மீன் குழம்பு வாசமாக இருக்க வீட்டு குறிப்பு

meen-kuzhambu
- Advertisement -

மீன் குழம்பு நிறைய பேரின் ஃபேவரட் டிஷ். இந்த மீன் குழம்பை ரொம்ப ரொம்ப சுவையாக மாற்ற ஒரு வீட்டுக்குறிப்பு. இதோடு சேர்த்து மீன் வாங்கி சமையலறையில் சமைத்தால், அந்த சமையல் அறை முழுவதும் நாறும். மீன் குழம்பு சாப்பிட நல்லாத்தான் இருக்கும். ஆனா அந்த மீன் வாடையை சில பேரால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் மீன் சமைத்த பாத்திரத்திலும், அந்த மீன் வாடை வரும். மீனை கழுவி சுத்தம் செய்த சிங்கிலும் அந்த மீன் வாடை வரும். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஒரு சூப்பரான வீட்டு குறிப்பு. ஆக மொத்தம் இன்னைக்கு இல்லத்தரசிகள் 2 புத்தம் புது வீட்டு குறிப்பு தெரிஞ்சுக்க போறீங்க.

- Advertisement -

மீன் குழம்பு வாசமாக இருக்க

ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து விடுங்கள். அதில் கொஞ்சமாக வெந்தயம், கொஞ்சமாக மிளகு. 1/4 ஸ்பூன் வெந்தயம் எடுத்தால், 4 லிருந்து 5 மிளகு எடுத்துக்கோங்க போதும். உங்க வீட்டில் எவ்வளவு மீன் குழம்பு வைத்திருக்கிறீர்களோ, அந்த அளவைப் பொறுத்து இந்த வெந்தயத்தையும் மிளகையும் எடுத்து கடாயில் போட்டு ட்ரை ரோஸ்ட் பண்ண வேண்டும்.

இந்த இரண்டு பொருட்களும் லேசாக நிறம் மாறி வாசம் வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, இதை நன்றாக ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போடக்கூடாது. இஞ்சி பூண்டு நசுக்கும் சின்ன உரலில் போட்டு இடித்து கொரகொரப்பான இந்த பொடியை மீன் குழம்பில் தூவி விட்டால் டேஸ்ட் சும்மா வேற லெவல்ல இருக்கும்.

- Advertisement -

மீன் குழம்பு செய்து முடித்துவிட்டு, மீன் குழம்பை அடுப்பில் இருந்து இறக்கும் சமயத்தில், இறுதியாக இந்த தூளை தூவி, அடுப்பை உடனடியாக அணைத்து விடுங்கள். லேசாக மீன் குழம்பை கலந்து விட்டு விடுங்கள். பிறகு பாருங்க நீங்க வச்ச மீன் குழம்பு மணமணக்கும். இது முதல் குறிப்பு.

இரண்டாவது குறிப்பு

சரி, இந்த காபித்தூள் எதுக்குங்க. இருங்க வருவோம். அடுத்து அந்த குறிப்பு தான். பெரும்பாலும் நாம் எல்லோருது வீட்டிலும் இப்போது ஃபில்டர் காபி பயன்படுத்தும் வழக்கம் இருக்கு. ஃபில்டர் காபி போட்ட பிறகு அந்த மீதம் திப்பி இருக்கும் அல்லவா, அதை தூக்கி குப்பையில் தான் போடுவீங்க. இனிமே அது குப்பையில் போடாதீங்க. மீன் குழம்பு வைத்த பாத்திரம், மீன் வறுக்க மசாலாதடவி ஒரு பாத்திரம் வச்சிருப்பீங்க, அந்த பாத்திரம்.

- Advertisement -

இவை எல்லாவற்றையும் சாதாரணமாக சோப்பு போட்டு ஒரு முறை கழுவிடுங்கள். பிறகு இந்த குப்பையில் தூக்கிப் போடும், காபி தூளை, தூக்கி இந்த பாத்திரத்தில் போட்டு உங்கள் கைகளாலேயே லேசாக தேய்த்து, பாத்திரத்தை கழுவி விட்டால் மீன் வாடையே அந்த பாத்திரத்தில் வீசாது. அது மட்டும் இல்லைங்க உங்க வீட்டு சிங்கிலும் இந்த காபித்தூளை எல்லா இடங்களிலும் படும்படி பரப்பி போட்டு, ஒரு நார் வைத்து தேய்த்து கழுவி விட்டால், அந்த மீன் வாசம் சுத்தமாக நீங்கிவிடும்.

இது மீன் குழம்புக்கு மட்டும் கிடையாது. மற்ற எந்த அசைவம் செய்தாலும், அந்த வாடை பாத்திரத்தில் இருந்து நீங்காது. உதாரணத்திற்கு மட்டன் குழம்பு குக்கரில் வைத்தால், குக்கரில் இருந்து அந்த வாசம் நீங்க ரொம்ப நாள் எடுக்கும். அந்த குக்கரையும் இந்த காபித்தூள் போட்டு தேய்த்து கழுவலாம். இந்த ஐடியா தெரிந்தவர்கள் வீட்டில், கவிச்சி வாடை இருக்கவே இருக்காது, அப்படியே காப்பித்தூள் வாசம் தான் உங்கள் சமையலறையில் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: குளிர்சாதன பெட்டி பராமரிக்கும் முறை

ஒருவேளை நீங்கள் ஃபில்டர் காபி போடலன்னா ரெண்டு ரூபா காபித்தூள் பாக்கெட் வாங்கி இந்த குறிப்பை நீங்கள் பின்பற்றலாம். எப்போது மீன் குழம்பு வைக்கிறீர்களோ, எப்போது அசைவம் சமைக்கிறீர்களோ, அப்பெல்லாம் இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க. மீன் நாற்றம் வீட்டில் வீசவை வீசாது. எப்படிங்க ஐடியா. தேவைப்படுபவர்கள் மட்டும் இந்த ஐடியாவை ட்ரை பண்ணுங்க.

- Advertisement -