பாத்ரூம் உப்பு கறை நீங்க டிப்ஸ்

bathroom strain remove
- Advertisement -

இல்லத்தரசிகளுக்கு வீட்டில் செய்யும் ஒவ்வொரு வேலையுமே ஒரு சவால் தான். அதிலும் சுத்தம் செய்யும் வேலை என்றால் கேட்கவே வேண்டாம்.குறிப்பாக பாத்ரூம் போன்ற அதிக கறை படியும் இடங்களை அடிக்கடி சுத்தம் செய்ய விட்டால் பார்க்கவே சகிக்காது. இதனாலயே எத்தனை வேலைகள் இருந்தாலும், அந்த இடங்களை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஓரளவுக்கு குறைவு தான். ஏனெனில் பாத்ரூமை கட்டியதில் இருந்து அடிக்கடி சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருப்பார்கள். வாடகை வீடு மாறுபவர்களுக்கு போகும் இடம் எல்லாம் இப்படி சுத்தமாக இருக்குமா?என தெரியாது.

- Advertisement -

இது போன்ற சமயங்களில் கடைபிடிந்த பாத்ரூமை எளிதாக சுத்தம் செய்ய ஒரு அருமையான டிப்ஸை தான் வீட்டுக் குறிப்பு குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

கறை படிந்த பாத்ரூமை சுத்தம் செய்யும் முறை

இந்த முறையில் பாத்ரூமை சுத்தம் செய்வதற்கு வெறும் ஐந்து ரூபாய் செலவில் உள்ள இந்த இரண்டு பொருட்களை மட்டும் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள். முதலில் இரண்டு ரூபாய் பாக்கெட் சீய்க்காய் இரண்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு ரூபாய் ஷாம்பு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு வேளை நீங்கள் வீட்டிலேயே சீயக்காய் ஷாம்பு வைத்திருக்கிறீர்கள் என்றால், கடைகளில் வாங்கும் இந்த சீயக்காய், ஷாம்பு அளவிற்கு ஏற்றார் போல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் இந்த ஷாம்பையும் சீயக்காயவும் ஒன்றாக கலந்த பிறகு வீட்டில் நன்றாக புளித்த தயிர் இருப்பின் அதை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

தயிர் இல்லாத பட்சத்தில் புளித்த மாவையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த தயிர் மாவு எதுவாக இருந்தாலும் நன்றாக புளித்து இருக்க வேண்டும். இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை பாத்ரூம் டைல்ஸில் அதிக கறைப் படிந்த இடத்தில் தேய்த்து விடுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து ஸ்ரப்பர் அல்லது உப்பு காகிதம் வைத்து அந்த இடத்தில் தேய்த்து விட்டால் போதும். எப்பேர்ப்பட்ட கறையும் பளிச்சென்று நீங்கி விடும். ஸ்க்ரப்பர் வைத்து தேய்க்க வேண்டும் என்ற உடன் அதிகமாக சிரமப்பட வேண்டியது இருக்குமோ என்று யோசிக்க வேண்டாம். இதை வெறும் ஸ்ரப்பர் வைத்து தேய்க்கும் போது சீக்கிரத்தில் கறைகள் நீங்கி விடும். அவ்வளவு தான்.

இதையும் படிக்கலாமே: புளித்த தயிரை வீணாக்காமல் பயன்படுத்தும் முறை

இந்த கலவையை ஒரு முறை பயன்படுத்தி பாருங்க. நம்ம கடையில அதிக விலை கொடுத்து வாங்குற கெமிக்கல் கலந்த லிக்விட்டை சூப்பரா வேலை செய்யும். நீங்களும் கண்டிப்பா ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -