பாத்ரூமில் இருக்கும் உப்பு கறைகளை நீக்க இதை விட சுலபமான ஐடியா இருக்கவே முடியாது!

door-cleaning
- Advertisement -

பாத்ரூமில் கதவுக்குப் பின்னால் படிந்திருக்கும் உப்புக் கரைகளை எப்படி நீக்குவது, டைல்ஸில் படிந்திருக்கும் உப்பு கரைகளை எப்படி நீக்குவது, இந்த 2 பிரச்சனைகளுக்கான தீர்வை தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே அதிகப்படியாக வருடக்கணக்கில் படிந்திருக்கும் உப்பு கரைகளை, நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து நீக்குவது என்பது மிக மிக கடினமான ஒரு விஷயம். அப்படி உங்களுடைய வீட்டில் வருடக்கணக்கில் குளியலறையில் படிந்திருக்கும் உப்பு கறைகளை நீக்க சில வகையான ஆசிட் தான் பயன்படுத்த வேண்டும்.

bathroom

ஆனால் சில பேருக்கு ஆசிட் ஒத்துக் கொள்ளாது. இருமல் வந்துவிடும். கண் எரியும், அதிகப்படியான அலர்ஜியை கொடுக்கும். ஆசிடை யூஸ் பண்ணாமல் பாத்ரூமில் இருக்கும் உப்பு கரையை நீக்க, வேறு சில வழிகள் நிறைய உள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு சுலபமான பவர்ஃபுள் ஐடியாவை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இதை செய்தால் உடனே  உங்கள் பாத்ரூம் பளபளப்பாக பளிச்சிடும் என்று சொல்ல வரவில்லை. ஆனால் உப்பு கறைகளை நீக்கும் அளவிற்கு இந்த ஃபார்முலா நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும். குறிப்பை பார்த்து விடுவோம். முதலில் பாத்ரூம் கதவை எப்படி சுத்தம் செய்வது என்று பார்த்து விடுவோம். ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கல்லுப்பு 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு 3 ஸ்பூன், துணி துவைக்கப் பயன் படுத்தும் லிக்விட் 2 டேபிள் ஸ்பூன், பேக்கிங் சோடா 2 ஸ்பூன், இந்த எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும்.

door

அதன் பின்பு கால் டம்ளர் அளவு தண்ணீரை நாம் தயார் செய்த லிக்விடில் ஊற்றி, கலக்கும் போது இந்த கலவை இலேசாக பொங்கி வரும், அப்போது, ஒரு ஸ்பூனை வைத்து இந்த கலவையை நன்றாக கலக்கி விட்டால், இது நமக்கு கிரீமி பதத்தில் கிடைக்கும். இந்த க்ரீமியான கலவையை வைத்து தான் பாத்ரூம் கதவை சுத்தம் செய்யப் போகின்றோம்.

- Advertisement -

தயார் செய்த இந்தக் கலவையை ஒரு ஸ்பாஞ்ச் நாரில் தொட்டு பாத்ரூம் கதவுக்கு முன் பக்கம், பின் பக்கம் உள்ள உப்புக் கறைளை லேசாக தேய்த்து கொடுத்தாலே போதும். உப்பு கறைகள் சுத்தமாக நீங்கி விடும். (ஸ்டீல் நான் கூட பயன்படுத்த வேண்டாம் ட்ரை பண்ணி பாருங்க.) குறிப்பாக பாத்ரூம் கதவு உள்பக்கம், உப்பு கரை ரொம்பவும் அதிகமாகவே படிந்திருக்கும். அதை நீக்குவது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம்தான்.

cleaning5

நம் கையாலேயே தயார் செய்த இந்த லிக்விட் வைத்து எவ்வளவு கரையை நீக்க முடியுமோ மொத்தமாக அவ்வளவு கரையையும் நீக்கிவிடுங்கள். அதன் பின்பு ஆங்காங்கே மிச்சம் படிந்திருக்கும் உப்புக் கரைகளை நீக்கவும் நம்மிடம் சுலபமாக ஒரு ஐடியா உள்ளது. நம் வீட்டு கழிவறையை சுத்தம் செய்யும் ஹார்பிக் தான் அந்த ஒரு வழி. டாய்லெட்டை சுத்தம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்தப்படும் பொருள் அல்ல ஹார்பிக்.

- Advertisement -

harpic

இந்த ஹார்பிக்கை வைத்து அடர்த்தியாக படிந்திருக்கும் உப்பு கரைகளையும் நீக்க முடியும். குறிப்பாக உங்கள் வீட்டு வாஷ் பேஷன், குளியல் அறையில் ஒட்டி வைத்திருக்கும் டைல்ஸில், பாத்ரூம் கதவில் அதிகப்படியான உப்பு கறை படிந்திருந்தால், அதன் மேல் இந்த ஹேர் பிக்கை போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அதன் பின்பு ஸ்டீல் ஸ்கரப்ரை வைத்து தேய்க்கும் பட்சத்தில் உப்புக் கரை கொஞ்சம் கொஞ்சமாக நீங்க தொடங்கும். (என்னதான் சுத்தம் செய்து உப்பு கரையை நீக்கினாலும் பாத்ரூம் கதவுகள் உலர்ந்த பின்பு மீண்டும் வெள்ளை நிறத்தில் பூத்துக் போகத்தான் செய்யும். அது தெரியாமல் இருக்க, கழுவிய பாத்ரூம் கதவு காய்ந்தவுடன் அந்த இடத்தில் எல்லாம் கொஞ்சமாக தேங்காய் எண்ணெயை அப்ளை செய்து விட்டு விடுங்கள்.)

bath-room-cleaner1

ஆனால் இப்படி ஹார்பிக் கை போட்டு லேசாக தேய்த்தால் கறை நீங்காது. நன்றாக அழுத்தம் கொடுத்துத் தேரய்க்க வேண்டும். நேரமும் அதிகமாக தான் எடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த இரண்டு டிப்ஸும் யூஸ் பண்ணி பாருங்க.

ஆனால் ஹார்பிக் கை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. அது நம்முடைய பூமியில் அதிகப்படியாக ஊறும் போதும் அவ்வளவு நல்லது கிடையாது. அதேசமயம் டயல்ஸ் சீக்கிரமே உடைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு எந்த குறிப்பு தேவையோ அதை நீங்கள் உங்களுடைய பாத்ரூமில் ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயம் உங்களுக்கு உபயோகமானதாக தான் இருக்கும்.

- Advertisement -