பாத்ரூம் பிளாஸ்டிக் ஸ்டூல் சுத்தம் செய்ய வீட்டு குறிப்பு

bathroom1
- Advertisement -

தினம் தினம் பாத்ரூமில் உட்கார்ந்து குளிக்க, துணி துவைக்கும் போது உட்கார பயன்படுத்தும் இந்த பிளாஸ்டிக் ஸ்டூலை என்றாவது கவனித்து இருக்கிறோமா. ஏகப்பட்ட அழுக்கு அதில் ஒட்டி இருக்கும். கையில் தொடுவதற்கே கூச்சமாக இருக்கும். அந்த அளவுக்கு அழுக்கு இருக்கும் ஸ்டூலை பயன்படுத்தி தான் தினமும் குளிப்போம். அதன் மேலே அமர்ந்துதான் துணி துவைப்போம்.

சில பேர் இதில் அமர்ந்து பாத்திரம் கூட தேய்ப்பார்கள். அதை தவறு சொல்ல வரவில்லை. ஆனால் இந்த ஸ்டூலை ஒரு முறையை சுத்தம் செய்து தான் வையுங்களேன். இதில் இருக்கும் அழுக்கே நமக்கு பெரிய வியாதியை கொடுத்து விடும். இந்த ஸ்டூலை சுத்தம் செய்ய பெரிய அளவில் நீங்க சிரமப்பட வேண்டாம். ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம். இந்த மெத்தடை ட்ரை பண்ணி பாருங்க. நிமிடத்தில் அந்த ஸ்டூல் சுத்தமாகிவிடும்.

- Advertisement -

பிளாஸ்டிக் ஸ்டூல் சுத்தம் செய்யும் முறை

தினம் தினம் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் துணி துவைப்பீங்க, அல்லது வாரத்தில் இரண்டு முறையாவது துணி துவைப்பாங்க. இப்படி அலுமினிய அன்னக்கூடை அல்லது பிளாஸ்டிக் அன்ன கூடையில் தண்ணீர் ஊற்றி சோப்பு பவுடர் போட்டு துணிகளை ஊற வைத்து எடுப்பீர்கள். துணிகளை எல்லாம் எடுத்து துவைத்த பிறகு நிச்சயம் மிச்சம் தண்ணீர் இருக்கும்.

அந்த சோப்பு தண்ணீரை கீழே தான் ஊற்றுவோம். அப்படி ஊற்றாதீங்க. அந்தத் தண்ணீரில் நீங்கள் இந்த பிளாஸ்டிக் ஸ்டூலை எடுத்து போட்டு ஒரு 10 நிமிடம் ஊற வையுங்கள். பிறகு எடுத்து அதை ஒரு நார் போட்டு லேசாக தேய்த்துக் கொடுத்தாலே போதும். அந்த ஸ்டூல் பலிச் பலிச்சென மாறிவிடும்.

- Advertisement -

ரொம்பவும் அடர்த்தியாக அதில் உப்பு கறை படிந்திருந்தால் அந்த அன்னக்கூடை தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு ஆப்ப சோடா மாவு, ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி போட்டு இந்த ஸ்டூலை ஊற வையுங்கள் போதும். ஸ்டூலில் இருக்கும் அழுக்கு மொத்தமாக நீங்கிவிடும். வருஷத்துக்கு 2 முறை அந்த ஸ்டூலை கழுவினால் கூட அது பார்ப்பதற்கு சுத்தமாக இருக்கும்.

பொதுவாக ஸ்கூலுக்கு அடிப்பக்கத்தில் தான் அதிகமாக அழுக்கு ஒட்டி இருக்கும். ஆகவே நீங்கள் பயன்படுத்தும் அந்த ஸ்டூலை தலைகீழாக கவிழ்த்து போட்டு அந்த அன்ன கூடை தண்ணீரில் ஊற வையுங்கள். பல் தேய்க்கும் பழைய பிரஷ், பெயிண்ட் அடிக்கும் பழைய பிரஷ் இருந்தால் அதை எடுத்து இந்த ஸ்டூலுக்கு பின்பக்கம் கோடு கோடாக இடுக்குகளில் நிறைய அழுக்கு சேர்ந்திருக்கும் அதை தேய்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

அந்த இடுக்குகளில் இருக்கும் அழுக்கு இந்த பிரஷ் கொண்டு தேய்க்கும் போது சுலபமாக நீங்கிவிடும். பிறகு தண்ணீரில் இந்த ஸ்டூலை ஒரு முறை அலசி, பிறகு இந்த ஸ்டூலை வெயிலில் காய வைத்து எடுக்கவும். அவ்வளவுதான். பாருங்க அந்த ஸ்டூல் பார்ப்பதற்கு கொஞ்சம் லட்சணமாக தெரியும். இதே போல தான் உங்க வீட்டில் இருக்கும் குளிக்க கூடிய பக்கெட், குளிக்க கூடிய ஜக் இவைகளையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். மேலே சொன்ன பயனுள்ள இந்த வீட்டு குறிப்பு பிடித்தவர்கள் பின்பற்றி பலன் அடையலாம்.

- Advertisement -