும் கிச்சனையும் எளிதாக மற்றும் ஆரோக்கியமான முறையில் சுத்தம் செய்து கொள்ளலாம். முதலில் இரண்டு மூடி அளவிற்கு டெட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு துணி துவைக்கும் லிக்விட் சேர்த்துக் கொள்ளுங்கள். துணி துவைக்கும் பவுடர் சேர்ப்பதை விட, லிக்விட் சேர்த்தால் எஃபக்டிவ் ஆக இருக்கும்.

- Advertisement -

ஒரு ரூபாய்க்கு கிடைக்கக்கூடிய எந்த வகையான ஷாம்பு இருந்தாலும் அதை கத்தரித்து அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கல் உப்பு சேர்த்து கரையுங்கள். அனைத்தும் தண்ணீரில் நன்கு கரைந்த பின்பு ஒரு அரை லிட்டர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி இந்த லிக்விடையும் சேர்த்து குலுக்கி வையுங்கள். மூடியின் மீது லேசாக ஒரு ஆணியை வைத்து ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
Happy new year 2023 wishes in Tamil | புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023

இப்போது நீங்கள் எந்தெந்த இடங்களில் எல்லாம் கிளீன் செய்ய வேண்டுமோ, அந்தந்த இடங்களில் எல்லாம் இந்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் கரைசலை கொஞ்சம் போல அழுத்தி எல்லா இடங்களிலும் படும்படி ஊற்றுங்கள். அப்படியே அரை மணி நேரம் எதுவும் செய்யாமல் ஊற விட்டு விடுங்கள். அரை மணி நேரம் கழித்து நன்கு ஊறி இருக்கும். பிறகு நீங்கள் சாதாரணமான இரும்பு ஸ்கிரப்பரை கொண்டு கையில் கிளவுஸ் அணிந்துக் கொண்டு லேசாக தேய்த்து கொடுங்கள். அழுக்குகள், உப்பு கறைகள் அனைத்தும் சுலபமாக நீங்கிவிடும். வாஷ் பேசின் சிங்க், பாத்ரூம், பாத்ரூம் டைல்ஸ், வாலிகள், மக்குகள், கிச்சன் டைல்ஸ், கிச்சன் சிங்க் என்று எந்த இடங்களில் எல்லாம் நீங்கள் இதை போட்டு தேய்த்தாலும் அந்த இடங்கள் எல்லாம் பளிச் பளிச் என மின்ன ஆரம்பிக்கும்.

- Advertisement -