புளித்த தயிரை வீணாக்காமல் பயன்படுத்தும் முறை

curd mango turmeric
- Advertisement -

தயிரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மற்ற காலங்களில் இதன் தேவை குறைவாக இருந்தாலும் வெயில் காலத்தில் தயிரை அனைவருமே பயன்படுத்துவோம். இதனால் கட்டாயம் அனைவர் வீட்டிலும் தயிர் இருக்கும். ஆனால் எப்படியும் கொஞ்சமாவது தயிர் மீந்து புளித்து விடும். வெயில் காலமாக இருப்பதால் அது சீக்கிரத்திலே கூட புளித்து விடும்.

என்ன தான் தயிரை ஃப்ரிட்ஜில் பாதுகாப்பாக வைத்தாலும் இந்த காலத்தில் கட்டாயமாக புளித்து விடும். பலரும் புளித்த தயிரை விரும்ப மாட்டார்கள். அப்படி தயிர் புளித்து விட்டால் அதை கீழே வீணாக ஊற்றாமல் அந்த புளித்த தயிரை பலவகையில் பயன்படுத்தலாம் என்பதை பற்றி தான் வீட்டுக்குறிப்பு குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

புளித்த தயிரை வீணாக்காமல் பயன்படுத்தும் முறை

தயிரை விட மோர் பல மடங்கு உடலுக்கு நல்லது சத்துக்களும் அதிகம் தயிர் புளித்து விட்டால் அதை நீர் விட்டு மோராக மாற்றி கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்து குடிக்கும் போது உடல் வெப்பத்தை தணிப்பதுடன், கருவேப்பிலை கொத்தமல்லி போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

அதே போல் புளித்த தயிரை அப்படியே சாதத்தில் கலந்தால் சாப்பிட முடியாது. எனவே இதன் கூட சிறிது பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய் வத்தல், போன்றவற்றை சேர்த்து தாளித்து கொத்தமல்லி சேர்த்து தயிர் சாதமாக சாப்பிட்டு பாருங்கள் பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -

அதே போல் இந்த வெயில் காலத்தில் அருந்தக் கூடிய பானங்களிலே லஸ்ஸி சிறந்த ஒரு குளிர்ச்சி மிக்க பானம். அதை இது போன்ற புளித்த தயிரில் அடித்தால் மிகவும் சுமையாக இருக்கும். புளித்த தயிரில் பழ வகைகளில் மாம்பழம், ஸ்ட்ராபெரி என எதை வேண்டுமானாலும் சேர்த்து பழ லஸ்ஸியாக தயாரிக்கலாம் அது இன்னும் பிரமாதமாக இருக்கும்.

அதே போல் புளித்த தயிரில் தயிர் வடை, போண்டா, தயிர் பூரி போன்ற சேட் வகைகளை தயாரித்து சாப்பிடலாம். இவையெல்லாம் வீட்டிலே நம் பிள்ளைகளுக்கு ஆரோக்கியமாக செய்து கொடுப்பது இரட்டிப்பு பலனை தரும். அதே போல் புளித்த தயிர் கொஞ்சம் காரசாரமாக மோர் குழம்பு வைத்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -

இந்த புளித்த தயிரை அரிசி மாவில் கலந்து உடனடியாக தோசை உற்றலாம். அரிசி மாவிற்கு பதிலாக ரவை அவலையும் பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தும் போது ஒரு முறை மிக்சியில் அரைத்த பிறகு இந்த புளித்த தயிரை ஊற்றி தோசை ஊற்றினால் பிரமாதமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பூஜை பொருட்களை சுத்தம் செய்யும் முறை

முடி பட்டு போலவும் பளபளப்பாக இருக்கவும் புளித்த தயிரை தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து பாருங்கள். சருமம் ஜொலிக்கு பட்டு போல இருக்க புளித்த தயிருடன் கொஞ்சம் கடலை மாவு கஸ்தூரி மஞ்சள் கலந்து பேக் போல முகத்திற்கு பயன்படுத்துங்கள் உடனடியான முக அழகை பெறலாம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனில் நீங்களும் பயன்படுத்தி பலன் அடையலாம்.

- Advertisement -