பாத்ரூம் கீளின் பண்ண வெறும் பத்து ரூபாய் செலவு பண்ணா போதும். பல வருடமா படிந்திருந்த உப்பு கறை கூட பத்து நிமிஷத்துல காணாமல் போய் விடும்.

bathroom cleaning liquid
- Advertisement -

வீட்டு வேலைகளிலே அதிக தொல்லை தரக் கூடிய வேலை என்றால் அது பாத்ரூமை சுத்தப்படுத்துவது தான். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் உப்பு தண்ணீர் தான் வருகிறது . இதனால் பாத்ரூமை நீங்கள் தினமுமே சுத்தம் செய்தால் கூட ஆங்காங்கே உப்பு கறை படிந்து அது விடாப்பிடியான கறையாக மாறி விடும். அதன் பிறகு இந்த கறையை போக்குவதற்கு பெரிய போராட்டமாக இருக்கும். இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் பல வருடமாக படிந்த உப்பு கறையை கூட சுலபமாக நீக்கக்கூடிய அருமையான ஒரு லிக்விட் தயாரிப்பு முறை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

blue-soap-bar

உப்பு கறை படிந்த பாத்ரூமில் சுத்தப்படுத்த லிக்விட்
இந்த லிக்விட் தயாரிக்க நாம் கடையில் வாங்க வேண்டிய ஒரே ஒரு பொருள் பத்து ரூபாய் துணி சோப்பு மட்டும் தான். இந்த சோப்பை வாங்கி காய் சீவும் சீவலில் பாதி அளவு மட்டும் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். துருவிய இந்த சோப்பை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இத்துடன் 2 ஸ்பூன் சமையல் சோடா மாவையும் சேர்த்து பிறகு இரண்டு எலுமிச்சை பழத்தின் சாறை மையும் பிழிந்து விடுங்கள். அதன் பிறகு பாத்திரம் தேய்க்கும் லிக்வீட்டை 2 ஸ்பூன் சேர்த்த பிறகு ஒரு கை பிடி கல் உப்பை சேர்த்து விடுங்கள். இவை எல்லாம் சேர்த்த பிறகு கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரை இந்த கலவையில் ஊற்றுங்கள். தண்ணீர் சூடாக இருந்தால் தான் நாம் சேர்த்து இருக்கும் பொருள்கள் எல்லாம் நன்றாக கரைந்து கலந்து வரும்.

அடுத்து இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்த பிறகு இதை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். பாட்டிலின் மூடியில் துளைகளை போட்டுக் கொள்ளுங்கள். அப்போது தான் பாத்ரூமில் இந்த லிக்விடை ஊற்ற வசதியாக இருக்கும். உங்களிடம் ஸ்ப்ரே பாட்டில் இருந்தால் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த லிக்விடை உப்பு கறை படிந்த டைல்ஸ் டாய்லெட் பாத்ரூம் கதவு போன்றவற்றில் எல்லாம் தெளித்து பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு சாதாரணமாக நாம் பாத்ரூம் தேய்க்க பயன்படுத்தும் பிரஷ், துடைப்பம் வைத்து லேசாக தேய்த்து விட்டாலே போதும் கறைகள் அனைத்தும் நீங்கி விடும். பாத்ரூம் டைல்ஸும் பளிச்சென்று இருக்கும். இதில் சமையல் சோடா, லெமன், உப்பு இவை எல்லாம் கலந்து இருப்பதால் பாத்ரூமில் வரக் கூடிய துர்நாற்றமும் வராது. அது மட்டும் இன்றி பூச்சி தொந்தரவும் இருக்காது.

இதையும் படிக்கலாமே: பித்தளை பூஜை பாத்திரங்களை தேய்க்க கை வலிக்க இனி கஷ்டப்படவே வேண்டாம். ஈஸியான இந்த ஐடியா மட்டும் தெரிந்தால், 5 நிமிடத்தில் உங்க விளக்கு சும்மா தங்கம் போல மின்னும் பாருங்க.

பாத்ரூமை சுத்தப்படுத்த இனி அதிக விலை கொடுத்து எந்த பொருட்களையும் வாங்காமல் பத்து ரூபாய் செலவில் பாத்ரூமை பளிச்சென்று சுத்தம் செய்து கொள்ளலாம். இந்த முறையில் நீங்கள் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ சுத்தம் செய்தாலே போதும். பாத்ரூம் பளிச் சென்று நல்ல நறுமணத்துடன் இருக்கும். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -