பாத்ரூமை சுத்தம் செய்ய புத்தம் புது வீட்டு குறிப்பு

toilet
- Advertisement -

பாத்ரூமை சுத்தம் செய்ய நிறைய காசு செலவு செய்துதான் கடையிலிருந்து ஹார்பிக் வாங்குவோம். ஆனால் நம்முடைய வீட்டிலேயே ஹார்பிக் செஞ்சுக்கலாம். கடையிலிருந்து வாங்கக்கூடிய ஹார்பிக்கை விட பல மடங்கு சக்தி வாய்ந்த திக்கான ஹார்பிக்கை நாமே தயார் செய்யலாம். இதற்கு சாதம் வடித்த கஞ்சி போதுங்க.

இந்த ஐடியா தெரிஞ்சிட்டா பிறகு கடையில் எதற்கு அனாவசியமாக காசு செலவு செய்த ஹேர்பிக் வாங்கணும். இல்லத்தரசிகளுக்கு தேவையான, செலவை குறைக்கக்கூடிய பயனுள்ள இந்த வீட்டுக்குறிப்பை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

டாய்லெட்டை சுத்தம் செய்ய வீட்டுக்குறிப்பு

இந்த குறிப்புக்கு நமக்கு சாதம் வடித்த கஞ்சி தேவை. காலையில் வடித்த கஞ்சியை மாலையில் பயன்படுத்தனும். மாலையில் சாதம் வடித்தால் அதை மறுநாள் காலை பயன்படுத்துங்க. ஏனென்றால் அப்போதுதான் கஞ்சி கொஞ்சமாக புளித்து, ஆறிய பிறகு கட்டியாக நமக்கு கிடைக்கும். புளித்த ஆறிய கஞ்சியை தேவையான அளவு ஒரு சின்ன பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இதோடு உஜாலா சொட்டு நீளம் 2 சொட்டு, துணி துவைக்கும் பவுடர் 2 ஸ்பூன், போட்டு நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். நீல நிறத்தில் சூப்பரான ஹாப்பி தயாராகி விட்டதா. இதை உங்களுடைய டாய்லெட்டில் அப்படியே ஊற்றினால் சூப்பராக திக்காக நிற்கும். அப்படியே பிரஷ்ஷில் தடவி பத்து நிமிடம் ஊற விடுங்கள். பிறகு சாதாரணமாக டாய்லெட் சுத்தம் செய்யும் பிரஷ்ஷை கொண்டு டாய்லெட்டை தேய்த்து கழுவி பாருங்கள். ரிசல்ட் உங்களுக்கே தெரியும்.

- Advertisement -

இதே போல உங்கள் வீட்டு பாத்ரூம் டைல்ஸ், சுவரில் ஒட்டி இருக்கும் டைல்ஸ், எல்லா இடங்களிலும் இந்த லிக்விடை ஊற்றிவிட்டு நன்றாக ஒரு பிரஷால் தடவி விட்டு, பத்து நிமிஷம் ஊற விட்டு சாதாரணமாக பாத்ரூம் தேய்க்கும் துடைப்பத்தாலோ பிரஷாலோ தேய்த்து பாத்ரூமை சுத்தம் செய்தால், பாத்ரூம் சூப்பராக பளிச் பளிச்சென மாறிவிடும்.

இதில் எந்த கெமிக்கலும் இல்லை. நம்முடைய ஆரோக்கியத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மூக்குக்குள்ளே புகை போகும் இருமல் வரும் என்ற பிரச்சனை எல்லாம் கூட வராது. ரொம்ப ரொம்ப எளிமையான குறிப்பு செலவில்லாத குறிப்பு.

- Advertisement -

இரண்டாவது குறிப்பு

ஒரு சின்ன பாத்திரம் எடுத்துக்கோங்க. அதில் ஆப்ப சோடா 2 ஸ்பூன், வினிகர் 2 மூடி, லைசால் 1 மூடி, தூள் உப்பு 2 ஸ்பூன், உஜாலா நீளம் 2 சொட்டு, ஊற்றி இதில் 1/4 லிட்டர், தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். சூப்பராக ஒரு லிக்விட் உங்களுக்கு கிடைத்திருக்கும். இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இதை எப்படி பயன்படுத்தலாம்.

உங்க வீட்டு வெள்ளை நிறத்தில் இருக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், பர்னீச்சர் இப்படி எந்த பொருளை வேண்டும் என்றாலும் இந்த இந்த லிக்விடை ஸ்பிரே செய்து ஒரு துணியால் வைத்து துடைத்தாலே போதும். வெள்ளை நிறத்தில் இருக்கும் அந்த பொருட்கள் இன்னும் கூடுதல் வெள்ளை நிறத்தை பெறும்.

ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் இடத்திற்கு கீழே தரைப்பகுதி, பீரோ வச்சிருப்பீங்க, அதுக்கு கீழே தரையில் நிறைய அழுக்கு இருக்கும். வாஷிங் மெஷின் வைத்திருக்கக் கூடிய இடத்தில் நிறைய அழுக்கு இருக்கும். அந்த இடத்தை எல்லாம் நாம் அடிக்கடி சுத்தம் செய்ய முடியாது. அந்த பெரிய பொருட்களை நகர்த்தி விட்டு அடியில், தரையை சுத்தம் செய்யாமல் அப்படியே விட்டு வைத்திருப்போம்.

இதையும் படிக்கலாமே: மீன் குழம்பு வாசமாக இருக்க வீட்டு குறிப்பு

அப்படிப்பட்ட அழுக்கு அதிகம் நிறைந்த டயல்ஸில் இந்த லிக்விடை ஸ்ப்ரே செய்து ஒரு துணியை போட்டு துடைத்து எடுத்தாலே போதும். அந்த டைல்ஸில் இருக்கும் நீண்ட நாள் படிந்த கறைகள் அழுக்குகள் எல்லாம் ஒரு நொடி பொழுதில் சுத்தமாகும். வீட்டை சுத்தம் செய்ய கெமிக்கல் கலக்காத இந்த வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -