2 பிரிஞ்சி இலையை எரித்தால் வீட்டில் அதிசயம் நடக்குமா? அது எப்படின்னு நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க!

மசாலா பொருட்களில் பிரிஞ்சி இலை மிகவும் முக்கியமான ஒன்றாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பட்டை, கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி பூ இவைகளை போலவே பிரிஞ்சி இலையும் விசேஷமான தன்மைகளைக் கொண்டுள்ளது. பிரிஞ்சி இலையில் அதிக அளவில் கனிம சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்துள்ளதால் இவற்றை பயன்படுத்துவதன் மூலம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டாகும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

bay-leaf1

பிரிஞ்சி இலை சமையல் விஷயங்களில் மட்டும் அல்லாமல், வீட்டிற்குள் சுற்றி இருக்கும் அசுத்தமான காற்றையும், நல்ல காற்றாக மாற்றக்கூடிய தன்மை உள்ளது என்பது குறிப்பிடதக்க ஒன்றாக இருந்து வருகிறது. இரண்டு பிரிஞ்சி இலைகளை எரித்தால் நிகழும் அதிசயங்களை கேள்வி படுவதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும். அப்படி இதனால் நமக்கு என்ன அதிசயம் நிகழும்? இதனை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

பிரிஞ்சி இலையில் மைர்சீன், யூஜெ‌னோல் என்கிற மூலக்கூறுகள் அலர்ஜி சார்ந்த விஷயங்களிலிருந்து எதிர்ப்பு ஆற்றல்களைக் கொண்டுள்ளது. உங்களுக்கு அலர்ஜி போன்ற பிரச்சினைகள் இருந்தால் மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் வீக்கம் போன்ற தொந்தரவுகள் காணப்படலாம். இவற்றை நீக்கும் சக்தி இந்த பிரிஞ்சி இலைக்கு உண்டு. இதை எப்படி வீட்டில் பயன்படுத்துவது?

face-nose-throat

இரண்டு பிரிஞ்சி இலைகளை வீட்டில் எரிக்கும் பொழுது அதிலிருந்து வரும் புகையானது வீட்டை சுற்றியுள்ள அசுத்தக் காற்றை சுத்தமான காற்றாக மாற்றி தருகிறது. அது மட்டுமல்லாமல் அதனை நுகரும் நமக்கு மனநிலையில் இருக்கும் மாற்றத்தை சீர்செய்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும், சாந்தப்படுத்தவும் இந்த புகை நமக்கு உதவியாக இருக்கும். இதனுடைய வாசம் மூளையின் நரம்புகளை ரிலாக்ஸாக்கி நம்முடைய மனதை லேசாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

- Advertisement -

வீட்டிலிருக்கும் அசுத்த காற்றை சுத்தப்படுத்த அதிகம் காசு செலவு செய்து வாங்கக்கூடிய பொருட்களை விட இரண்டே இரண்டு சாதாரண பிரிஞ்சி இலையில் இருக்கும் ஆற்றலானது வியப்பிற்குரியது தான். பிரிஞ்சி இலையில் லினாலூல் என்னும் வேதிப்பொருள் மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதனால் இதன் சுவாசத்தை நாம் நுகரும் பொழுது ரிலாக்சாக உணர்வோம்.

bay-leafe

உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு அறையில் ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு சாம்பிராணி போடும் தூபக்கால் போன்ற ஏதாவது ஒரு பொருளில் நெருப்பை மூட்டி அதில் இரண்டு பிரிஞ்சி இலைகளை போட்டு எரித்து விடுங்கள். அதிலிருந்து வரும் புகையை அறை முழுவதும் பரவ செய்யுங்கள். அந்த அறையில் புகை முழுவதுமாக பரவும் வரை நீங்கள் வெளியே இருங்கள். புகை முழுவதும் படர்ந்த பின் உள்ளே சென்று அதன் புகையை சுவாசியுங்கள்.

bay-leaf-burn

இது போல் தொடர்ந்து ஆறு முறை செய்யுங்கள். அதன் பிறகு கதவை திறந்து மற்ற அறைகளுக்கும் அந்த புகையை பரவச் செய்யுங்கள். வீட்டில் இருக்கும் அசுத்தமான காற்று தூய்மை அடையும். இதனால் வீட்டில் எதிர் மறை சக்திகள் நீங்கி புத்துணர்வு பெறும். வீடு மட்டுமல்லாமல் நீங்களும் உங்களுடைய மன இறுக்கத்திலிருந்து தளர்ந்து விடுதலை பெறுவீர்கள். அன்றைய நாள் முழுவதும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். செய்து பார்த்து பயனடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
உடல் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், 3 நாட்களில் எலும்புகள் உறுதியாக மாறி விடும். இடுப்பு வலி, முதுகு வலி, காணாமல் போய்விடும். இதை மட்டும் 1 டம்ளர் குடிச்சுப் பாருங்க!

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.